11 ஆம் வகுப்பு - உரைநடை - அறிவியல்-தொழில்நுட்பம் - இயல் நான்கு - இனியொரு-விதி-செய்வோம் - தலைமைச்-செயலகம்

  Play Audio

1. புத்திசாலித்தனம், படைப்பு உணர்ச்சி, ஞபாகத்திற்கு காரணம் எது?

Answer: நியூரான்களின் வலைப்பின்னல்

2. எதிர்காலத்தில் நம் மூளையின் பல செயல்பாடுகளை ----- மூலம் செய்யலாம்?

Answer: சிலிக்கன் சில்லுகள்

3. சராசரி மூளையின் எடை?

Answer: ஒன்றரை கிலோ

4. ஒரு கொரில்லாவின் மூளையை காட்டிலும் மனித மூளை எத்தனை மடங்கு கனம் உடையது?

Answer: மூன்று மடங்கு

5. குதிரை மூளையின் எடை?

Answer: நம்மில் பாதி

6. யானையின் மூளை அதன் உடல் எடையில் எத்தனை சதவீதம்?

Answer: 0. 2%

7. மனிதன் மொத்த எடையில் மூளையின் எடை எவ்வளவு?

Answer: 2. 5%

8. மனிதன் பிறந்தது முதல் இளமைக்காலம் வரை மனித மூளையானது எத்தனை மடங்கு அதிகமாகிறது?

Answer: 3 மடங்கு

9. மூளை ----- முளைக்கிறது?

Answer: முதுகுத்தண்டு

10. மந்த மூளையானது எத்தனை பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது?

Answer: 3

1

11. மனிதனின் மூக்கு, கண் இவற்றின் முடிவுகள் மூளையின் எப்பகுதியில் உள்ளன?

Answer: முன்மூளை

12. நம் உடலின் அசைவுகளையும் உணர்ச்சிகளின் வளர்ச்சியையும் கட்டுப்படுத்துவது?

Answer: பின்மூளையில் உள்ள சிறுமூளை

13. மூளைக்கு ஒரு நிமிடத்திற்கு எத்தனை மில்லி இரத்தம் தேவைப்படுகிறது?

Answer: 800 மில்லி

14. மனித உடலின் எடையில் மூளை எத்தனை பங்கை கொண்டுள்ளது?

Answer: ஐம்பதில் ஒரு பங்கு

15. மனித உடலில் மொத்த இரத்தம் மற்றும் உயிர்வெளி தேவையில் மூளையானது எத்தனை பங்கை எடுத்துக்கொள்கிறது?

Answer: ஐந்தில் ஒரு பாகத்தை

16. எத்தனை வினாடிக்கு குருதியோட்டம் இல்லையென்றால் சொத்தென்று மயக்கம் போட்டு விழுந்து விடுவோம்?

Answer: பத்து வினாடி

17. தேனீயின் மூளைக்கு எத்தனை சதவீத சக்தி தேவைப்படுகிறது?

Answer: பத்து மைக்ரோவாட்

18. மைக்ரோவாட் என்பது?

Answer: ஒரு வாட் சக்தியில் பத்து லட்சத்தில் ஒரு பாகம்

19. தேனீ மூளையின் கணக்கிடும் வேகம்?

Answer: பத்து டெர்ராஃபிளாப்

20. தேனீ மூளையின் குறிக்கோள்?

Answer: தேனை சுலபமாகவும் கணிசமாகவும் கொண்டுவர வேண்டியது

2

21. தேனீயின் மூளை ----- நியூரான்களை கொண்டுள்ளது?

Answer: 100பில்லியன்

22. தேனீயின் மூளை இன்றைய சூப்பர் கணினியை விட எத்தனை மடங்கு வேகமானது?

Answer: ஆயிரம் மடங்கு

23. மனித மூளை சுமார் ----- வாட் சக்தியை உற்பத்தி செய்கின்றது?

