11 ஆம் வகுப்பு - இலக்கணம் - பண்பாடு - இயல் மூன்று - பீடு-பெற-நில் - பகுபத-உறுப்புக்கள்

  Play Audio

1. தமிழ்மொழியில் சொல்லுக்கு வழங்கும் பெயர்களுள் ஒன்று ----- என்பதாகும்?

Answer: பதம்

2. பதம் எத்தனை வகைப்படும்?

Answer: 2

3. பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும் பிரித்துப்பொருள் தரும் நிலையில் இருந்தால் ----- என்பர்?

Answer: பகுபதம்

4. இடைச்சொல் மற்றும் உரிச்சொல் ----- பதத்திற்கு உரியவை?

Answer: பகாப்பதம்

5. சொற்களை ----- நோக்கிலும் பிரித்து எழுதுவர்?

Answer: பொருள்

6. பகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும்?

Answer: ஆறு

7. ஒரு வினைப்பகுபதத்தில் ----- , ----- அடிப்படை உறுப்புகளாக உள்ளன?

Answer: பகுதியும், விகுதியும்

8. ஒரு பகுபதத்தில் பொருள் தரும் உறுப்புகள்?

Answer: பகுதி, விகுதி, இடைநிலை

1

9. பகுதியை ----- என்றும் கூறுவர்?

Answer: முதனிலை

10. ஒரு வினைமுற்று சொல்லின் இறுதியில் நின்று திணை, பால், எண், இடம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் உறுப்பு ----- எனப்படும்?

Answer: விகுதி

11. வியங்கோள், தொழிற்பெயர், பெயரெச்சம், வினையெச்சம் போன்ற பல்வேறு இலக்கண பொருண்மைகளை ----- பயன்படுகிறது?

Answer: விகுதி

12. பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் தோன்றும் உறுப்பு?

Answer: இடைநிலை

13. வினைப்பகுப்பதத்தில் வரும் இடைநிலை எத்தனை வகைப்படும்?

Answer: 2

14. பெயர் பகுப்பதத்தில் வரும் இடைநிலையை ----- என்பர்?

Answer: பெயர் இடைநிலை

15. ஒரு வினைப்பகுபதத்தில் பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் வந்து காலம் உணர்த்தும் உறுப்பு ----- அல்லது ----- எனப்படும்?

Answer: கால இடைநிலை, காலம் காட்டும் இடைநிலை

16. எதிர்மறை வினைச்சொற்களில் பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் வந்து எதிர்மறையை உணர்த்தும் இடைநிலை ----- ஆகும்?

Answer: எதிர்மறை இடைநிலை

17. ஓர் ஆக்கப்பெயர்ச்சொல்லில் பெயர்ப்பகுதியை விகுதியோடுஇணைப்பதற்கு வரும் இடைநிலை ----- ஆகும்?

Answer: பெயர் இடைநிலை

2

18. பகுதி விகுதி இடைநிலை ஆகிய பகுபத உறுப்புகள் புணரும்போது இடையில் தோன்றும் உறுப்பு ----- ஆகும்?

Answer: சந்தி

19. ----- பகுதிக்கும் இடைநிலைக்கும் வருவது பெருவழக்கம்?

Answer: சந்தி

20. பெரும்பாலும் ----- என்னும் மூன்று எழுத்துக்களுள் ஒன்று சந்தியாக வரும்?

Answer: த், ப், க்

21. பகுபத உறுப்புகளில் அடங்காமல் ஏழாவது உறுப்பாக வரும் புறத்துறுப்பு ----- எனப்படும்?

Answer: எழுத்துப்பேறு

22. சாரியை வரவேண்டிய இடத்தில் புள்ளி பெற்ற எழுத்து உயிர் ஏற இடமளித்து வந்தால் அதனை ----- என குறிப்பிடல் வேண்டும்?

Answer: எழுத்துப்பேறு

23. சந்தி என்பதற்கு ----- என்று பெயர்?

Answer: புணர்ச்சி

24. விகுதி தனியே வராமல் துணையாக பெற்று வரும் எழுத்தே ----- ஆகும்?

Answer: எழுத்துப்பேறு

25. பகுதியோடு இடைநிலையும் இடைநிலையோடு விகுதியும் பொருத்தமாக சார்ந்து இயைய வரும் உறுப்பு ----- ஆகும்?

Answer: சாரியை

3

26. பெரும்பாலும் ----- இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையில் வரும்?

Answer: சாரியை

27. சந்தி வரவேண்டிய இடத்தில் உயிர்மெய் எழுத்து வந்தால் அதனை ----- என்று குறிப்பிடல் வேண்டும்?

Answer: சாரியை

28. பகுதி, விகுதி இடைநிலை ஆகியவை புணரும்போது அவற்றின் வடிவத்தில் ஏற்படும் மாற்றம் ----- எனப்படும்?

Answer: விகாரம்

29. இஃது ஓர் எழுத்து மற்றோர் எழுத்தாக திரிந்து கெட்டும் நெடில் குறியாகவும் மாற்றம் பெரும். இத்தகைய மாற்றமே ----- எனப்படும்?

Answer: விகாரம்

4

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்