11 ஆம் வகுப்பு - உரைநடை - கலை-அழகியல்-புதுமைகள்- - இயல் ஏழு - பல்கலை-நிறுவு - காலத்தை-வென்ற-கலை

  Play Audio

1. தஞ்சை பெரிய கோவிலின் உயர்ந்த கோபுரம் எது?

Answer: கேரளாந்தகன் கோபுரம்

2. இராசராசசோழன் சேரநாட்டை வெற்றிக்கொண்டதன் ஆண்டு?

Answer: 988

3. இராசராசசோழன் சேரநாட்டை வெற்றிகொண்டதன் நினைவாக கட்டப்பட்ட கோபுரம் எது?

Answer: கேரளாந்தகன்

4. தஞ்சை பெரிய கோவிலில் எத்தனை வாயில்கள் உள்ளன?

Answer: 2

5. கோபுரம் என்பது எதன் மேல் அமைக்கப்படுகிறது?

Answer: வாயில்கள்

6. அகநாழிகையின் மேல் அமைக்கப்படுகிறது?

Answer: விமானம்

7. இரண்டு நுழைவாயில் கோபுரங்கள் என்பது ----- தனிச்சிறப்பு ஆகும்?

Answer: பிற்கால சோழர்கள்

8. இந்தியாவில் உள்ள கற்றளிக் கோவில்களில் பெரியது மற்றும் உயரமான கோவில் எது?

Answer: தஞ்சை பெரிய கோவில்

9. இராசராச சோழன் எத்தனை ஆண்டுகளில் தஞ்சை பெரிய கோவிலை கட்டி முடித்தார்?

Answer: ஆறு ஆண்டுகள்

10. அகநாழினை என்பது ----- என்றும் அழைக்கப்படுகிறது?

Answer: கருவறை

1

11. 'தட்சிண மேரு' என்று இராசராசசோழனால் அழைக்கப்பட்ட கோவில் எது?

Answer: தஞ்சை பெரிய கோவில்

12. தஞ்சை பெரியகோவிலின் விமானத்தின் உயரம்?

Answer: 216 உயரம்

13. தஞ்சை பெரியக்கோவிலின் கருவறை விமானம் எத்தனை தளங்களை உடையது?

Answer: 13 தளங்கள்

14. செங்கற்களை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி கட்டுவதுபோல, கருங்கற்களை அடுக்கி கட்டுவதற்கு ----- என்று பெயர்?

Answer: கற்றளி

15. ஏழாம் நூற்றாண்டில் கருங்கற்களை அடுக்கி கட்டும் கற்றளிக்கோவில் முறை எந்த மன்னன் உருவாக்கிய வடிவம் ஆகும்?

Answer: இரண்டாம் நரசிம்மவர்மன்

16. தமிழகத்தில் கற்றளி கோவில் காணப்படும் இடங்கள்?

Answer: மகாபலிபுரம் கடற்கரை கோவில், காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில், பனைமலை கோவில்

17. தொடக்கத்தில் மண்ணால் கட்டி, மேலே மரத்தால் சட்டகமிட்டுக்கட்டப்பட்ட கோவில் எது?

Answer: தில்லை கோவில், குற்றாலநாதர் கோவில்

18. செங்கற்களை கொண்ட சோழன் செங்கணான் 78 கோவில்களை கட்டியிருப்பதாக கூறியவர் யார்?

Answer: திருநாவுக்கரசர்

19. செங்கல், சுண்ணம், மரம், உலோகம் முதலியவை இல்லாமல் பிரம ஈசுவர விஷ்ணுக்களுக்கு குடைவரைக் கோவில்களை யார் அமைத்ததாக மண்டகப்பட்டு கல்வெட்டு கூறுகிறது?

Answer: முதலாம் மகேந்திரவர்ம பல்லவன்

20. விசித்திர சித்தன் என அழைக்கப்படுபவர் யார்?

Answer: முதலாம் மகேந்திரவர்ம பல்லவன்

2

21. காஞ்சி கைலாசநாதர் கோவிலை கட்டியவர் யார்?