Answer: 10

24. சராசரி மனித மூளையின் எடை?

Answer: 1349 கிராம்

25. மிக அதிக எடையுள்ள மனித மூளை?

Answer: 2049 கிராம்

26. மனித மூளையானது 20 வயது முதல் ஆண்டுக்கு ----- கிராம் குறைகின்றது?

Answer: ஒருகிராம்

27. மனித மூளையில் எவ்வளவு சதவீத நீர் உள்ளது?

Answer: 80%

28. "உங்கள் உடலின் முக்கிய பணி, உங்கள் மூலையைத் தாங்கி செல்வது" என்று கூறியவர் யார்?

Answer: தாமஸ் ஆல்வா எடிசன்

29. நமது பேச்சு திறமை நம் இடது மூளையின் முன்பகுதி சுளையில் உள்ளது ஏன் பியர்பால் ப்ரோக்கோ கண்டறிந்த ஆண்டு?

Answer: 1861

30. ப்ரொக்காவின் பேட்டை அல்லது ப்ரொக்காஸ் ஏரியா என அழைக்கப்படும் மூளையின் பகுதி எது?

Answer: இடது மூளையின் முன்பகுதி

3

31. "நாம் பிறக்கும்போதே சில ஆழ்ந்த அமைப்புகளுடன் பிறக்கிறோம்" என்று கூறியவர்?

Answer: நோம் சோம்ஸ்கி

32. பொ. ஆ. மு. 6ஆம் நூற்றாண்டில் "மனம் என்பது மூலையில் இருக்கிறது" என்று கூறியவர்?

Answer: பித்த கோரஸ்

33. "மனமும் மூளையும் வேறு" என்று கூறியவர்?

Answer: டெஸ்கர்ட்டெஸ்

34. நியூரானின் முதல் உண்மையான சித்திரத்தை பிரசுரித்தவர்?

Answer: ஆட்டோ டியட்டர்ஸ்

35. மூளையில் வார்த்தைகள் அறியப்படும் இடத்தை கண்டறிந்தவர் யார்?

Answer: வெர்னிக்

36. "மொழி அறிவு மூளைக்குள் பதிந்திருக்கிறது" என்று கூறியவர்?

Answer: நோம் சோமஸ்கி

37. மூளையின் எந்த பகுதி பேச, எழுத, சிந்திக்க கணக்கிட உதவுகிறது?

Answer: இடது பகுதி

38. வடிவம், நடனம் ஆடுவது, பாடுவது, நடிப்பது போன்ற செயல்கள் மூளையின் எந்தப்பகுதியில் நடக்கிறது?

Answer: வலது பகுதி

39. "உலகின் அதிவிரைவு கணினி ஒரு நொடிக்கு மேற்கொள்ளும் கணக்குகளைவிட அதிகமாகவே மனித மூளையால் மேற்கொள்ள முடியும்" என்று கூறியவர்?

Answer: க்வாபெனா போஹென்

40. சுஜாதாவின் இயற்பெயர்?

Answer: ரங்கராஜன்

4

41. "கணிப்பொறியின் கதை" என்ற நூலை எழுதியவர்?

Answer: சுஜாதா

42. இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு கொண்டு வந்ததில் முக்கிய பங்கு வகித்தவர்?

Answer: சுஜாதா

43. "சிலிக்கன் சில்லுப்புரட்சி" என்ற நூலை எழுதியவர்?

Answer: சுஜாதா

44. "அடுத்த நூற்றாண்டு"என்ற நூலை எழுதியவர்?

Answer: சுஜாதா

45. அறிவியலை எளிய தமிழில் ஊடகங்களில் பரப்பியதற்காக மத்திய அரசின் விருது பெற்றவர்?

Answer: சுஜாதா

46. தலைமைச்செயலகம் என்ற கட்டுரையை எழுதியவர்?

Answer: சுஜாதா

5

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்