11 ஆம் வகுப்பு - செய்யுள் - கலை-அழகியல்-புதுமைகள்- - இயல் ஏழு - பல்கலை-நிறுவு - குற்றாலக்-குறவஞ்சி

  Play Audio

1. இசைத்தமிழின் இனிமையையும் நாடகத்தமிழின் எழிலினையும் ஒருங்கேகொண்டு முத்தமிழ் காவியமாக திகழ்வது?

Answer: குற்றாலக் குறவஞ்சி

2. குறவஞ்சி என்பது ஒரு வகை ----- வடிவமாகும்?

Answer: இலக்கிய

3. குறவஞ்சி ----- வகை இலக்கியங்களுள் ஒன்று?

Answer: சிற்றிலக்கியம்

4. குற்றாலக் குறவஞ்சி ----- என்றும் அழைக்கப்படுகிறது?

Answer: குறத்திப்பாட்டு

5. சொல்லும் பொருளும்: கொத்து -

Answer: பூமாலை

6. குழல் -

Answer: கூந்தல்

7. நாங்கூழ் -

Answer: மண்புழு

8. கோலத்து நாட்டார் -

Answer: கலிங்க நாட்டார்

9. வரிசை -

Answer: சன்மானம்

10. இலக்கணக்குறிப்பு: மாண்ட தவளை -

Answer: பெயரெச்சம்

1

11. பிரித்து எழுதுக 'பயமில்லை'?

Answer: பயம் + இல்லை

12. குற்றாலம் ஊர் எங்கு அமைந்துள்ளது?

Answer: தென்காசி

13. குற்றாலக் குறவஞ்சியை இயற்றியது :யார்?

Answer: திரிகூடராசப்பக் கவிராயர்

14. திரிகூட ராசப்ப கவிராயரின் 'கவிதை கிரீடம்' என போற்றப்படும் நூல் எது?

Answer: குற்றாலக் குறவஞ்சி

15. திரிகூட ராசப்ப கவிராயர் எங்கு பிறந்தார்?

Answer: திருநெல்வேலி

16. திரிகூட ராசப்ப கவிராயர் யாருடைய விருப்பத்திற்கு இணங்க குற்றால குறவஞ்சியை பாடி அரங்கேற்றினார்?

Answer: மதுரை முத்துவிசயரங்க சொக்கலிங்கனார்

17. குற்றாலநாதர் கோவிலில் பணிபுரியும் காலத்தில் சைவசமய கல்வியிலும் இலக்கிய இலக்கணங்களிலும் தேர்ச்சி பெற்றவர் யார்?

Answer: திரிகூட ராசப்ப கவிராயர்

18. திருக்குற்றாலநாதர் கோவில் வித்துவான் என்று சிறப்பு பட்டப்பெயர் பெற்றவர் யார்?

Answer: திரிகூட ராசப்ப கவிராயர்

19. குற்றாலத்தின் மீது தலபுராணம், மாலை, சிலேடை, பிள்ளைத்தமிழ், யமக அந்தாதி போன்ற நூல்களை இயற்றியவர் யார்?

Answer: திரிகூட ராசப்ப கவிராயர்

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்