7 ஆம் வகுப்பு - முதல் பருவம் - மொழி - இயல் ஒன்று - அமுதத்தமிழ் - எங்கள்-தமிழ்

  Play Audio

1. "அருள்நெறி அறிவை தரலாகும் அதுவே தமிழன் குரலாகும்" என்ற பாடலை எழுதியவர் யார்?

Answer: நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்

2. "இன்பம் பொழிகிற வானொலியாம் எங்கள் தமிழனும் தேன்மொழியாம் "என்ற பாடலை எழுதியவர் யார்?

Answer: நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்

3. ஊக்கிவிடும் என்பதன் பொருள்?

Answer: ஊக்கப்படுத்தும்

4. விரதம் என்பதன் பொருள்?

Answer: நோன்பு

5. குறி என்பதன் பொருள்?

Answer: குறிக்கோள்

6. பொழிகிற என்பதன் பொருள்?

Answer: தருகின்ற

7. நாமக்கல் கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்?

Answer: கவிஞர் வெ. இராமலிங்கனர்

8. காந்தியக் கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்?

Answer: நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்

1

9. நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார் பன்முகத்தன்மை என்ன?

Answer: தமிழறிஞர், கவிஞர், விடுதலைப் போராட்ட வீரர்

10. தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞர் யார்?

Answer: நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்

11. மலைக்கள்ளன், நாமக்கல் கவிஞர் பாடல்கள், என்கதை, சங்கொலி போன்ற நூல்களை எழுதியவர்?

Answer: நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்

12. "கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது" என்று பாடியவர் யார்?

Answer: நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்

13. 'நெறி' என்னும் சொல்லின் பொருள்?

Answer: வழி

14. 'குரலாகும்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

Answer: குரல் + ஆகும்

15. வான் + ஒலி என்பதனைச் சேர்த்தழுதக் கிடைக்கும் சொல்?

Answer: வானொலி

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்