11 ஆம் வகுப்பு - செய்யுள் - கலை-அழகியல்-புதுமைகள்- - இயல் ஏழு - பல்கலை-நிறுவு - திருச்சாழல்

  Play Audio

1. மொழி விளையாட்டின் மூலம் இறைவனின் பெருமை பேசும் செய்யுள் வகை யாது?

Answer: திருச்சாழல்

2. 'கோயில் சுடுகாடு கொல்புலித்தோல் நல்லாடை தாயுமிலி தந்தையிலி தான்தனியன் காணோடீ'என்ற பாடலை இயற்றியவர் யார்?

Answer: மாணிக்கவாசகர்

3. சொல்லும் பொருளும்: காயில் -

Answer: வெகுண்டால்

4. அந்தம் -

Answer: முடிவு

5. அயன் -

Answer: பிரமன்

6. மால் -

Answer: விஷ்ணு

7. ஆலாலம் -

Answer: நஞ்சு

8. இலக்கணக்குறிப்பு: சுடுகாடு, கொல்புலி, குரைகடல் -

Answer: வினைத்தொகை

9. நல்லாடை -

Answer: பண்புத்தொகை

10. பிரித்து எழுதுக'கற்பொடி '?

Answer: கல் + பொடி

1

11. பிரித்து எழுதுக 'உலகனைத்தும்'?

Answer: உலகு + அனைத்தும்

12. பிரித்து எழுதுக 'திருவடி'?

Answer: திரு + அடி

13. திருவாசகம் என்பது ----- மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும்?

Answer: சிவபெருமான்

14. திருவாசகத்தை இயற்றியவர் யார்?

Answer: மாணிக்கவாசகர்

15. சைவ சமயத்தின் 12 திருமுறைகளில் திருவாசகம் எத்தனையாவது திருமுறை?

Answer: 8

16. திருவாசகத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை?

Answer: 658

17. திருவாசகத்தில் எத்தனை சிவத்தலங்கள் பற்றி பாடப்பட்டு உள்ளன?

Answer: 38 சிவத்தலங்கள்

18. திருவாசகத்தில் உள்ள திருப்பதிகங்களின் எண்ணிக்கை?

Answer: 51

19. பக்திச் சுவையும் மனத்தை உருக்கும் தன்மையும் கொண்டவை ----- பாடல்கள்?

Answer: திருவாசகப் பாடல்கள்

20. 'திருவாசகத்திற்கு உருகார் ஒருவாசகத்திற்கும் உருகார்' என்பது?

Answer: முதுமொழி

2

21. திருச்சாழல் முழுமையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?

Answer: ஜி. யு. போப்

22. திருச்சாழல் சிவபெருமானின் எக்கோவிலில் பாடப்பட்டது?

Answer: தில்லை கோவில்

23. மாணிக்கவாசகர் எங்கு பிறந்தார்?

Answer: திருவாதவூர்

24. மாணிக்கவாசகர் சைவ சமய குறவர் ----- ஒருவர்?

Answer: நால்வரில்

25. அரிமர்த்ததான பாண்டியனிடம் தலைமை அமைச்சராக பணியாற்றியவர் யார்?

Answer: மாணிக்கவாசகர்

26. திருவாசகம், திருக்கோவையார் போன்ற நூல்களை இயற்றியவர் யார்?

Answer: மாணிக்கவாசகர்

3

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்