10 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - கல்வி - இயல் ஐந்து - மணற்கேணி - வினா-விடை-வகைகள்-பொருள்கோள்

  Play Audio

1. வினா எத்தனை வகைப்படும்?

Answer: 6 வகைப்படும்

2. ஆறு வகை வினாக்கள் யாவை?

Answer: அறிவினா, அறியா வினா, ஐயவினா, கொளல் வினா, கொடை வினா, ஏவல் வினா

3. மாணவரிடம், "இந்தக் கவிதையின் பொருள் யாது? " என்று ஆசிரியர் கேட்டல் எவ்வகை வினா?

Answer: அறிவினா

4. ஆசிரியரிடம், "இந்தக் கவிதையின் பொருள் யாது? " என்று மாணவர் கேட்டால் எவ்வகை வினா?

Answer: அறியா வினா

5. " இச்செயலைச் செய்தது மங்கையா? மணிமேகலையா? " என வினாவுதல்?

Answer: ஐய வினா

6. 'என்னிடம் பாரதிதாசன் கவிதைகள் இரண்டு படிகள் உள்ளன. உன்னிடம் பாரதிதாசனின் கவிதைகள் இருக்கிறதா? ' என்று கொடுப்பதற்காக வினவுவதல்?

Answer: கொடை வினா

7. 'வீட்டில் தக்காளி இல்லை. நீ கடைக்குச் செல்கிறாயா? ' என்று அக்கா தம்பியிடம் வினவி வேலையை சொல்லுதல் எவ்வகை வினா?

Answer: ஏவல் வினா

8. "அறிவு அறியாமை ஐயுறல் கொளல் கோடை ஏவல் தரும் வினா ஆறும் இழுக்கார்" வினா வகைகள் பற்றி கூறும் நூல்?

Answer: நன்னூல்

9. சுட்டு மறை நேர் ஏவல் வினாதல் உற்றது உடைத்தல் உறுவது கூறல் என்று கூறும் நூல் எது?

Answer: நன்னூல்

1

10. விடை எத்தனை வகைப்படும்?

Answer: 8 வகைப்படும்

11. 8 வகையான விடைகள் எவை?

Answer: சுட்டு விடை, மறை விடை, நேர் விடை, ஏவல் விடை, வினா எதிர் வினாதல் விடை, உற்றது உரைத்தல் விடை, உறுவது கூறல் விடை, இனமொழி விடை

12. கடைத்தெரு எங்குள்ளது? என்ற வினாவிற்கு, 'வலப்பக்கத்தில் உள்ளது' எனக் கூறுவது?

Answer: சுட்டு விடை

13. 'கடைக்குப் போவாயா? ' என்ற கேள்விக்குப் 'போகமாட்டேன்' என மறுத்துக் கூறுவது?

Answer: மறை விடை

14. 'கடைக்குப் போவாயா? ' என்ற கேள்விக்குப் 'போவேன்' என்று உடன்பட்டுக் கூறுவது?

Answer: நேர் விடை

15. இது செய்வாயா? என்று வினவியபோது, 'நீயே செய்' என்று ஏவிக் கூறுவது?

Answer: ஏவல் விடை

16. 'என்னுடன் ஊருக்கு வருவாயா? ' என்ற வினாவிற்கு 'வராமல் இருப்பேனா' என்று கூறுவது?

Answer: வினா எதிர் வினாதல் விடை

17. 'நீ விளையாடவில்லையா? ' என்ற வினாவிற்குக் 'கால் வலிக்கிறது' என்று குற்றத்தை உரைப்பது?

Answer: உற்றது உரைத்தல் விடை

18. நீ விளையாடவில்லையா? என்ற வினாவிற்கு 'கால் வலிக்கும்' என்று உருவதை உரைப்பது?

Answer: உறுவது கூறல் விடை

19. 'உனக்கு கதை எழுதத் தெரியுமா? ' என்ற வினாவிற்கு 'கட்டுரை எழுதத் தெரியும்' என்று கூறுவது?

Answer: இனமொழி விடை

2

20. வெளிப்படை விடைகள் எவை?

Answer: சுட்டு விடை, மறைவிடை, நேர் விடை

21. குறிப்பு விடைகள் எவை?

Answer: ஏவல் விடை, வினா எதிர் வினாதல் விடை, உருவதுகூறல் விடை, இனமொழி விடை

22. செய்யுளில் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு சேர்த்தோ மாற்றியோ பொருள் கொள்ளும் முறைக்குப் ----- என்று பெயர்?

Answer: பொருள்கோள்

23. பொருள்கோள் எத்தனை வகைப்படும்?

