11 ஆம் வகுப்பு - இலக்கணம் - கல்வி - இயல் ஐந்து - கேடில்-விழுச்செல்வம் - படைப்பாக்க-உத்திதிகள்

  Play Audio

1. "உவமையானது வினை, பயன், வடிவம், உரு என்ற நான்கின் அடிப்படையில் தோன்றும்" என்று கூறியவர் யார்?

Answer: தொல்காப்பியர்

2. "வினை பயன் மெய் உரு என்ற நான்கே வகைபெற வந்த உவமத் தோற்றம்" என்று கூறும் நூல்?

Answer: தொல்காப்பியம்

3. புலிபோல பாய்ந்தான் -

Answer: வினை (தொழில்)

4. மழைபோல கொடுக்கும் கை -

Answer: பயன்

5. துடி போலும் இடை -

Answer: வடிவம் (மெய்)

6. தளிர்போலும் மேனி -

Answer: உரு (நிறம்)

7. சங்கப்பாடலில் பெரும்பாலும் எந்த அணி இடம் பெறுகிறது?

Answer: உவமை அணி

8. "அவர்கள் மூளையில் விதையைப்போல் தூவப்பட்ட வேண்டிய அறிவு ஆணையைப்போல் அறையப்படுகின்றது" என்ற பாடலின் இடம்பெற்றுள்ள உவமை எது?

Answer: வினை உவமை

9. "வறண்ட வாழ்வு துளிர்க்க மழைபோல் வந்தாய் நீ" என்ற பாடலின் இடம்பெற்றுள்ள உவமை?

Answer: பயன் உவமை

10. "சுருங்கிய குடையை பொல்லாத தோன்றும் அசோகமரம்" என்ற பாடலின் இடம்பெற்றுள்ள உவமை?

Answer: மெய் உவமை (வடிவம்)

1

11. "சோடிய விளக்காய் மாலைநேரத் சூரியனின் மஞ்சள் வெளிச்சம் தெருவில் நிரம்பி வழிந்தது" என்ற பாடலின் இடம்பெற்றுள்ள உவமை?

Answer: உரு உவமை (நிறம்)

12. உவமையும் உவமிக்கப்படும் பொருளையும் வேறுபடுத்தாமல் இரண்டும் ஒன்றே எனக் கூறுவது?

Answer: உருவகம்

13. உவமேயம் முன்னும், உவமை பின்னும் வருவது ----- எனப்படும்?

Answer: உருவகம்

14. உவமையின் செறிவார்ந்த வடிவம் ----- ஆகும்?

Answer: உருவகம்

15. தீ போல் சினம் என்பதை சினத்தீ என்றவர் யார்?

Answer: பாரதியார்

16. "சுட்டும் விழிச்சுடர்த்தான் - கண்ணம்மா சூரிய சந்திரரே? என்ற கவிதையை இயற்றியவர் யார்?

Answer: பாரதியார்

17. உருவாக்கத்தில் உள்ள பகுப்புகளின் எண்ணிக்கை?

Answer: 4

18. "எண்ணவலை பின்னும் மூளை சிலந்தி" என்ற பாடலின் இடம்பெற்றுள்ள உருவகம் எது?

Answer: வினை உருவகம்

19. "ஆவேசப் புயல்களாகும் அசைக்க முடியாத ஆகாசப்பூ" என்ற பாடலின் இடம்பெற்றுள்ள உருவகம் எது?

Answer: பயன் உருவகம்

20. "நீலவயலின் நட்சத்திர மணிகள்" என்ற பாடலின் இடம்பெற்றுள்ள உருவகம் எது?

Answer: மெய் உருவகம்

2

21. "மலைக்கிழவியின் நரைத்த கூந்தல்" என்ற பாடலின் இடம்பெற்றுள்ள உருவகம் எது?

Answer: நிறம் உருவகம்

22. கவிஞர் தான் கூறக்கருத்திய பொருளை வெளிப்படையாக கூறாமல், அகமாந்தரின் மன உணர்வுகளை கருப்பொருள்கள் மூலம் உவமைப்படுத்துவதை ----- என்பர்?

Answer: உள்ளுறை உவமம் (உவமை)

23. உள்ளுறை உவமம் என்பது?

Answer: தமிழ் இலக்கியதிற்கே உரிய ஒப்பற்ற நெறி

24. வினை, பயன் மற்றும் குறியீடுகளை கொண்டு உருவாக்கப்படுவது எது?

Answer: உள்ளுறை உவமம்

25. இருத்தல் என்றால் ----- எனப் பொருள்படும்?

Answer: தங்குதல்

26. உரிப்பொருளோடு நேரிடைத் தொடர்பில்லாத குறிப்பு பொருள் ----- எனப்படும்?

Answer: இறைச்சி

27. வடமொழியினர் குறிப்பிடுகிற 'தொனிக்கு' இணையானது?

Answer: இறைச்சி

28. இறைச்சி என்பது ----- பாடலில் மட்டுமே இடம்பெறும்?

Answer: அகப்பாடல்

29. "நசைபெரியது உடையர் நல்கலும் நல்குவர்" என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல்?

Answer: குறுந்தொகை

30. வெளிப்படையாக பொருள் கூறினால் அது?

Answer: உவமை

3

31. உவமைக்குள் மற்றொரு பொருளை குறிப்பாக உணர்த்தினால் அது?

Answer: உள்ளுறை உவமம்

4

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்