11 ஆம் வகுப்பு - செய்யுள் - நாடு-சமூகம்-அரசு-நிருவாகம் - இயல் எட்டு - வையத்-தலைமை-கொள் - புரட்சிக்-கவி

  Play Audio

1. 'தமிழ்அறிந்த தால் வேந்தன் எனை அழைத்தான் தமிழ்க்கவிஎன் றெனை அவளும் காத லித்தாள்! ' என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல்?

Answer: புரட்சிக்கவி

2. ஓதுக என்பதன் பொருள்?

Answer: சொல்க

3. முழக்கம் என்பதன் பொருள்?

Answer: ஓங்கி உரைத்தல்

4. கனிகள் என்பதன் பொருள்?

Answer: உலோகங்கள்

5. மணி என்பதன் பொருள்?

Answer: மாணிக்கம்

6. படிகம் என்பதன் பொருள்?

Answer: பளபளப்பான கல்

7. மீட்சி என்பதன் பொருள்?

Answer: விடுதலை

8. நாவை என்பதன் பொருள்?

Answer: குற்றம்

9. படி என்பதன் பொருள்?

Answer: உலகம்

10. இலக்கணக்குறிப்பு: - ஓதுக, பேசிடுக, ஆழ்க, வாழிய -

Answer: வியங்கோள் வினைமுற்று

1

11. அலைகடல் -

Answer: வினைத்தொகை

12. தமிழ்க்கவிஞர் -

Answer: இருபெயரொட்டுப் பண்புத்தொகை

13. பேரன்பு, நெடுங்குன்று -

Answer: பண்புத்தொகை

14. ஒழிதல் -

Answer: தொழிற்பெயர்

15. உழுதுழுது -

Answer: அடுக்குத்தொடர்

16. பிரித்து எழுதுக: - நீரோடை -

Answer: நீர் + ஓடை

17. சிற்றூர் -

Answer: சிறுமை + ஊர்

18. கற்பிளந்து -

Answer: கல் + பிளந்து

19. மணிக்குளம் -

Answer: மணி + குளம்

20. புவியாட்சி -

Answer: புவி + ஆட்சி

2

21. ஒரு மூல மொழிப் பிரதியின் உள்ளடக்கத்தை அப்பிரதிக்கு இணையான இலக்கு மொழிப் பிரதியின் வழியாக வெளிப்படுத்துதலே?

Answer: மொழிப்பெயர்ப்பு

22. மொழிபெயர்ப்பின் வகைகள் யாவை?

Answer: மொழிபெயர்ப்பு, தழுவல், சுருக்கம், மொழியாக்கம்

23. 'அந்நியன்' என்ற பிரெஞ்சு மொழி நூலை எழுதியவர் யார்?

Answer: ஆல்பர் காம்யு

24. 'உருமாற்றம்' என்ற நூலை ஜெர்மன் மொழியில் எழுதியவர் யார்?

Answer: காப்பா

25. 'சொற்கள்' என்ற நூலை எழுதியவர் யார்?

Answer: ழாக் பிரேவர்

26. 'உலகக் கவிதைகள்' என்ற நூலை எழுதியவர் யார்?

Answer: பிரம்மராஜன்

27. 'love poems from Tamil anthology' என்ற நூலை எழுதியவர் யார்?

Answer: ஏ. கே. ராமானுஜம்

28. 'hues and Harmonies from an Ancient land' என்ற நூலை எழுதியவர்?

Answer: ம. லெ. தங்கப்பா

29. 1937 ஆண்டு வடமொழியில் உள்ள பில்கணீயம் என்னும் நூலை தழுவி பாரதிதாசனால் இயற்றப்பட்ட நூல் எது?

Answer: புரட்சிக்கவி

30. பாரதியார் மீது கொண்ட பற்றின் காரணமாக தனது பெயரை பாரதிதாசன் என மாற்றிக்கொண்டவர் யார்?

Answer: கனக சுப்புரத்தினம்

3

31. புரட்சிக்கவிஞர், பாவேந்தர் என்றும் சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுபவர்?

Answer: பாரதிதாசன்

32. பிரெஞ்சு மொழியில் உள்ள தொழிலாளர் சட்டத்தை தமிழில் தந்தவர்?

Answer: பாரதிதாசன்

33. குடும்ப விளக்கு, பாண்டியன் பரிசு, இருந்த வீடு, சேர தாண்டவம் போன்ற நூல்களை எழுதியவர்?

Answer: பாரதிதாசன்

34. குயில் என்னும் இலக்கிய இதழை நடத்தியவர் யார்?

Answer: பாரதிதாசன்

35. பாரதிதாசன் எந்த நாடக நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றார்?

Answer: பிசிராந்தையார்

36. 'வாழ்வினில் செம்மையை செய்பவள் நீயே' என்ற பாரதிதாசனின் பாடலை தமிழ்தாய் வாழ்த்தாக ஏற்றுக்கொண்டுள்ள அரசு?

Answer: புதுச்சேரி

37. பாரதிதாசன் பல்கலைக்கழகம் எங்கு உள்ளது?

Answer: திருச்சி

4

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்