11 ஆம் வகுப்பு - உரைநடை - நாகரிகம்-தொழில்-வணிகம் - இயல் ஆறு - நாளெல்லாம்-வினைசெய் - ஆனந்தரங்கர்-நாட்குறிப்பு

  Play Audio

1. புதுச்சேரி வரலாற்றினை பதிவு செய்தவர்களில் முதன்மையானவர்?

Answer: ஆனந்தரங்கர்

2. யாருடைய நாட்குறிப்பு 18ம் நூற்றாண்டின் புதுவை வரலாற்றை அறிந்து கொள்ள உதவுகிறது?

Answer: ஆனந்தரங்கர்

3. புதுச்சேரியில் பிரெஞ்சு ஆட்சியின் எழுச்சியும் வீழிச்சியும் யாரின் வாழ்வோடு ஒன்றிருப்பது ஓர் அறிய நிகழ்வு?

Answer: ஆனந்தரங்கர்

4. நாட்குறிப்பு என்பது?

Answer: தனிமனிதர் ஒருவரின் அன்றாட நிகழ்வுகளை அல்லது பணிகளை பதிவு செய்யும் ஏடாகும்

5. நாட்குறிப்பை ஆங்கிலத்தில் எவ்வாறு அழைக்கின்றனர்?

Answer: டைரி

6. டைரியம் என்பது எம்மொழிச்சொல்?

Answer: இலத்தீன்

7. நாட்குறிப்புகளின் முன்னோடியாக திகழ்வது எது?

Answer: EPHEMERIDES என்ற கிரேக்க குறிப்பேடு

8. EPHEMERIDES என்ற சொல்லின் பொருள் என்ன?

Answer: ஒரு நாளுக்கான முடிவு

9. முகலாய பேரரசில் யாருடைய காலத்தில் நாட்குறிப்பு எழுதும் பழக்கம் இருந்தது?

Answer: பாபர்

10. முகலாய பேரரசில் யாருடைய காலத்தில் நாட்குறிப்பு எழுதும் பழக்கம் தடை செய்யப்பட்டு இருந்தது?

Answer: ஒளரங்கசீப்

1

11. 1498இல் இந்தியாவிற்கு கடல்வழி மார்க்கத்தை கண்டுபிடித்தவர் யார்?

Answer: வாஸ்கோடகாமா

12. வாஸ்கோடகாமா அவர்களின் நாட்குறிப்பு யாரால் பதிவு செய்யப்பட்டது?

Answer: ஆழ்வாரோ வெல்லோ

13. எந்த ஆளுநரின் மொழிபெயர்ப்புகளாக ஆனந்தரங்கர் விளங்கினார்?

Answer: துய்ப்பிளே என்ற பிரென்ச் ஆளுநர்

14. யாருடைய நாட்குறிப்பு 25 ஆண்டுகள் தென்னிந்திய வரலாற்றை அறிந்துகொள்ள உதவுகிறது?

Answer: ஆனந்தரங்கர்

15. பிரான்சுவா மார்த்தேனுக்கு பிறகு புதுச்சேரியின் தலைமை பொறுப்பினை ஏற்றவர் யார்?

Answer: கியோம் ஆந்த்ரே எபோர்

16. கியோம் ஆந்த்ரே எபோரின் தரகராக நியமிக்கப்பட்டவர் யார்?

Answer: நைனியப்பர்

17. நைனியப்பரின் மைத்துனர் யார்?

Answer: திருவேங்கடம்

18. திருவேங்கடத்தின் மகன் யார்?

Answer: ஆனந்தரங்கர்

19. ஆனந்தரங்கர் சென்னையிலுள்ள பெரம்பூரில் பிறந்த ஆண்டு?

Answer: 1709

20. ஆனந்தரங்கர் எந்த வயதில் தந்தையை இழந்தார்?

Answer: 17 வயதில்

2

21. ஆனந்தரங்கர் பரங்கிப்பேட்டை நெசவு ஆலைக்கு யாருடைய உதவியால் தலைவர் ஆனார்?

