11 ஆம் வகுப்பு - இலக்கணம் - நாடு-சமூகம்-அரசு-நிருவாகம் - இயல் எட்டு - வையத்-தலைமை-கொள் - ஆக்கப்-பெயர்கள்

  Play Audio

1. பெயர் அல்லது வினைச்சொற்களுடன் விகுதிகளை சேர்த்து ஆக்கப்படும் பெயர்ச்சொற்கள் ----- எனப்படும்?

Answer: ஆக்கப்பெயர்

2. தமிழில் ஆக்கப்பெயர் விகுதிகள் எவை?

Answer: காரன், காரர், காரி, ஆள், ஆளர், ஆளி, தாரர், மானம்

3. ஆக்கப்பெயர் சொற்கள் ஈற்றில் நிற்கும் விகுதிகளை கொண்டு எத்தனை வகையாக பிரிக்கலாம்?

Answer: மூன்று வகை

4. பெயருடன் சேரும் ஆக்கப்பெயர் விகுதிகள்?

Answer: காரன், காரர், காரி, ஆள், ஆளர், ஆளி, தாரர்

5. உடைமை, உரிமை, உறவு அல்லது தொடர்பு, தொழில் அல்லது ஆளுதல் என்னும் நான்கு பொருள்களில் வரும் ஆக்கப்பெயர் விகுதிகள் எவை?

Answer: காரன், காரி, காரர்

6. கடைநிலை பணிபுரிபவரை குறிக்க பயன்படும் ஆக்கப்பெயர் விகுதி?

Answer: ஆள்

7. இருபாற்பொதுப்பெயர்களை உருவாக்க துணைபுரியும் ஆக்கப்பெயர் விகுதி?

Answer: ஆளர், ஆளி

8. வினையுடன் எச்சத்துடனும் சேரும் ஆக்கப்பெயர் விகுதிக்கு எ. கா?

Answer: மானம்

9. பெயருடன் வினையுடன் சேரும் ஆக்கப்பெயர் விகுதிக்கு எ. கா?

Answer: அகம்

1

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்