1. சித்தத்தை வென்று 'சித்து' என்னும் பேரறிவினை பெற்றவர்கள் யார்?
Answer: சித்தர்கள்
2. "நிறைமொழி மாந்தர்" என்ற சொல் காணப்படும் நூல் எது?
Answer: தொல்காப்பியம், திருக்குறள்
3. 'சித்தன்' என்ற சொல் காணப்படும் நூல் எது?
Answer: சிலப்பதிகாரம்
4. அறிவு வேறு, ஞானம் வேறு என்று உலகிற்கு விளக்கியவர்கள்?
Answer: சித்தர்கள்
5. யோக மார்க்கத்தையும், ஞான மார்க்கத்தையும் தங்களின் உயிர்நெறிகளாக கொண்டவர்களாக யார்?
Answer: சித்தர்கள்
6. பிறப்பறுத்தவர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் யார்?
Answer: சித்தர்கள்
7. சித்தர்கள் என்ற சொல்லுக்குரிய பொருள் எது?
Answer: நிறைவடைந்தவர்
8. தமிழில் 'சித்து' என்னும் சொல்லுக்குரிய பொருள் எது?
Answer: மனம், கருத்து, ஆன்மா
9. தமிழ் பேரதிகாரியின்படி 'சித்தி' என்ற சொல்லின் பொருள் யாது?
Answer: மெய்யறிதல், வெற்றி, காரியம் கைகூடல்
10. "யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்" என்பதே ----- நோக்கம்?
Answer: சித்தர்
1
11. சித்தர்களில் ஆதி சித்தராக கருதப்படுபவர்?
Answer: திருமூலர்
12. திருமூலர் வாழ்ந்த காலம்?
Answer: 5ம் நூற்றாண்டு அல்லது 6ம் நூற்றாண்டு
13. சித்தர்களில் கலகக்காரர் என்று கருதப்படுபவர் யார்?
Answer: சிவவாக்கியர்
14. சிவவாக்கியரின் வாழ்ந்த காலம்?
Answer: 9ம் நூற்றாண்டு
15. 'எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தார் அப்பா யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில்' எனக் கூறியவர்?
Answer: பாரதியார்
16. 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்று கூறியவர் யார்?
Answer: திருமூலர்
17. 'ஒன்றென்றிரு, தெய்வம் உண்டென்றிரு' என்று கூறியவர் யார்?
Answer: பட்டினத்தார்
18. "ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லை" என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
Answer: திருமந்திரம்
19. தன்னை அறிந்தநிலையில் ஆன்மா தானே தனக்கு தலைவனாய்நிற்கும் என்பது ----- வாக்கு?
Answer: திருமூலர்
20. தன்னை அறிவதற்கு ----- என்னும் அகங்காரம் அழியவேண்டும்?
Answer: நான்
2
21. 'நாடொணாத அமிர்தமுண்டு நான் அழிந்து நின்ற நாள்' என்ற பாடலை இயற்றியவர்?
Answer: சிவவாக்கியர்
22. 'சாதி பிரிவினிலே தீயை மூட்டுவோம்'என்று பாடியவர்?
Answer: பாம்பாட்டி சித்தர்
23. சித்தர்களை கிளர்ச்சியாளர்கள் என்று கூறியவர்?
Answer: க, கைலாசபதி
24. "சாதி பேதம் ஓதுகின்ற தன்மை என்ன தன்மையோ" என்ற பாடலை இயற்றியவர்?
Answer: சிவவாக்கியர்
25. "ஆதிகபிலர் சொன்ன ஆகமத்தின் சொற்படியே சாதிவகை இல்லாமல் சஞ்சரிப்பது எக்காலம்" என்று பாடியவர் யார்?
Answer: பத்திரகிரியார்
26. சித்தர்களை ----- என்று கருதும் போக்கு தமிழகத்தில் பரவலாக காணப்படுகிறது?
Answer: இரசவாதிகள்
27. சித்தர்கள் தங்களின் யோக சாதனையை உள்ளார்ந்த ஆன்மீக ----- கருதினார்கள்?
Answer: இரசவாதமென்றே
28. அட்டமா சித்திகள்: - அணிமா -
Answer: அணுவைப்போல சிறுத்து நிற்கும் ஆற்றல்
29. மகிமா -
Answer: வரையறையற்று விரிந்து படரும் ஆற்றல்
30. லகிமா -
Answer: காற்றில் மிதக்கும் ஆற்றல்
3
31. கரிமா -
Answer: எங்கும் வியாபித்திருக்கும் ஆற்றல்
32. பிராகாமியம் -
Answer: இயற்கை தடைகளை கடக்கும் ஆற்றல்
33. ஈசத்துவம் -
Answer: படைக்கவும் அடக்கவும் கொண்ட ஆற்றல்
34. வசித்வம் -
Answer: உலக படைப்புக்களை எல்லாம் அடக்கி ஆளும் ஆற்றல்
35. காமாவசாயித்வம் -
Answer: விரும்பியதை முடிக்கும் ஆற்றல்
36. "உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேன்" என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல்?
Answer: திருமந்திரம்
37. "உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பு ஆலயம்" என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
Answer: திருமந்திரம்
38. 'நந்தவ னத்திலோர் ஆண்டி - அவன் நாலாறு மாதமாயிக் குயவனை வேண்டிக்' என்ற பாடலை இயற்றியவர் யார்?
Answer: கடுவெளி சித்தர்
39. அண்டத்தில் உள்ளது பிண்டம், பிண்டத்தில் உள்ளது அண்டம் என்பது ----- மொழியாகும்?
Answer: சித்தர்
40. குண்டலினி சக்தியை உச்சியில் ஏற்றி அமுதம் உண்ணும் நிலையை கூறும் சொல் எது?
Answer: மாங்காய்ப்பால்
4
41. "தன்னையறிந்து இன்பமுற வெண்ணிலாவே - ஒரு தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே"என்ற பாடலை பாடியவர் யார்?
Answer: வள்ளலார்
42. "நாதர்முடி மேலிருக்கும் வெண்ணிலாவே - அங்கே நானும்வர வேண்டுகிறேன் வெண்ணிலாவே" என்ற பாடலை பாடியவர்?
Answer: வள்ளலார்
5