11 ஆம் வகுப்பு - செய்யுள் - இயற்கை-வேளாண்மை-சுற்றுச்சூழல் - இயல் இரண்டு - மாமழை-போற்றதும் - ஐங்குறுநூறு

  Play Audio

1. "காயா கொன்றை நெய்தல் முல்லை போதவிழ் தனவொடு பிடவலர்ந்து கவினிப் "என்ற பாடல் வரியை எழுதியவர் யார்?

Answer: பேயனார்

2. கவினி என்ற சொல்லின் பொருள் என்ன?

Answer: அழகுற

3. ஆல் என்ற சொல்லின் இலக்கணக்குறிப்பு என்ன?

Answer: அசைநிலை

4. ஐங்குறுநூறு பிரித்து எழுதுக?

Answer: ஐந்து + குறுமை + நூல்

5. ஐங்குறுநூறு நூலின் பாடல் எல்லை எது?

Answer: முன்றடிச் சிற்றெல்லையும் ஆறடிப் பேரெல்லையும்

6. திணை ஒன்றுக்கு நூறு பாடல்கள் வீதம் ஐந்து திணைகளுக்கும் 500பாடல்கள் கொண்ட நூல் எது?

Answer: ஐங்குறுநூறு

7. முல்லை திணை பாடிய புலவர் யார்?

Answer: பேயனார்

8. மருதத்திணை பாடிய புலவர் யார்?

Answer: ஓரம்போகியார்

9. நெய்தல் திணை பாடிய புலவர் யார்?

Answer: அம்மூவனார்

10. பாலைத் திணை பாடிய புலவர் யார்?

Answer: ஓதலாந்தையர்

1

11. ஐந்குறுநூற்றின் கடவுள் வாழ்த்துப் பாடலை பாடியவர் யார்?

Answer: பாரதம் பாடிய பெருந்தேவனார்

12. ஐந்குறுநூற்றைத் தொகுத்தவர் யார்?

Answer: புலன்துறை முற்றிய கூடலுக்கிழார்

13. ஐங்குறுநூற்றைத் தொகுப்பித்தவர் யார்?

Answer: யானைக்கட்சேய் மந்தரஞ் சேரலிரும்பொறை

14. சங்ககால புலவராகிய பேயனார் இயற்றிய எத்தனை பாடல்கள் கிடைத்துள்ளன எண்ணிக்கை எத்தனை?

Answer: 105

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்