6 ஆம் வகுப்பு - முதல் பருவம் - இயற்கை - இயல் இரண்டு - இயற்கை-இன்பம் - திருக்குறள்

  Play Audio

1. மக்கள் பயனுள்ள முறையில் வாழ வழிகாட்டிகளாக அமைபவை எவை?

Answer: அறநூல்கள்

2. அறநூல்களில் ‘உலகப் பொது மறை‘ என்று போற்றப்படும் சிறப்புப் பெற்ற நூல் எது?

Answer: திருக்குறள்

3. ஏழு சொற்களில் மனிதர்களுக்கு அறத்தைக் கற்றுத்தரும் நூல் எது?

Answer: திருக்குறள்

4. திருவள்ளுவர் எத்தனை ஆண்டுகளுக்கு முற்பட்டவர்?

Answer: இரண்டாயிரம்

5. எக்காலத்துக்கும் பொருந்தும் வாழ்க்கை நெறிகளை வகுத்துக் கூறியவர் யார்?

Answer: திருவள்ளுவர்

6. வான்புகழ் வள்ளுவர், தெய்வப்புலவர், பொய்யில் புலவர் முதலிய பல சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுபவர் யார்?

Answer: திருவள்ளுவர்

7. திருக்குறள் எத்தனை பிரிவுகளைக் கொண்டது?

Answer: மூன்று (அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால்)

8. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று?

Answer: திருக்குறள்

9. திருக்குறள் எத்தனை அதிகாரங்களை கொண்டது?

Answer: 133

10. திருக்குறள் எத்தனை குறள்பாக்களைக் கொண்டுள்ளது?

Answer: 1330

1

11. "இல்லாததும் இல்லை, சொல்லாததும் இல்லை” என்னும் வகையில் சிறந்து விளங்கும் நூல் எது?

Answer: திருக்குறள்

12. உலகப் பொதுமறை, வாயுறை வாழ்த்து முதலிய பல சிறப்புப் பெயர்கள் பெற்ற நூல் எது?

Answer: திருக்குறள்

13. நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள நூல் எது?

Answer: திருக்குறள்

14. ஒருவர்க்குச் சிறந்த அணி எது?

Answer: இன்சொல்

15. இனிய ----- இன்னாத கூறல் கனியிருப்பக் ----- கவர்ந் தற்று?

Answer: உளவாக, காய்கவர்ந்

16. அன்பிலார் ----- தமக்குரியர் அன்புடையார் ----- உரியர் பிறர்க்கு?

Answer: எல்லாம், என்பும்

17. ரியோ நகரில் மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற ஆண்டு எது?

Answer: 2016 ஆம் ஆண்டு

18. 2016 ஆம் ஆண்டு ரியோ நகரில் மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் பெற்றவர் யார்?

Answer: தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன்

19. கலைச்சொல் அறிவோம்: Continent

Answer: கண்டம்

20. Climate

Answer: தட்பவெப்பநிலை

21. Weather

Answer: வானிலை

22. Migration

Answer: வலசை

23. Sanctuary

Answer: புகலிடம்

24. Gravitational Field

Answer: புவிஈர்ப்புப்புலம்

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்