10 ஆம் வகுப்பு - முதல் பருவம் - மொழி - இயல் ஒன்று - அமுதஊற்று - எழுத்து-சொல்

  Play Audio

1. சார்பெழுத்துக்கள் மொத்தம் எத்தனை?

Answer: 10

2. அளபெடுத்தல் என்றால் என்ன?

Answer: நீண்டு ஒலித்தல்

3. உயிரளபெடை எத்தனை வகைப்படும்?

Answer: 3 வகைப்படும்

4. மூன்று வகையான உயிரளபெடை யாவை?

Answer: செய்யுளிசை அளபெடை, இன்னிசை அளபெடை, சொல்லிசை அளபெடை

5. செய்யுளிசை அளபெடையின் மற்றோரு பெயர் என்ன?

Answer: இசைநிறை அளபெடை

6. செய்யுளில் ஓசை குறையும்போது அதனை நிறைவு செய்ய, நெட்டெழுத்துக்கள் அளபெடுதலைச்?

Answer: செய்யுளிசை அளபெடை என்போம்

7. செய்யுளிசை அளப்படைக்கு எடுத்துக்காட்டு?

Answer: ஓஓதல், உறாஅர்க்கு, படாஅ

8. நசை என்பதன் பொருள் என்ன?

Answer: விருப்பம்

9. செய்யுளிசை ஓசை குறையாத இடத்திலும் இனிய ஓசைக்காக குறில் நெடிலாகி அளபெடுப்பது ஆகும்?

Answer: இன்னிசை அளபெடை

10. இன்னிசை அளபெடைக்கு எடுத்துக்காட்டு?

Answer: கொடுப்பதூஉம், எடுப்பதூஉம்

1

11. செய்யுளில் ஒரு பெயர்ச்சொல் எச்ச செல்லகாத் திரிந்து அளபெடுப்பது எந்த அளபெடையில்?

Answer: சொல்லிசை அளபெடை

12. சொல்லிசை அளபெடைக்கு எடுத்துக்காட்டு?

Answer: உரனசைஇ, வரனசைஇ

13. ஒற்றளபெடையில் எத்தனை எழுத்துக்கள் அளபெடுக்கும்?

Answer: 10 எழுத்துக்கள்

14. ஒற்றளபெடையில் அளபெடுக்கும் 11எழுத்துக்கள் யாவை?

Answer: ங், ஞ, ண், ந், ம், ன், வ், ய், ல், ள் மற்றும் ஃ

15. ஓர் எழுத்து தனித்தோ, பல எழுத்துக்கள் சேர்ந்தோ பொருள் தரும் வகையில் அமைவது?

Answer: சொல் ஆகும்

16. மூவகை மொழி யாது?

Answer: தமிழ் மொழி, தொடர் மொழி, பொது மொழி

17. ஒரு சொல் தனித்து நின்று பொருள் தருமாயின் அது?

Answer: தனி மொழி

18. கண், படி தனித்து நின்று பொருள் தருமாயின் அது?

Answer: பாகப்பதம்

19. கண்ணன், படிதான் தனித்து நின்று பொருள் தருமயின் அது?

Answer: பகுபதம்

20. இரண்டு அல்லது அதற்க்கு மேற்பட்ட தனிமொழிகள் தொடர்ந்து வந்து பொருள் தருவது?

Answer: தொடர்மொழி ஆகும்

2

21. ஒரு சொல் தனித்து நின்று ஒரு பொருளையும் அச்சொல்லே பிரிந்து நின்று வேறு பொருளையும் தந்து தனிமொழிக்கும், தொடர் மொழிக்கும் பொதுவாய் அமைவது?

Answer: பொதுமொழி ஆகும்

22. ஒரு வினை அல்லது செயலைக் குறிக்கும் பெயரானது எண், இடம், காலம், பால் ஆகியவற்றை குறிப்பாகவே வெளிப்படையாகவே உணர்த்தாமல் வருவது?

Answer: தொழிற்பெயர்

23. தொழிற்பெயருக்கு உதாரணம் தருக?

Answer: ஈதல், நடத்தல்

24. வினையடியுடன் விகுதி சேர்வதால் உருவாகும் தொழிற்பெயர்?

Answer: விகுதி பெற்ற தொழிற்பெயர் ஆகும்

25. விகுதி பெற்ற தொழிற்பெயருக்கு உதாரணம்?

