10 ஆம் வகுப்பு - முதல் பருவம் - பண்பாடு - இயல் மூன்று - கூட்டாஞ்சோறு - மலைபடுகடாம்

  Play Audio

1. ஊர் ஊராகச் சென்று தம் கலைத்திறனால் மக்களை மகிழ்வித்தவர்கள் யாவர்?

Answer: பாணர், கூத்தர், விறலியர்

2. "அன்று அவண் அசைஇ அல்சேர்ந்து அல்கி கன்று ஏரி ஒள்இணர் கட்டும்பொழுது மலைந்து "என்ற பாடல்வரி இடம் பெற்ற நூல்?

Answer: மலைபடுகடாம்

3. சிவந்த பூக்களை கொண்ட மரம் எது?

Answer: அசோகமரம்

4. அசைஇ என்பதன் பொருள் என்ன?

Answer: இளைப்பாறி

5. கடும்பு என்பதன் பொருள் என்ன?

Answer: சுற்றம்

6. ஆரி என்பதன் பொருள் என்ன?

Answer: அருமை

7. அல்கி என்பதன் பொருள் என்ன?

Answer: தங்கி

8. வயிரியம் என்பதன் பொருள் என்ன?

Answer: கூத்தர்

9. படுகர் என்பதன் பொருள் என்ன?

Answer: பள்ளம்

10. வேவை என்பதன் பொருள் என்ன?

Answer: வெந்தது

11. இறடி என்பதன் பொருள் என்ன?

Answer: திணை

1

12. நரலும் என்பதன் பொருள் என்ன?

Answer: ஒலிக்கும்

13. பொம்மல் என்பதன் பொருள் என்ன?

Answer: சோறு

14. அசைஇ, கெழிஇ என்பதன் இலக்கணக்குறிப்பு?

Answer: சொல்லிசை அளபெடை

15. பரூஉக், குரூஉக்கன் என்பதன் இலக்கணக்குறிப்பு?

Answer: சொல்லிசை அளபெடை

16. மலைபடுகடாம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer: கூத்தாற்றுப்படை

17. மலைப்படுகடாமில் எந்த விலங்கை உருவம் செய்யப்பட்டுள்ளது?

Answer: மலையை யானைக்காக உருவகம்

18. மலையை யானையாக உருவகம் செய்து மழையில் எழும் பலவகை ஓசைகளை அதன் மதம் என்று விளக்குவதால் ----- எனப் பெயர் பெற்றது?

Answer: மலைபடுகடாம்

19. மலைபடுகடாம் என்ற நூலை இயற்றியவர் யார்?

Answer: பெருங்கெளசிகனார்

20. மலைப்படுகடாம் என்ற நூலின் பாட்டுடைத் தலைவன் யார்?

Answer: நன்னன் என்னும் குறுநில மன்னன்

21. மலைபடுகடாம் நூலில் உள்ள மொத்த வரிகள் யாவை?

Answer: 583

22. கறுப்பு நிறக் கரிசல் மண்ணின் இயற்கை தங்கம் எது?

Answer: கம்பு

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்