10 ஆம் வகுப்பு - முதல் பருவம் - இயற்கை-சுற்றுச்சூழல் - இயல் இரண்டு - உயிரின்-ஓசை - முல்லைப்பாட்டு

  Play Audio

1. முல்லைப்பாட்டை படைத்தவர் யார்?

Answer: நப்பூதனார் (காவிரிப்பூம்பட்டினம் பொன்வணிகனார் மகன்)

2. "சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின் உறுதுயர் அலமரல், நோக்கி ஆய்மகள்" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல்?

Answer: முல்லைப்பாட்டு

3. "நன்னர் நன்மொழி கேட்டனம் " - என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல்?

Answer: முல்லைப்பாட்டு

4. முல்லைப்பாட்டு எத்தனை அடிகளை உடையது?

Answer: 103

5. முல்லைப்பாட்டு எதனால் இயற்றப்பட்டது?

Answer: ஆசிரியப்பா

6. பத்துப்பாட்டில் குறைந்த அடிகளை உடைய நூல் எது?

Answer: முல்லைப்பாட்டு

7. நனந்தலை உலகம் என்பதன் பொருள் என்ன?

Answer: அகன்ற உலகம்

8. நேமி என்பதன் பொருள் என்ன?

Answer: சக்கரம்

9. கோடு என்பதன் பொருள் என்ன?

Answer: மலை

10. கொடுஞ்செலவு என்பதன் பொருள் என்ன?

Answer: விரைவாக செல்லுதல்

11. நறுவீ என்பதன் பொருள் என்ன?

Answer: நறுமணமுடைய மலர்கள்

12. விரிச்சி என்பதன் பொருள் என்ன?

Answer: நற்சொல்

1

13. சுவல் என்பதன் பொருள் என்ன?

Answer: தோள்

14. தூஉய் என்பதன் பொருள் என்ன?

Answer: தூவி

15. மூதூர் என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?

Answer: பண்புத்தொகை

16. உறுதுயர் என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?

Answer: வினைத்தொகை

17. கைதொழுது என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?

Answer: மூன்றாம் வேற்றுமைத் தொகை

18. தடக்கை என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?

Answer: உரிச்சொல் தொடர்

19. காடும் காடு சார்ந்த இடமும் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer: முல்லை

20. முல்லை நிலத்தில் பொழுதுகள் யாவை?

Answer: கார்காலம் (ஆவணி, புரட்டாசி)

21. முல்லை நிலத்திற்கு சிறுபொழுது எவை?

Answer: மாலை

22. முல்லை நிலத்தில் காணப்படும் நீர் வகை?

Answer: குறுஞ்சுனை நீர், காட்டாறு

23. முல்லை நிலத்தில் காணப்படும் மரம் எது?

Answer: கொன்றை, காயா, குருந்தம்

24. முல்லை நிலத்தில் காணப்படும் பூ வகை எது?

Answer: முல்லை, பிடவும், தோன்றிப்பூ

25. முல்லை நிலத்தில் உரிப்பொருள் என்ன?

Answer: இருத்தலும் இருத்தல் நிமித்தமும் (காத்திருத்தல்)

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்