10 ஆம் வகுப்பு - முதல் பருவம் - பண்பாடு - இயல் மூன்று - கூட்டாஞ்சோறு - காசிக்காண்டம்

  Play Audio

1. காசிக்காண்டம் என்ற நூலை இயற்றியவர் யார்?

Answer: அதிவீரராம பாண்டியர்

2. விருந்தோம்பல் ஒழுக்கங்கள் எத்தனை?

Answer: ஒன்பது

3. ஒன்பது விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்கங்களைக் கூறியவர் யார்?

Answer: அதிவீரராம பாண்டியர்

4. அருகுற என்பதன் பொருள் என்ன?

Answer: அருகில்

5. முகமன் என்பதன் பொருள் என்ன?

Answer: ஒருவரை நலம் வினவிக் கூறும் விருந்தோம்பல் சொற்கள்

6. நன்மொழி என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?

Answer: பண்புத்தொகை

7. வியத்தல், நோக்கல், எழுதுதல், உரைத்தல், செப்பல், இருத்தல், வழங்கல் என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?

Answer: தொழிற்பெயர்

8. ஒப்புடன் முகம் மலர்ந்தே உபசரித்து உண்மைபேசி என்ற வரி இடம் பெற்ற நூல் எது?

Answer: விவேகசிந்தாமணி

9. காசி நகரத்தின் பெருமைகளைக் கூறும் நூல் எது?

Answer: காசிக்காண்டம்

10. காசிக்காண்டம் எதை விளக்குவதாக அமைந்துள்ளது?

Answer: துறவு, இல்லறம், பெண்களுக்குரிய பண்புகள், வாழ்வியல் நெறிகள், மறுவாழ்வில் அடையும் நன்மைகள்

11. முத்துக் குளிக்கும் கொற்கையின் அரசர் யார்?

Answer: அதிவீரராம பாண்டியன்

1

12. அதிவீரராம பாண்டியரின் மற்றொரு நூல் எது?

Answer: வெற்றி வேற்கை

13. வெற்றி வேற்கை என்ன பெயரால் அழைக்கப்படுகிறது?

Answer: நறுந்தொகை

14. சீவலமாறன் என்று அழைக்கப்படுபவர் யார்?

Answer: அதிவீரராம பாண்டியன்

15. நைடதம், லிங்கபுராணம், வாயு சம்கிதை, திருக்கருவை அந்தாதி, கூர்ம புராணம் போன்ற நூல்கள் எழுதியவர்?

Answer: அதிவீரராம பாண்டியன்

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்