11 ஆம் வகுப்பு - செய்யுள் - பண்பாடு - இயல் மூன்று - பீடு-பெற-நில் - புறநானூறு

  Play Audio

1. தமிழரின் வாழ்வியல் கருவூலமாக கருதப்படும் நூல்?

Answer: புறனாநூறு

2. 'செஞ்ஞா யிற்று செலவும் அஞ்ஞா யிற்று பரிப்பும்" என்ற பாடல்வரியை இயற்றியவர் யார்?

Answer: உறையூர் முதுகண்ணன் சாத்தனார்

3. ஒரு வேந்தன் எதிர்சென்று அவன் தன்மையை குறி புகழ்வது?

Answer: இயன்மொழித் துறை

4. பாடாண் திணை என்றல் என்ன?

Answer: பாடப்படும் ஆண்மகனின் சிறப்புகளை கூறுதல்

5. செலவு என்பதன் பொருள்?

Answer: வழி

6. பரிப்பு என்பதன் பொருள்?

Answer: இயக்கம்

7. துப்பு என்பதன் பொருள்?

Answer: வலிமை

8. கூம்பு என்பதன் பொருள்?

Answer: பாய்மரம்

9. புகாஅர் என்பதன் பொருள்?

Answer: ஆற்றுமுகம்

10. தகாஅர் என்ற சொல்லின் பொருள்?

Answer: தகுதியில்லார்

1

11. பல்தாரத்த என்பதன் பொருள்?

Answer: பல்வகைப்பட்ட

12. இலக்கணக்குறிப்பு: - செஞ்ஞாயிறு, பெருங்கலம், பெருவழி -

Answer: பண்புத்தொகை

13. சூழ்ந்த, புகுந்த -

Answer: பெயரெச்சங்கள்

14. நிலைஇய -

Answer: சொல்லிசை அளபெடை

15. தகாஅர், புகாஅர் -

Answer: இசைநிறை அளபெடைகள்

16. எரிகல் -

Answer: வினைத்தொகை

17. பிரித்து எழுதுக என்றிவை?

Answer: என்று + இவை

18. பிரித்து எழுதுக பெருங்கலகம்?

Answer: பெருமை + கழகம்

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்