Answer: 8 வகைப்படும்

24. பாடலின் தொடக்கம் முதல் முடிவுவரை ஆற்றுநீரின் போக்கைபோல நேராகவே பொருள் கொள்ளுமாறு அமைவது ----- பொருள்கோள் எனப்படும்?

Answer: ஆற்றுநீர்

25. ஒரு செய்யுளில் சொற்கள் முறை பிறழாமல் நிரல்நிறையாக அமைவது வருவது ----- பொருள்கோள் ஆகும்?

Answer: நிரல்நிறை

26. நிரல்நிறை பொருள்கோள் எத்தனை வகைப்படும்?

Answer: இரண்டு

27. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது - என்ற குரலில் பயின்று வரும் பொருள்கோள் எது?

Answer: முறை நிரல்நிறைப் பொருள்கோள்

28. செய்யுளில் எழுவாயாக அமையும் பெயர்ச்சொற்களை அல்லது வினைச்சொற்களை வரிசையாக நிறுத்தி, அவை ஏற்கும் பயனிலையாக அவ்வரிசைப்படியே நிறுத்தி பொருள் கொள்ளுதல் ----- எனப்படும்?

Answer: முறை நிரல்நிறைப் பொருள்கோள்

29. செய்யுளில் எழுவாயாக வரிசைப்படுத்தி அவை ஏற்கும் பயநிலைகளை எதிரெதிராக கொன்று பொருள் கொள்ளுதல் ----- ஆகும்?

Answer: எதிர் நிரல்நிறைப் பொருள்கோள்

3

30. 'விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனைய யவர்' என்ற குரளில் பயின்று வரும் பொருள்கோள் எது?

Answer: எதிர் நிரல்நிறைப் பொருள்கோள்

31. ஒரு செய்யுளில் பல அடிகளில் சிதறிக்கிடக்கும் சொற்களை பொருளுக்கு ஏற்றவாறு ஒன்றோடொன்று கூட்டிப் பொருள் கொள்வது ----- ஆகும்?

Answer: கொண்டுகூட்டுப் பொருள்கோள்

32. "ஆலத்துமேல குவளை குளத்துல வாலின் நெடிய குரங்கு' (கொண்டுகூட்டுப் பொருள்கோள்) என்ற பாடல்வரி யாருடைய உரையில் காணப்படுகிறது?

Answer: மயிலைநாதர் உரை

33. யாப்படி பலவினுங் கோப்புடை மொழிகளை ஏற்புழி இசைப்பது கொண்டு கூட்டே என்ற பாடல் வரி இடம் பெற்ற நூல் எது?

Answer: நன்னூல்

34. மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம்வைத்து என்னும் சின்னமனூர் செப்பேடுக் குறிப்பு உணர்த்தும் செய்தி?

Answer: சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது

35. அருந்துணை என்பதைப் பிரித்தால் ----- ?

Answer: அருமை + துணை

36. "இங்கு நகரப் பேருந்து நிற்குமா? " என்று வழிப்போக்கர் கேட்டது ----- வினா. "அதோ, அங்கே நிற்கும்" என்று மற்றொருவர் கூறியது ----- விடை?

Answer: அறியாவினா, சுட்டு விடை

37. "அருளைப் பெருக்கி அறிவை திருத்தி மருளை அகற்றி மதிக்கும் தெருளை" - என்று இவ்வடிகள் குறிப்பிடுவது எது?

Answer: கல்வி

38. இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர் ----- இடைக்காடனாரிடம் அன்பு வைத்தவர்?

Answer: மன்னன், இறைவன்

39. "வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு" என்ற வரியைக் கூறியவர் யார்?

Answer: பாரதியார்

4

40. "நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்" என்ற வரியை கூறியவர் யார்?

Answer: பாரதியார்

41. சிறந்த சிறுகதை பதின்மூன்று என்ற நூலின் ஆசிரியர் யார்?

Answer: தமிழில் வல்லிக்கண்ணன்

42. குட்டி இளவரசன் என்ற நூலின் ஆசிரியர் யார்?

Answer: தமிழில் வெ. ஸ்ரீராம்

43. ஆசிரியரின் டைரி என்ற நூலின் ஆசிரியர் யார்?

Answer: தமிழில் எம். பி. அகிலா

44. Emblem ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

Answer: சின்னம்

45. Thesis ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

Answer: ஆய்வோடு

46. Intellectual ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

Answer: அறிவாளர்

47. Symbolism ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

Answer: குறியீட்டியல்

5

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்