Answer: பிரெஞ்சு மேலதிகாரி அலனுவார்

22. யாருடைய காலத்தில் தலைமை மொழிபெயர்ப்பாளராக ஆனந்தரங்கர் விளங்கினார்?

Answer: துய்ப்ளே

23. ஆனந்தரங்கர் எழுதிய நாட்குறிப்புகள் எத்தனை தொகுதிகளாக வெளி வந்துள்ளன?

Answer: 12 தொகுதிகள்

24. உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

Answer: சாமுவேல் பெப்பிசு

25. ஆங்கிலேய கடற்படையில் பணியாற்றிய சாமுவேல் பெப்பிசு எம்மன்னருடைய கால நிகழ்வுகளை நாட்குறிப்பாக பதிவு செய்துள்ளனர்?

Answer: இரண்டாம் சார்லஸ் மன்னர் (1660 - 1669)

26. இந்தியாவின் பெப்பிசு என்று அழைக்கப்படுபவர் யார்?

Answer: ஆனந்தரங்கர்

27. ஆனந்தர்ங்கரின் நாட்குறிப்பு காலம்?

Answer: 6. 9. 1736 முதல் 11. 1. 1761

28. பிரெஞ்சு ஆளுநர் டுமாஸ் நாணய அச்சடிப்பு உரிமையை பெற்ற ஆண்டு?

Answer: 10. 9. 1736

29. எந்த ஆளுநர் நாணய அச்சடிப்பு உரிமையை பெற பெரும் பணத்தை செலவளித்ததை ஆனந்தரங்கர் குறிப்பிட்டுள்ளார்?

Answer: ஆளுநர் டுமாஸ்

30. ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில் இருந்த சென்னையை மீட்ட பிரெஞ்சு கப்பல் தளபதி யார்?

Answer: லெபூர்தானே (1746)

3

31. ஆற்காடு நவாப் அன்வர்தீன்கானின் மூத்த மகன் யார்?

Answer: மகபூஸ்கான்

32. ஆற்காடு நவாப் அன்வர்தீன்கானின் மூத்த மகன் மாபூஸ்கான் பிரெஞ்சு அரசை எதிர்த்து போரிட்டதை நேரில் கண்டு உரைப்பதுபோல் நாட்குறிப்பு எழுதியவர் யார்?

Answer: ஆனந்தரங்கர்

33. 1758 ஆண்டு இறுதியில் சென்னை கோட்டை முற்றுகையை ----- என்பவர் தொடங்கியுள்ளார்?

Answer: லல்லி

34. 1758 ஆண்டு சென்னை கோட்டை முற்றுகையை லல்லி தொடங்கிய போது அக்கோட்டையின் கவர்னராக இருந்தவர் யார்?

Answer: மேஸ்தர் பிகட்

35. புதுச்சேரி பட்டினத்திற்கு உள்ளேயும், சம்பாக் கோவில் அருகிலும் காலைக்கடன் கழிப்பவர்களிடம் ஆறு பணம் தண்டம் விதிக்க ஆளுநர் தூய்மா ஆணை பிறப்பித்த ஆண்டு?

Answer: 11. 06. 1739

36. "தமிழ்த்தாய் நெருப்பினாலும் வெள்ளத்தினாலும் பாதிக்கப்பட்டாலும் அவளது ஆபரணங்கள் தொலைவில் உள்ள நகரமான பாரீசில் மிகவும் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன" என்று ஆனந்தரங்கர் பற்றி கூறியவர்?

Answer: உ. வே. சா

37. "அந்த காலத்தில் நடந்த செய்திகளையெல்லாம் சித்திரகுப்தன் போல் ஒன்று விடாமல் எழுதி வைத்திருக்கிறார்" என்று ஆனந்தரங்கர் பற்றி கூறியவர் யார்?

Answer: வ. வே. சு

38. ஆனந்தரங்கர் நாட்குறிப்பு பெரும்பகுதி எதை பற்றி உள்ளது?