Answer: வினையடி - நட, வாழ், ஆள் விகுதி - தல், கை, அல், தொழிற்பெயர் - நடத்தல், வாழ்க்கை, ஆளல்

26. ஒரே வினையடி பல விகுதிகளையும் ஏற்கும் எடுத்துக்காட்டு?

Answer: நட என்பது வினையடி (நடை, நடத்தை, நடத்தல்)

27. எதிர்மறைப் பொருளில் வருவது?

Answer: எதிர்மறை தொழிற்பெயர் ஆகும்

28. எடுத்துக்காட்டு?

Answer: நடவாமை, கொல்லாமை

29. விகுதி பெறாமல் வினைப் பகுதியே தொழிற்பெயராதல்?

Answer: முதனிலைத் தொழிற்பெயர் ஆகும்

30. எடுத்துக்காட்டு?

Answer: தட்டு, உரை, அடி, முறையே (தட்டுதல், உரைத்தல், அடித்தல்) என பொருள்படும்

3

31. விகுதி பெறாமல் முதனிலை திரிந்து வரும் தொழிற்பெயர்?

Answer: முதனிலை திரிந்த தொழிற்பெயர் ஆகும்

32. தொழிற்பெயர் - கெடுதல், சுடுதல், முதனிலைத் தொழிபெயர் - கெடு, சுடு, முதநிலைத் திரிந்த தொழிற்பெயர் - கேடு, சூடு ஒரு வினைமுற்று பெயரின் தன்மையை அடைந்து வேற்றுமை உருபு ஏற்றும் ஏற்காமலும் வேறொரு பயனிலையைக் கொண்டு முடிவது?

Answer: வினையாலணையும் பெயர் ஆகும்

33. எகா? - வந்தவர் அவர்தான் பொறுத்தார் பூமியாள்வார் தொழிற்பெயருக்கும் வினையாலனையும் பெயருக்கும் உள்ள வேறுபாடு?

Answer: தொழிற்பெயர் - வினை, பெயர்த் தன்மையாகி வினையையே உணர்த்தி நிற்கும், காலம் காட்டாது, படர்க்கைக்கே உரியது, எகா - பாடுதல், படித்தல்

34. வினையாலணையும் பெயர்?

Answer: தொழிலைச் செய்யும் கருத்தாவைக் குறிக்கும், காலம் காட்டும், மூவிடத்திற்கும் உரியது, எகா - பாடியவன், படித்தவர்

35. மொத்த வணிகலன் என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது?

Answer: வணிகக் கப்பல்கலும், ஐம்பெரும் காப்பியங்களும்

36. காய்ந்த இலையும் காய்ந்த தொகையும் நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது?

Answer: சருகும் சண்டும்

4

37. எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்?

Answer: எம் + தமிழ் + நா

38. கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது - இத்தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயர், வினையாலனையும் பெயரும் முறையே?

Answer: பாடல்; கேட்டவர்

39. வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை?

Answer: மணி வகை

40. மரமது மரத்தில் ஏறி என்ற பாடலின் ஆசிரியர் யார்?

Answer: சுந்தர கவிராயர்

41. "தேனினும் ஊறிய செந்தமிழின் மொழியே என்று தமிழைச் சிறப்பித்தவர் யார்?

Answer: கா. நமசிவாயர்

42. vowel என்பதன் தமிழ் சொல்?

Answer: உயிரெழுத்து

43. consonant என்பதன் தமிழ் சொல்?

Answer: மெய்யெழுத்து

44. homograph என்பதன் தமிழ் சொல்?

Answer: ஒப்பெழுத்து

45. monolingual என்பதன் தமிழ் சொல்?

Answer: ஒரு மொழி

46. conversation என்பதன் தமிழ் சொல்?

Answer: உரையாடல்

47. discussion என்பதன் தமிழ் சொல்?

Answer: கலந்துரையாடல்

48. நாம் என் தமிழ் கற்க வேண்டும் என்ற நூலின் ஆசிரியர் யார்? ?

Answer: முனைவர் சேதுமணி மணியன்

49. தவறின்றித் தமிழ் எழுதுவோம் என்ற நூலின் ஆசிரியர் யார்? ?

Answer: மா. நன்னன்

50. பச்சை நிழல் என்ற நூலின் ஆசிரியர் யார்? ?

Answer: உதயசங்கர்

5

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்