11 ஆம் வகுப்பு - செய்யுள் - நாடு-சமூகம்-அரசு-நிருவாகம் - இயல் எட்டு - வையத்-தலைமை-கொள் - பதிற்றுப்-பத்து

  Play Audio

1. உறுபசியும் ஓவாப்பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு என்று குறிப்பிட்டவர்?

Answer: திருவள்ளுவர்

2. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் பெற்றோர் யார்?

Answer: உதியன் சேரலாதன், வேண்மாள்

3. இமயமலை வரை படையெடுத்து சென்று, வெற்றி பெற்று, இமயத்தில் வில்லினை பொறித்தவன் யார்?

Answer: இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்

4. கடம்பர்களை வென்று தன் வீரர்களுக்கு கவசமாக விளங்கியவன் யார்?

Answer: இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்

5. பதிற்றுப்பத்து நூலில் இரண்டாம் பத்தினை பாடியவர் யார்?

Answer: இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்

6. பதிற்றுப்பத்து நூலில் இரண்டாம் பத்து எந்த சிறப்பை பற்றி கூறுகிறது?

Answer: இமயவரம்பன் நெடுஞ்செரலாதன்

7. "மண்ணுடைய ஞாலத்து மன்னுயிர்க்கு எஞ்சாது ஈத்துக்கை தண்டாக் கைகூடும்" என்ற பதிற்றுப்பத்து பாடலை பாடியவர்?

Answer: குமட்டூர் கண்ணனார்

8. பாடாண் திணைக்கு புறனான திணை எது?

Answer: கைக்கிளை

9. ஒரு மன்னனின் புகழ், வலிமை, வள்ளன்மை, அருள் முதலானவற்றை ஆய்ந்து கூறுவது?

Answer: பாடாண்திணை

10. "உலகினுள் இயற்கை வகையான இயன்ற மக்களை பாடுதல்" பற்றி கூறும் துறை எது?

Answer: செந்துறை பாடாண்பாட்டு துறை

1

11. "வண்ணந் தாமே நாலைந் தென்பா" என்று கூறும் நூல் எது?

Answer: தொல்காப்பியம்

12. வண்ணம் என்பது?

Answer: சாந்த வேறுபாடு ஆகும்

13. "ஒழுகு வண்ண மோசையி னொழுகும்"என்று கூறும் நூல் எது?

Answer: தொல்காப்பியம்

14. ஒழுகு வண்ணம் என்பது?

Answer: ஒழுகிய ஓசையாற் செல்வதுமாகும்

15. வஞ்சித் தூக்கே செந்தூக் கியற்றே" என்று கூறும் நூல் எது?

Answer: தொல்காப்பியம்

16. 'தூக்கு' என்பது செய்யுளின் ----- ஐ வரையறை செய்வதாகும்?

Answer: அடி

17. செந்தூக்கு என்பது ----- போன்று அமையும்?

Answer: வஞ்சிப்பாவின் இறுதியடி, ஆசிரியப்பாவின் இறுதியடி

18. சொல்லும் பொருளும்: - பதி -

Answer: நாடு

19. பிழைப்பு -

Answer: வாழ்தல்

20. நிரையம் -

Answer: நரகம்

2

21. ஒரீஇய -

Answer: நோய் நீக்கிய

22. புரையோர் -

Answer: சான்றோர்

23. யாணர் -

Answer: புது வருவாய்

24. மருண்டெனன் -

Answer: வியப்படைந்தேன்

25. மன்னுயிர் -

Answer: நிலைபெற்றுள்ள உயிர்த்தொகுதி

26. தண்டா -

Answer: ஓயாத

27. கடுந்துப்பு -

Answer: முகுவலிமை

28. ஏமம் -

Answer: பாதுகாப்பு

29. ஓடியா -

Answer: குறையா

30. நயந்து -

Answer: விரும்பிய

3

31. இலக்கண குறிப்பு: - துய்த்தல் -

Answer: தொழிற்பெயர்

32. ஒரீஇய -

Answer: சொல்லிசை அளபெடை

33. புகழ்ப்பண்பு -

Answer: வினைத்தொகை

34. நன்னாடு -

Answer: பண்புத்தொகை

35. மருண்டனென் -

Answer: தன்மை ஒருமை வினைமுற்று

36. ஓடியா -

Answer: ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்

37. பிரித்து எழுதுக: - மண்ணுடை -

Answer: மண் + உடை

38. புறந்தருதல் -

Answer: புறம் + தருதல்

39. எட்டுத்தொகையில் அமைந்த புறத்திணை நூல்களுள் ஒன்று?

Answer: பதிற்றுப்பத்து

40. சேர மன்னர்களின் பத்துபேரின் சிறப்புகளை கூறும் நூல்?

Answer: பதிற்றுப்பத்து

4

41. பதிற்றுப்பத்து ----- திணையில் அமைந்து உள்ளது?

Answer: பாடாண்திணை

42. பதிற்றுப்பத்து எப்பகுதியில் கிடைக்கவில்லை?

Answer: முதல் பத்தும், இறுதிப்பத்து

43. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் புகழ்ந்துபாடி உம்பற்காட்டில் 500 ஊர்களையும், தென்னாட்டு வருவாயுள் பாதியையும் பரிசாக பெற்றவர்?

Answer: குமட்டூர்க் கண்ணனார்

5

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்