10 ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம் - அறம்-தத்துவம்-சிந்தனை - இயல் எட்டு - பெருவழி - காலக்கணிதம்

  Play Audio

1. "கவிஞன் யானோர் காலக்கணிதம்" என்ற பாடலின் ஆசிரியர் யார்?

Answer: கண்ணதாசன்

2. அறம் என்னும் கதிர் அறுப்பவன் கவிஞன் என்றவர் யார்?

Answer: கண்ணதாசன்

3. காலக்கணிதம் என்ற கவிதை தொகுப்பு யாருடைய கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது?

Answer: கண்ணதாசன் கவிதை தொகுப்பு

4. கண்ணதாசன் இயற்பெயர் என்ன?

Answer: முத்தையா

5. கண்ணதாசன் எந்த ஊரில் பிறந்தவர்?

Answer: சிறுகூடல்பட்டி, சிவகங்கை மாவட்டம்

6. கண்ணதாசனின் பெற்றோர் யாவர்?

Answer: சாத்தப்பன், விசாலாட்சி

7. கண்ணதாசனின் முதல் பாடல் எது?

Answer: கலங்காதிரு மனமே, 1949 ஆம் ஆண்டு

8. திரைப்படப் பாடல்கள் வழியாக எளிய முறையில் மெய்யியலை மக்களிடையே கொண்டு சேர்த்தவர் யார்?

Answer: கண்ணதாசன்

9. கண்ணதாசனின் எந்த நூல் சாகித்திய அகாதெமி விருது பெற்றது?

Answer: சேரமான் காதலி

10. தமிழக அரசின் அரசவைக் கவிஞராகவும் சிறப்பிக்கப்பட்டவர் யார்?

Answer: கண்ணதாசன்

11. "நதிவெள்ளம் காய்ந்து விட்டால் நதிசெய்த குற்றம் இல்லை" என்ற பாடல்வரியை கூறியவர் யார்?

Answer: கண்ணதாசன்

12. "நதியின் பிழையன்று நறும்புனலின்மை அன்றே" என்ற பாடல்வரியை கூறியவர் யார்?

Answer: கம்பன்

1

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்