11 ஆம் வகுப்பு - செய்யுள் - கல்வி - இயல் ஐந்து - கேடில்-விழுச்செல்வம் - நற்றிணை

  Play Audio

1. வறுமையிலும் செம்மையாய் வாழ அறிவுறுத்துவது?

Answer: கல்வி

2. "பரிஇ மெலிந்துஒழிய பந்தர் ஓடி ஏவல் மறுக்கும் சிறுவிளை யாட்டி"

Answer: என்ற நற்றிணை பாடலை இயற்றியவர் யார்?

3. "மனைமருட்சி" என அழைக்கப்படும் துறை எது?

Answer: மகள் நிலை உரைத்தல்

4. விளையாட்டுப் பருவம் மாறாத மகள் இல்லறம் ஆற்றும் பாங்கை கூறும் துறை எது?

Answer: மனைமருட்சி

5. பிரசம் என்ற சொல்லின் பொருள்?

Answer: தேன்

6. புடைத்தல் என்ற சொல்லின் பொருள் என்ன?

Answer: கோல்கொண்டு ஒச்சுதல்

7. கொழுநன் குடி என்ற சொல்லின் பொருள் என்ன?

Answer: கணவனுடைய வீடு

8. வறன் என்ற சொல்லின் பொருள் என்ன?

Answer: வறுமை

9. கொழுஞ்சோறு என்ற சொல்லின் பொருள் என்ன?

Answer: பெருஞ்செல்வம்

10. உள்ளாள் என்ற சொல்லின் பொருள்?

Answer: நிலையாள்

1

11. மதுகை என்பதன் பொருள் என்ன?

Answer: பெருமிதம்

12. இலக்கணக்குறிப்பு: - வெண்சுவை, தீம்பால் -

Answer: பண்புத்தொகை

13. விரிகதிர், ஒழுகுநீர் -

Answer: வினைத்தொகை

14. பொற்கலம், பொற்சிலம்பு -

Answer: மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத்தொகை

15. கொண்ட -

Answer: பெயரெச்சம்

16. அறிவும் ஒழுக்கமும் -

Answer: எண்ணும்மை

17. பந்தர் -

Answer: பந்தல் என்னும் ஈற்றுப்போலி

18. பிரித்து எழுதுக சிறுகோள்?

Answer: சிறுமை + கோல்

19. பிரித்து எழுதுக பொற்சிலம்பு?

Answer: பொன் + சிலம்பு

20. எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று?

Answer: நற்றிணை

2

21. எட்டுத்தொகையில் முதலாவதாக வைத்து பாடப்படும் நூல்?

Answer: நற்றிணை

22. 'நல்ல திணை' என்ற அடைமொழியால் அழைக்கப்படும் நூல் எது?

Answer: நற்றிணை

23. நற்றிணையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை?

Answer: 400

24. நற்றிணையின் அடிவரையறை?

Answer: 9அடி சிற்றெல்லை 12 அடி பேரில்லை

25. நற்றிணையை தொகுப்பித்தவர்?

Answer: பன்னாடு தந்த மாறன் வழுதி

26. நற்றிணையில் கடவுள் வாழ்த்து பாடலை பாடியவர்?

Answer: பாரதம் பாடிய பெருந்தேவனார்

27. நற்றிணையில் 11ஆம் பாடலை மட்டும் பாடியவர் யார்?

Answer: போதனார்

28. நற்றிணையில் பேரெல்லை 12 அடி இருப்பினும் விதிவிலக்காக 13 அடிகளை கொண்ட ஒரே பாடல்?

Answer: 110ம் பாடல்

3

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்