Answer: வணிகச் செய்திகள்

39. புதுச்சேரியில் இருந்து மணிலாவுக்கு சென்ற கப்பலில் பணியாற்றிய தமிழ் மாலுமி யார்?

Answer: அழகப்பன்

40. ஐரோப்பாவிலிருந்து இந்தியாவை அடைவதற்கான கடல்வழி பயணத்திற்கு ஆகும் மாதங்கள்?

Answer: 6 மாதங்கள்

4

41. 11. 11. 1737 பிரான்சிலிருந்து புறப்பட்ட கப்பல் எந்நாளில் புதுச்சேரியை வந்தடைந்தது என்று ஆனந்தரங்கர் நாட்குறிப்பில் கூறியுள்ளார்?

Answer: 08. 05. 1738

42. எட்டு மாற்றுக்கு குறைவான வராக நாணயங்களை வைத்திருப்பது குற்றம் என்று பிரெஞ்சு மன்னர் அறிவித்த ஆண்டு?

Answer: 1739

43. புதுச்சேரியின் நாணயம் அச்சிடும் உரிமையை நிஜாமிடமிருந்து பிரெஞ்சு வணிக கழகம் பெற்ற ஆண்டு?

Answer: 10. 09. 1736

44. ஆனந்தரங்கர் குறிப்பிட்ட வராகங்கள் யாவை?

Answer: புதுச்சேரி பிறை வராகன், சென்னை பட்டணத்து நட்சத்திர வராகன், வட்ட வராகன், பரங்கிபேட்டை வராகன், ஆரணி வராகன்

45. ஆனந்தரங்கர் காலத்தில் இருந்த நாணயங்கள்: 480 காசு -

Answer: ஒரு ரூபாய்

46. 60 காசு -

Answer: 1 பணம்

47. 8 பணம் -

Answer: 1 ரூபாய்

48. 24 பணம் -

Answer: ஒரு வராகன்

49. 1 பொன் -

Answer: 1/2 வராகன்

50. 1 வராகன் -

Answer: 3 அல்லது 3. 2 ரூபாய்

5

51. 1 மோகரி -

Answer: 14 ரூபாய் மதிப்புள்ள தங்க நாணயம்

52. 1 சக்கரம் -

Answer: 1/2 வராகனுக்கும் கூடுதல் மதிப்புள்ள தங்க நாணயம்

53. ஆனந்தரங்கர் நாட்குறிப்பில் புதுச்சேரியை பெருங்காற்று சூறையாடிய ஆண்டு?

Answer: 1745

54. ஆனந்தரங்கர் நாட்குறிப்பில் புதுச்சேரிக்கு கப்பல்களின் வருகை ----- ஆண்டில் தடைபட்டு பெரும் பொருளாதார தட்டுப்பாடு தோன்றியது என கூறுகிறார்?

Answer: 1745

55. 1746 ஆண்டு லெபூர்தொனேவின் எத்தனை கப்பல்கள் புதுவைக்கு வந்தன?

Answer: ஒன்பது கப்பல்கள்

56. புதுச்சேரியின் இராணுவ அரசியல் செய்திகளை முகலாயருக்கும், ஆங்கிலேயருக்கும் கூறுவதாக ஆனந்தரங்கர் மீது பழி சுமத்தப்பட்ட போது புதுச்சேரியின் ஆளுநராக இருந்தவர் யார்?

Answer: லெறி

57. ஆனந்தரங்கன் பிள்ளைத்தமிழ் என்ற நூலினை எழுதியவர் யார்?

Answer: புலவரேறு அரிமதி தென்னகன்

58. வானம் வசப்படும் என்ற நூலினை எழுதியவர் யார்?

Answer: பிரபஞ்சன்

59. ஆனந்தரங்கர் மறைந்த ஆண்டு?

Answer: 12. 01. 1761

60. ஆனந்தரங்கர் ஏறத்தாழ எத்தனை ஆண்டு தென்னிந்தியாவின் வரலாற்றினை நாட்குறிப்பில் பதிவு செய்துள்ளார்?

Answer: 25 ஆண்டு

6

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்