Answer: இராஜசிம்மன்

22. இராஜசிம்மேச்சுரம் என அழைக்கப்படும் கோவில் எது?

Answer: காஞ்சி கைலாசநாதர்

23. கட்டடக்கலை என்பது உறைந்து போன இசை என்றவர் யார்?

Answer: பிரடிரிகா வொன்ஸ்லீவிங்

24. இந்திய கட்டட கலைப்பாணி மூன்று வகை உண்டு அது?

Answer: நாகரம், வேசரம், திராவிடம்

25. தஞ்சை கோவில் எண்பட்டை வடிவில் கட்டப்பட்ட ----- கலைப்பாணியாகும்?

Answer: திராவிடக்

26. இராசராசசோழன் தான் தஞ்சை பெரிய கோவிலைக் கட்டினார் என்று உறுதி செய்த ஜெர்மனி அறிஞர் யார்?

Answer: ஷீல்ஸ்

27. 1930 ஆண்டில் தஞ்சை பெரிய கோவிலின் கருவறையின் பகுதிச்சுவரில் ஓவியங்கள் காணப்பட்டதை முதன் முதலில் கண்டறிந்தவர் யார்?

Answer: எஸ். கே. கோவிந்தசாமி

28. ஃப்ரெஸ்கோ என்னும் இத்தாலிய சொல்லுக்கு ----- என்று பொருள்?

Answer: புதுமை

29. ஃப்ரெஸ்கோ வகை ஓவியங்கள் எங்கு காணப்படுகின்றன?

Answer: அஜந்தா, எல்லோரா, சித்தன்னவாசல்

30. தஞ்சை பெரிய கோவில் காணப்படும் நந்தியும், மண்டபமும் யார் காலத்தை சேர்ந்தது?

Answer: நாயக்கர்

3

31. சோழர் காலத்து நந்தி தற்போது ----- திருச்சுற்றில் உள்ளது?

Answer: தென்புற

32. எந்த நூற்றண்டில் கோபுரங்கள் அமைப்பது தனிச்சிறப்பு பெற்றது?

Answer: 12ஆம் நூற்றாண்டு

33. வெளிக்கோபுரத்தை உயரமாகவும் உட்கோபுரத்தை உயரம் குறைவாகவும் இரண்டு கோபுரங்களை கட்டும் புதிய மரபை தோற்றுவித்தவர் யார்?

Answer: இராசராசசோழன்

34. இரண்டு திருவாயில்கள் காணப்படும் கோபுரம்?

Answer: கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம், திருபுவனம்

35. நான்கு புறங்களிலும் நான்கு கோபுரம் கட்டும் மரபு யார் காலத்தில் தொடங்கியது?

Answer: இரண்டாம் குலோத்துங்க சோழன்

36. புகழ்பெற்ற கோவில்கள் பலவற்றிலும் மிகவுயர்ந்த கோபுரத்தை அமைத்தவர்கள் யார்?

Answer: விஜயநகர அரசு

37. இராசராசசோழனின் பட்டத்தரசி ஒலோகமாதேவியால் கட்டப்பட்ட ஒலோகமா தேவீச்சுரம் கோவில் எங்கு உள்ளது?

Answer: திருவையாறு

38. 'எருதந் குஞ்சிர மல்லி' என்று பெண் அதிகாரியை பற்றி குறிப்பிடும் கல்வெட்டு எக்கோவிலில் உள்ளது?

Answer: ஒலோகமா தேவீச்சுரம்

39. தஞ்சையில் இராசராசசோழன் காலத்திலும் ஓர் அதிகாரச்சி பற்றி குறிப்பு உள்ளது அவர் யார்?

Answer: அதிகாரச்சி சோமயன் அமிர்தவல்லி

40. இராசராசசோழனின் தமக்கை யார்?

Answer: குந்தவை தேவி

4

41. தஞ்சை பெரிய கோவிலில் ஆயிரம் ஆண்டு விழா நடைபெற்ற ஆண்டு?

Answer: 2010

5

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்