10 ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம் - அறம்-தத்துவம்-சிந்தனை - இயல் எட்டு - பெருவழி - இராமானுசர் (நாடகம்)

  Play Audio

1. இராமானுசர் பிறவிப்பயன் அடையும் மந்திரத்தை யாருக்கு கூறுகிறார்?

Answer: பொதுமக்கள்

2. பூரணரின் மகன் யார்?

Answer: சௌம்ய நாராயணன்

3. பூரணரின் தன் மகனை யாரிடம் அடைக்கலம் கொடுத்தார்?

Answer: இராமானுசரிடம்

4. கூர்வேல் குவைஇய மொய்ம்பின் தேர்வண் பாரிதண் பறம்பு நாடே - என்ற புறநானூற்று வரியில் சிறப்பிக்கப்படும் ஊர் எது?

Answer: பிரான்மலை, சிவகங்கை மாவட்டம்

5. நாளுக்கு ஒருமுறை மலரும் மலர் எது?

Answer: சண்பகம்

6. ஆண்டுக்கு ஒருமுறை மலரும் மலர் எது?

Answer: பிரம்ம கமலம்

7. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் மலர் எது?

Answer: குறிஞ்சி

8. தலைமுறைக்கு ஒருமுறை மலரும் மலர் எது?

Answer: மூங்கில்

9. பூரணர் கற்ற மந்திர மறை பொருள் யார் மூலம் அவருக்கு கிடைத்தது?

Answer: திருவரங்கன் திருவருளால்

10. பூரணர் யாருக்கு திருமந்திர மறைபொருளை கூறுகிறார்?

Answer: இராமானுசர், முதலியாண்டான், கூரேசர்

11. பூரணர் மூவரிடம் கூறிய மந்திரத்தை யாருக்கு உரைக்கக்கூடாது. அப்படி கூறினால் என்னவாகும்?

Answer: நரகம் கிடைக்கும்

12. பூரணர் யாருடைய மந்திரத்தைக் கூறுகிறார்?

Answer: நாராயணன்

1

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்