6 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - நாகரிகம்-பண்பாடு - இயல் ஐந்து - பாடறிந்து ஒழுகுதல் - மயங்கொலிகள்

  Play Audio

1. உச்சரிப்பில் சிறிதளவு மட்டுமே வேறுபாடு உள்ள ஒலிகளை ----- என்கிறோம்?

Answer: மயங்கொலிகள்

2. மயங்கொலி எழுத்துகள் மொத்தம் எத்தனை?

Answer: 8. அவை: ண, ன, ந ல, ழ, ள ர, ற

3. நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் நடுப் பகுதியையைத் தொடுவதால் பிறக்கும் எழுத்து எது?

Answer: ண

4. நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் முன் பகுதியைத் தொடுவதால் பிறக்கும் எழுத்து எது?

Answer: ன

5. நாவின் நுனி மேல்வாய்ப் பல்லின் அடிப் பகுதியைத் தொடுவதால் பிறக்கும் எழுத்து எது?

Answer: ந

6. டகரத்தை அடுத்து வரும் ணகரம் ----- என்று அழைக்கப்படுகிறது?

Answer: டண்ணகரம்

7. தகரதரத்தை அடுத்து வரும் நகரம் ----- என்று அழைக்கப்படுகிறது?

Answer: தந்நகரம்

8. றகரதரத்தை அடுத்து வரும் னகரம் ----- என்று அழைக்கப்படுகிறது?

Answer: றன்னகரம்

9. "ட" என்னும் எழுத்துக்கு முன் "ண்" வரும் அதற்கு எடுத்துக்காட்டு தருக?

Answer: கண்டம், வண்டி, நண்டு

10. "ற" என்னும் எழுத்துக்கு முன் "ன்" வரும் அதற்கு எடுத்துக்காட்டு தருக?

Answer: மன்றம், நன்றி, கன்று

1

11. ணகரம் வர வேண்டிய இடத்தில் னகரம் எழுதப்படுமானால் பொருள் மாறுபடும் அதற்கு எடுத்துக்காட்டு தருக?

Answer: வாணம் – வெடி, பணி - வேலை வானம் - ஆகாயம் பனி – குளிர்ச்சி

12. நாவின் இருபக்கங்கள் தடித்து மேல் பற்களின் அடியைத் தொடுவதால் தோன்றும் எழுத்து எது?

Answer: ல

13. நாவின் இருபக்கங்கள் தடித்து மேல் அண்ணத்தின் நடுப்பகுதியைத் தொடுவதால் தோன்றும் எழுத்து எது?

Answer: ள

14. நாவின் நுனி மேல்நோக்கி வளைந்து வருடுவதால் தோன்றும் எழுத்து எது?

Answer: ழ

15. பொருள் வேறுபாடு உணர்க: - விலை

Answer: பொருளின் மதிப்பு

16. இலை

Answer: செடியின் இலை

17. விளை

Answer: உண்டாக்குதல்

18. இளை

Answer: மெலிந்து போதல்

19. விழை

Answer: விரும்பு

20. இழை

Answer: நூல் இழை

21. நாவின் நுனி மேல் அண்ணத்தில் முதல் பகுதியைத் தொட்டு வருவதால் தோன்றும் எழுத்து எது?

Answer: ர

22. நாவின் நுனி மேல் அண்ணத்தில் மையப்பகுதியை உரசுவதால் தோன்றும் எழுத்து எது?

Answer: ற

23. பொருள் வேறுபாடு உணர்க: - ஏரி

Answer: நீர்நிலை

24. கூரை

Answer: வீட்டின் கூரை

25. ஏறி

Answer: மேலே ஏறி

26. கூறை

Answer: புடவை

2

27. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: சிரம் என்பது ----- (தலை / தளை) ?

Answer: தலை

28. இலைக்கு வேறு பெயர் ----- (தளை / தழை) ?

Answer: தழை

29. வண்டி இழுப்பது ----- (காலை / காளை) ?

Answer: காளை

30. கடலுக்கு வேறு பெயர் ----- (பரவை / பறவை) ?

Answer: பரவை

31. பறவை வானில் ----- (பறந்தது / பரந்தது) ?

Answer: பறந்தது

32. கதவை மெல்லத் ----- (திறந்தான் / திரந்தான்) ?

Answer: திறந்தான்

33. பூ ----- வீசும். (மனம் /மணம்) ?

Answer: மணம்

34. புலியின் ----- சிவந்து காணப்படும். (கன் /கண்) ?

Answer: கண்

35. குழந்தைகள் ----- விளையாடினர். (பந்து /பன்து) ?

Answer: பந்து

36. வீட்டு வாசலில் ----- போட்டனர். (கோலம் / கோளம்) ?

Answer: கோலம்

3

37. Welcome ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

Answer: நல்வரவு

38. Readymade Dress ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

Answer: ஆயத்த ஆடை

39. Sculptures ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

Answer: சிற்பங்கள்

40. Makeup ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

Answer: ஒப்பனை

41. Chips ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

Answer: சில்லுகள்

42. Tiffin ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

Answer: சிற்றுண்டி

4

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்