11 ஆம் வகுப்பு - உரைநடை - பண்பாடு - இயல் மூன்று - பீடு-பெற-நில் - மலை-இடப்பெயர்கள்-ஓர்-ஆய்வு

  Play Audio

1. மனித சமூகத்தின் ஆதி நிலம்?

Answer: மலை

2. மலையும் மலை சார்ந்த பகுதியை எவ்வாறு குறிப்போம்?

Answer: குறிஞ்சி

3. மலை, குன்றுகளின் பெயர்கள் குறித்த ஆய்வை ----- என்ற கலைச்சொல்லாக அழைப்பர்?

Answer: Orology

4. திராவிடர்கள் அடிப்படையில் ----- மக்கள்?

Answer: மலைவாழ்

5. திராவிடர்களை 'மலைநில மனிதர்கள்' என்று அழைத்தவர்கள்?

Answer: கமில் சுவலபில்

6. "சேயோன் மேய மைவரை உலகம்" என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்?

Answer: தொல்காப்பியம்

7. 'விண்பொரு நெடுவரை குறிஞ்சிக்கிளவ" என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்?

Answer: திருமுருகாற்றுப்படை

8. கடையெழு வள்ளல்கள் ஆண்ட நிலப்பகுதி எது?

Answer: மலை

9. மலை என்ற சொல்லை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இனக்குழுக்கள் : மலவேடா -

Answer: இடுக்கி - கேரளா

10. மலேறு -

Answer: தட்சிண கன்னடா

1

11. கோட்டா -

Answer: நீலகிரி - தமிழ்நாடு

12. கொண்டதோரா -

Answer: ஆந்திரப்பிரதேசம்

13. கோண்டு, கொய்ட்டெர் -

Answer: ஒடிசா

14. பால் எருமை கொட்டில்களை புனித இடமாக கருதுபவர்கள் யார்?

Answer: நீலகிரியில் உள்ள தோடர் இனத்தவர்

15. குறும்பர் மொழியில் தாழ்வாரத்தை குறிக்கும் சொல்?

Answer: மெட்டு

16. ஆந்திராவிலும் ஒடிஷாவிலும் உள்ள திராவிட பழங்குடியினர்?

Answer: ஜதாப்பு

17. திராவிட சொல்லான 'மலை' என்பது ----- மொழியில் 'மலய' என்று வழங்கப்படுகிறது?

Answer: சம்ஸ்கிருத மொழி

18. 'மலயத்துவஜ' என அழைக்கப்பட்ட மன்னன்?

Answer: பாண்டிய மன்னன்

19. வடமொழியில் ----- என்ற சொல் மலபாருக்கு மேற்கே உள்ள மலைகளை குறிக்கிறது?

Answer: மலய

20. தமிழில் குறிஞ்சி நிலம் தொடர்பான சொற்களில் ----- என்பது உயரமானது என்றும் ----- என்பது உயரம் குறைவானது என்றும் பொருள் தருகிறது?

Answer: மலை, குன்று

2

21. தமிழ்நாட்டில் மட்டும் 'மலை' என்ற சொல் ----- இடப்பெயர்களில் முன்னோட்டமாகவும் ----- இடப்பெயர்களில் பின்னோட்டமாகவும் இடம்பெறுகின்றது?

Answer: 17, 84

22. 'மலா' என்ற சொல் வழக்கத்தில் உள்ள மாநிலம் எது?

Answer: ஆந்திரப்பிரதேசம்

23. மலை என்ற வடிவம் 'தோணிமலை' என்ற பெயரில் ஒரே ஒரு முறை பயன்படுத்தப்பட்டுள்ள மாநிலம் எது?

Answer: கர்நாடகத்தில்

24. கர்நாடகத்தில் மலையை குறிக்கும் சொல்லான 'மலே' என்ற சொல் ----- இடப்பெயர்களில் இடம்பெற்றுள்ளது?

Answer: 15

25. பத்து 'மலை' விகுதி இடப்பெயர்கள் உடைய மாநிலம் எது?

Answer: கேரளா

26. இந்தியாவில் 'கோட்டை' என்று முடியும் ----- இடப்பெயர்களும் தமிழ்நாட்டில் தான் உள்ளன?

Answer: 248

27. கோடு என்ற தமிழ்ச்சொல்லுக்கு ----- என்ற பொருள் உண்டு?

Answer: மலையுச்சி, சிகரம், மலை

28. KVT COMPLEX என்பது எதை குறிக்கிறது?

Answer: கொற்கை, வஞ்சி, தொண்டி, வளாகம்

29. 'கோடை' என்னும் தமிழ்ச்சொல் ----- என்ற பொருளிலும் வழங்கப்படுகிறது?

Answer: மலை

30. இந்தியவியல் மற்றும் திராவிடவியல் ஆய்வாளர் யார்?

Answer: ஆர். பாலகிருஷ்ணன்

3

31. வடமேற்கு இந்தியாவில் இன்றுவரை வழக்கில் உள்ள 'கொற்கை, வஞ்சி, தொண்டி, வளாகத்தை'ஆய்வுலகிற்கு கொண்டு வந்தவர் யார்?

Answer: ஆர். பாலகிருஷ்ணன்

32. தினமணி நாளிதழில் துணையாசிரியராகவும், கணையாழி இலக்கிய இதழின் ஆலோசகர் குழுவிலும் தீவிர பங்காற்றியவர்?

Answer: ஆர். பாலகிருஷ்ணன்

33. அன்புள்ள அம்மா, சிறகுக்குள் வானம் உள்ளிட்ட நூல்களை எழுதியவர்?

Answer: ஆர். பாலகிருஷ்ணன்

34. ஆர். பாலகிருஷ்ணன் இந்திய ஆட்சிப்பணி தேர்வை முதன் முதலில் தமிழில் எழுதி தேர்ச்சி பெற்ற ஆண்டு?

Answer: 1984

35. ஒடிஷா மாநிலத்தில் கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் அம்மாநிலத்தின் வளர்ச்சி ஆணையராக பொறுப்பில் இருந்தவர் யார்?

Answer: ஆர். பாலகிருஷ்ணன்

36. 'சிந்துவெளி பண்பாட்டின் திராவிட அடித்தளம்' என்ற நூலின் ஆசிரியர்?

Answer: ஆர். பாலகிருஷ்ணன்

4

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்