11 ஆம் வகுப்பு - இலக்கணம் - நாகரிகம்-தொழில்-வணிகம் - இயல் ஆறு - நாளெல்லாம்-வினைசெய் - பா-இயற்றப்-பழகாலம்

  Play Audio

1. செய்யுளின் உறுப்புகள் எவை?

Answer: எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை

2. பாக்களின் வகைகள், ஓசைகள், விதிமுறைகள் பற்றி கூறும் நூல்?

Answer: யாப்பெருங்கலக்காரிகை

3. தமிழ் செய்யுள் வடிவங்கள் பெரும்பாலும் ----- அடிப்படையாக கொண்டவை?

Answer: இசையை

4. பா எத்தனை வகைப்படும்?

Answer: 4

5. ஓசை: வெண்பா -

Answer: செப்பலோசை

6. ஆசிரியப்பா -

Answer: அகவலோசை

7. கலிப்பா -

Answer: துள்ளலோசை

8. வஞ்சிப்பா -

Answer: தூங்கலோசை

9. சீர்: குறளடி -

Answer: இரண்டு சீர்

10. சிந்தடி -

Answer: மூன்றடி சீர்

1

11. நேரீற்று ஈரசைசீர்கள் எவை?

Answer: தேமா, புளிமா

12. நிறையீற்று ஈரசைசீர்கள் எவை?

Answer: கருவிளம், கூவிளம்

13. ஆசிரிய உரிச்சீர் எத்தனை வகைப்படும்?

Answer: 4

14. அசை எத்தனை வகைப்படும்?

Answer: 2 வகை

15. நேரசை: - குறில் தனித்து வருதல் -

Answer: க

16. குறில் ஒற்றுடன் வருதல் -

Answer: கண்

17. நெடில் தனித்து வருதல் -

Answer: பா

18. நெடில் சாற்றுடன் வருதல் -

Answer: பார்

19. நிறையசை: - இருகுறில் இணைந்து வருதல் -

Answer: அக

20. இருகுறில் இணைந்து ஒற்றுடன் வருதல் -

Answer: அகம்

2

21. குறில்நெடில் இணைந்து வருதல் -

Answer: கலா

22. குறில்நெடில் இணைந்து ஒற்றுடன் வருதல் -

Answer: கலாம்

23. சீரும் தளையும் : - நேர் நேர் -

Answer: தேமா

24. நிரை நேர் -

Answer: புளிமா

25. நிரை நிரை -

Answer: கருவிளம்

26. நேர் நிரை -

Answer: கூவிளம்

27. நேர் நேர் நேர் -

Answer: தேமாங்காய்

28. நிரை நேர் நேர் -

Answer: புளிமாங்காய்

29. நிரை நிரை நேர் -

Answer: கருவிளங்காய்

30. நேர் நிரை நேர் -

Answer: கூவிளங்காய்

3

31. மாமுன் நேர் ஒன்றி வருதல் ----- எனப்படும்?

Answer: நேரொன்றாசிரியத்தளை

32. விளமுன் நிரை ஒன்றி வருதல் ----- எனப்படும்?

Answer: நிரையொன்றாசிரியத்தளை

33. இறுதிக்கு அடிக்கு முந்தைய அடி மூன்று சீர்களை பெற்று வருவது?

Answer: நேரிசை ஆசிரியப்பா

34. முதலடியும் இறுதியடியும் நான்கு சீர்களை பெற்று இடையடிகள் இணை இணையாக இரண்டு அல்லது மூன்று சீர்களை பெற்று வருவது ----- பா ஆகும்?

Answer: இணைக்குறள் ஆசிரியப்பா

35. எல்லா சீர்களும் நான்கு அடிகளை பெற்று வருவது ----- பா ஆகும்?

Answer: நிலைமண்டில ஆசிரியப்பா

36. பாடலில் உள்ள அடிகளை மாற்றி மாற்றி அமைத்தாலும் ஓசையும் பொருளும் மாறாது அமைவது ----- ஆகும்?

Answer: அடிமறிமண்டில ஆசிரியப்பா

37. பச்சை மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண் என்ற அடிகளை இயற்றியவர் யார்?

Answer: கண்ணதாசன்

4

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்