6 ஆம் வகுப்பு - முதல் பருவம் - இயற்கை - இயல் இரண்டு - இயற்கை-இன்பம் - சிறகின்-ஓசை

  Play Audio

1. பறவைகள் இடம் பெயர்தலை எவ்வாறு அழைப்பர்?

Answer: வலசை போதல்

2. பெரும்பாலும் எந்த வகை பறவைகள் வலசை போகின்றன?

Answer: நீர்வாழ் பறவைகள்

3. பறவைகள் எவற்றிற்காக இடம் பெயர்கின்றன?

Answer: உணவு, இருப்பிடம், தட்பவெப்பநிலை மாற்றம், இனப்பெருக்கம்

4. பறவைகள் எவற்றை அடிப்படையாக கொண்டு இடம் பெயர்கின்றன?

Answer: நிலவு, விண்மீன், புவிஈர்ப்புப் புலம்

5. பறவைகள் பொதுவாக எத்திசையில் வலசை செல்கின்றன?

Answer: வடக்கிலிருந்து தெற்கு நோக்கியும், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியும்

6. சிறகடிக்காமல் கடலையும் தாண்டிப் பறக்கும் பறவை எது?

Answer: கப்பல் பறவை

7. கப்பல் பறவை தரை இறங்காமால் எத்தனை கிலோமீட்டர் வரை பறக்கும்?

Answer: 400 கிலோமீட்டர்

8. கப்பல் பறவைக்கு வழங்கும் வேறு பெயர்கள் என்ன?

Answer: கப்பல் கூழைக்கடா, கடற்கொள்ளைப் பறவை

9. "நாராய், நாராய், செங்கால் நாராய்" என்னும் பாடலை எழுதியவர் யார்?

Answer: சத்திமுத்தப்புலவர்

10. "தென்திசைக் குமரிஆடி வடதிசைக்கு ஏகுவீர் ஆயின்" என்னும் பாடலை எழுதியவர் யார்?

Answer: சத்திமுத்தப்புலவர்

1

11. சத்திமுத்தப்புலவர் எத்தனை ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்?

Answer: ஏறத்தாழ 1500 ஆண்டுகளுக்கு முன்

12. “தென்திசைக் குமரிஆடி வடதிசைக்கு ஏகுவீர் ஆயின்” என்னும் அடிகள் எந்த செய்தியைக் குறிப்பிடுகின்றன?

Answer: பறவைகள் வலசை வந்த செய்தி

13. ஐரோப்பாவில் இருந்து தமிழகத்திற்குச் எந்த பறவைகள் வருவது தற்போதைய ஆய்விலும் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது?

Answer: செங்கால் நாரைகள்

14. தற்போது வெகுவாக அழிந்து வரும் பறவையினம் எது?

Answer: சிட்டுக்குருவி

15. ஆண் சிட்டுக்குருவியின் தொண்டைப்பகுதி எந்த நிறத்தில் இருக்கும்?

Answer: கருப்பு நிறத்தில்

16. ஆண் சிட்டுக்குருவியின் உடல்ப்பகுதி எந்த நிறத்தில் இருக்கும்?

Answer: அடர்பழுப்பு நிறம்

17. பெண் சிட்டுக்குருவியின் உடல்ப்பகுதி எந்த நிறத்தில் இருக்கும்?

Answer: மங்கிய பழுப்பு நிறம்

18. சிட்டுக்குருவி எப்படி வாழும் பறவையினத்தைச் சார்ந்தது?

Answer: கூடுகட்டி

19. கூடுகட்டிய பின் சிட்டுக்குருவி எத்தனை முட்டைகள் வரை இடும்?

Answer: மூன்று முதல் ஆறு முட்டைகள்

20. சிட்டுக்குருவி எத்தனை நாட்கள் அடைகாக்கும்?

Answer: 14 நாட்கள்

2

21. இமயமலைத் தொடரில் எத்தனை மீட்டர் உயரத்தில் கூட பறவைகள் வாழ்கின்றன?

Answer: 4000 மீட்டர்

22. சிட்டுக்குருவியின் வாழ்நாள் எத்தனை வருடங்கள் ஆகும்?

Answer: பத்து முதல் பதின்மூன்று ஆண்டுகள்

23. இந்தியாவின் பறவை மனிதர் என்று அழைக்கப்படுபவர் யார்?

Answer: டாக்டர் சலீம் அலி

24. இன்றைய பறவையியல் ஆய்வாளர்களுக்கு முன்னோடி யார்?

Answer: டாக்டர் சலீம் அலி

25. தன் வாழ்க்கை வரலாற்று நூலுக்குச் "சிட்டுக்குருவியின் வீழ்ச்சி" என்று பெயரிட்டவர் யார்?

Answer: டாக்டர் சலீம் அலி

26. "காக்கை குருவி எங்கள் சாதி" என்று கூறியவர் யார்?

Answer: பாரதியார்

27. உலகிலேயே நெடுந்தொலைவு அதாவது 22000 கி. மீ பயணம் செய்யும் பறவை எது?

Answer: ஆர்டிக் ஆலா

28. பறவை பற்றிய படிப்பு?

Answer: ஆர்னித்தலாஜி

29. உலக சிட்டுக்குருவிகள் நாள்?

Answer: மார்ச் 20

30. தட்பவெப்பம் பிரித்து எழுதுக?

Answer: தட்பம் + வெப்பம்

3

31. வேதியுரங்கள் பிரித்து எழுதுக?

Answer: வேதி + உரங்கள்

32. தரை + இறங்கும் சேர்த்து எழுதுக?

Answer: தரையிறங்கும்

33. வழி + தடம் சேர்த்து எழுதுக?

Answer: வழித்தடம்

34. சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி எது?

Answer: துருவப்பகுதி

35. பறவைகளின் வலசை போகக் காரணங்களுள் ஒன்று?

Answer: தட்பவெப்பநிலை

36. மிக நீண்ட தொலைவு பறக்கும் பறவை எது?

Answer: ஆர்டிக் ஆலா

4

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்