6 ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம் - மனிதம்-ஆளுமை - இயல் ஒன்பது - இன்னுயிர்-காப்போம் - அணி-இலக்கணம்

  Play Audio

1. அணி என்பதற்கு ----- என்பது பொருள்?

Answer: அழகு

2. கவிஞர் தமது கருத்தைச் சுவையோடு சொல்வதற்கு உதவுவது எது?

Answer: அணி

3. மருந்தைத் தேனில் கலந்து கொடுப்பது போல் கருத்துகளைச் சுவைபடக் கூறுவது எது?

Answer: அணி

4. ஒரு பொருளின் இயல்பை உள்ளது உள்ளபடியே அழகுடன் கூறுவது ----- அணி ஆகும்?

Answer: இயல்பு நவிற்சி அணி

5. இயல்பு நவிற்சி அணியின் வேறு பெயர் என்ன?

Answer: தன்மை நவிற்சி அணி "தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு அங்கே துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி" எனும் பாடலில் பயின்று வந்துள்ள அணியை கூறுக?

6. "தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு - அங்கே துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி" எனும் பாடலை இயற்றியவர் யார்?

Answer: கவிமணி தேசிக விநாயகனார்

7. ஒரு பொருளின் இயல்பை மிகைப்படுத்தி அழகுடன் கூறுவது ----- அணி ஆகும்?

Answer: உயர்வு நவிற்சி அணி

8. "ஆகாச கங்கை அனல் உறைக்குமென்று பாதாள கங்கையைப் பாடி அழைத்தார் உன் தாத்தா" எனும் பாடலில் பயின்று வந்துள்ள அணியை கூறுக?

Answer: உயர்வு நவிற்சி அணி

9. Humanity ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?

Answer: மனிதநேயம்

10. Mercy ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?

Answer: கருணை

11. Transplantation ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?

Answer: உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை

12. Nobel Prize ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?

Answer: நோபல் பரிசு

13. Lorry ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?

Answer: சரக்குந்து

1

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்