11 ஆம் வகுப்பு - செய்யுள் - நாகரிகம்-தொழில்-வணிகம் - இயல் ஆறு - நாளெல்லாம்-வினைசெய் - அகநானூறு

  Play Audio

1. சொல்ல வந்த கருத்தை 'உள்ளுறை'வழியாக உரைப்பது ----- பாடல்களின் சிறப்பு?

Answer: அகநானூறு

2. தலைவியை தலைவன் சந்திக்க வேண்டிய குறியிடத்தை குறிப்பை பொதிந்து வெளியிடுவது ----- பொறுப்பு?

Answer: தோழியின்

3. "பெருங்கடல் முகந்த இருங்கிளை கொண்மு! இருண்டு உயர் விசும்பின் வலனேர்பு வளைஇப்" என்ற அகநானூறு பாடலை பாடியவர்?

Answer: வீரை வெளியன் தித்தனார்

4. சொல்லும் பொருளும்: கொண்மூ -

Answer: மேகம்

5. சமம் -

Answer: போர்

6. விசும்பு -

Answer: வானம்

7. அரவம் -

Answer: ஆராவாரம்

8. ஆயம் -

Answer: சுற்றம்

9. தழலை, தட்டை -

Answer: பறவைகளை ஓட்டும் கருவிகள்

10. இலக்கணக்குறிப்பு: அருஞ்சமம் -

Answer: பண்புத்தொகை

1

11. வளைஇ, அசைஇ -

Answer: சொல்லிசை அளபெடைகள்

12. எரிவாள் -

Answer: வினைத்தொகை

13. அறன், திறன் -

Answer: ஈற்றுப் போலி

14. பிழையா -

Answer: ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்

15. அகநானூறு பாடலை பாடிய புலவர்களின் எண்ணிக்கை?

Answer: 145

16. அகநானூறு எத்தனை வகையாக பிரிக்கப்பட்டு உள்ளது?

Answer: மூன்று வகை

17. நெடுந்தொகை நானூறு என அழைக்கப்படும் நூல்?

Answer: அகநானூறு

2

18. பிரபஞ்சன் எந்த ஊரை சார்ந்தவன்?

Answer: புதுச்சேரி

19. பிரபஞ்சனின் இயற்பெயர் என்ன?

Answer: வைத்தியலிங்கம்

20. பிரபஞ்சனின் 'வானம் வசப்படும்' என்ற வரலாற்று புதினம் சாகித்திய அகாதமி விருது பெற்ற ஆண்டு?

Answer: 1995

21. பிரபஞ்சனின் படைப்புகள் எந்த எந்த மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன?

Answer: தெலுங்கு, கன்னடம், இந்தி, பிரெஞ்சு, ஆங்கிலம், ஜெர்மன்

22. "இந்த உலகமே ஒரு நாடக மேடை அதில் அணைத்து ஆண்களும் பெண்களும் வெறும் நடிகர்களே" என்று கூறியவர்?

Answer: ஷேக்ஸ்பியர்

23. பிம்பம் என்ற சிறுகதையை எழுதியவர் யார்?

Answer: பிரபஞ்சன்

3

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்