11 ஆம் வகுப்பு - செய்யுள் - பண்பாடு - இயல் மூன்று - பீடு-பெற-நில் - குறுந்தொகை

  Play Audio

1. அகத்திணை இலக்கணத்தின் இலக்கியமாய் விளங்கும் நூல்?

Answer: குறுந்தொகை

2. 'அம்ம வாழி தோழி நம்மூர் பிரிந்தோர் புணர்ப்போர்' என்ற குறுந்தொகை பாடலை இயற்றியவர் யார்?

Answer: வெள்ளிவீதியார்

3. 'அம்ம வாழி தோழி நம்மூர் பிரிந்தோர் புணர்ப்போர்' என்ற குறுந்தொகை பாடலில் உள்ள திணை?

Answer: குறிஞ்சித்திணை

4. சிதவல் என்பதன் பொருள்?

Answer: தலைப்பாகை

5. தண்டு என்பதன் பொருள்?

Answer: ஊன்றுகோல்

6. பிரிந்ததோர் இலக்கணக்குறிப்பு தருக?

Answer: வினையாலணையும் பெயர்

7. நன்று நன்று இலக்கணக்குறிப்பு

Answer: :அடுக்குத்தொடர்

8. பிரித்து எழுதுக தண்டுடை

Answer: தண்டு + உடை

9. எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று?

Answer: குறுந்தொகை

10. குறுந்தொகையின் சிறப்பு பெயர்?

Answer: நல்ல குறுந்தொகை

1

11. உரையாசிரியர்களால் அதிகம் மேற்கோள் கட்டப்பட்ட நூல்?

Answer: குறுந்தொகை

12. முதலில் தொகுக்கப்பட்ட தொகை நூல்?

Answer: குறுந்தொகை

13. குறுந்தொகை நூலை தொகுத்தவர்?

Answer: பூரிக்கோ

14. குறுந்தொகை நூலில் கடவுள் வாழ்த்து பாடலை பாடியவர்?

Answer: பாரதம் பாடிய பெருந்தேவனார்

15. சங்ககால பெண்புலவரான வெள்ளிவீதியார் சங்க தொகை நூல்களில் எத்தனை பாடல்களை பாடியுள்ளார்?

Answer: 13

16. தமிழரின் வாழ்வியல் கருவூலம் யானா அழைக்கப்படும் நூல் எது?

Answer: புறநானூறு

17. "உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர் அமிழ்தம்" என்ற பாடல் வரி இடம்பெற்ற நூல்?

Answer: புறநானூறு

18. தமெக்கென முயலா நோன்றல் பிறர்க்கென முயலுநர் உண்மைதானே என்ற புறநானூறு பாடலை பாடியவர்?

Answer: கடலுள் மாய்ந்த இளம்பெறுவழுதி

19. வெட்சி முதல் பாடாண் வரை உள்ள திணைகளில் கூறப்படாத செய்திகளையும் பிற பொதுவான செய்திகளை தொகுத்து கூறுவது?

Answer: பொதுவியல் திணையாகும்

20. மக்களுக்கு நலம் செய்யும் வாழ்வியல் நெறிகளை எடுத்து கூறுதல் ----- துறையாகும்?

Answer: பொருண்மொழிக்காஞ்சி துறை

2

21. தமியர் என்னும் சொல்லின் பொருள் என்ன?

Answer: தனித்தவர்

22. முனிதல் என்னும் சொல்லின் பொருள் என்ன?

Answer: வெறுத்தல்

23. துஞ்சல் என்னும் சொல்லின் பொருள் என்ன?

Answer: சோம்பல்

24. அயர்வு என்னும் சொல்லின் பொருள் என்ன?

Answer: சோர்வு

25. மாட்சி என்னும் சொல்லின் பொருள் என்ன?

Answer: பெருமை

26. நோன்மை என்னும் சொல்லின் பொருள் என்ன?

Answer: வலிமை

27. தாள் என்னும் சொல்லின் பொருள் என்ன?

Answer: முயற்சி

28. அம்ம என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?

Answer: அசைநிலை

29. உண்டல், துஞ்சல் என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?

Answer: தொழிற்பெயர்

30. முயலா என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?

Answer: ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்

3

31. இயைவதாயினும் பிரித்து எழுதுக?

Answer: இயைவது + ஆயினும்

32. புகலெனில் பிரித்து எழுதுக?

Answer: புகழ் + எனில்

33. புறனானூற்றை உ. வே. சா. முதன் முதலில் பதிப்பித்து வெளியிட்ட ஆண்டு?

Answer: 1894

34. எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று?

Answer: புறநானூறு

35. புறநானூற்றில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை?

Answer: 400

36. புறம், புறப்பாட்டுயென அழைக்கப்படும் நூல் எது?

Answer: புறநானூறு

37. புறநானூறு பாடல்கள் எந்த வகை பாவால் ஆனது?

Answer: அகவற்பா

38. சங்க காலத்தில் வாழ்ந்த அரசர்களையும், மக்களின் சமூக வாழ்க்கையும் கூறும் நூல்?

Answer: புறநானூறு

39. கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி எழுதிய சங்க பாடல்களின் எண்ணிக்கை?

Answer: புறநானூறு - 1, பரிபாடல் - 1

4

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்