6 ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம் - மனிதம்-ஆளுமை - இயல் ஒன்பது - இன்னுயிர்-காப்போம் - மனிதநேயம்

  Play Audio

1. "தமக்கென முயலா நோன்றாள் - பிறர்க்கென முயலுநர் உண்மையானே" என்ற பாடல்வரிகள் இடம் பெற்றுள்ள வரிகள் எது?

Answer: புறநானூறு

2. வள்ளலார் சத்திய தருமச்சாலையைத் தொடங்கிய இடம் எது?

Answer: வடலூர்

3. “வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்” என்று கூறியவர் யார்?

Answer: வள்ளலார்

4. அன்னை தெரசாவிற்கு எந்த துறைக்கு நோபல் பரிசு கிடைத்தது?

Answer: அமைதிக்கான நோபல் பரிசு

5. அன்னை தெரசாவிற்கு அடுத்து அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இந்தியர் யார்?

Answer: கைலாஷ் சத்யார்த்தி

6. "வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல; மற்றவர் மனதில் நீ வாழும் வரை" என்று கூறியவர் யார்?

Answer: அன்னை தெரசா

7. "குழந்தைகளைப் பாதுகாப்போம்" என்னும் இயக்கத்தைத் தொடங்கியவர் யார்?

Answer: கைலாஷ் சத்யார்த்தி

8. கடந்த முப்பது ஆண்டுகளில் கைலாஷ் சத்யார்த்தி எத்தனை குழந்தைத் தொழிலாளர்களை மீட்டுள்ளார்?

Answer: 86, 000

9. கைலாஷ் சத்யார்த்தி உலகக் குழந்தைகள் கல்வி உரிமைக்காக 103 நாடுகளில் எத்தனை கி. மீ தூரம் நடைப்பயணம் சென்றுள்ளார்?

Answer: 80, 000 கி. மீ

10. குழந்தைகளைத் தொழிலாளர்களாக மாற்றுவது மனிதத் தன்மைக்கு எதிரான குற்றம். உலகத்தைக் குழந்தைகளின் கண் கொண்டு பாருங்கள். உலகம் அழகானது என்று கூறியவர் யார்?

Answer: கைலாஷ் சத்யார்த்தி

1

11. எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துதல் ----- ?

Answer: மனித நேயம்

12. தம் பொருளைக் கவர்ந்தவரிடமும் ----- காட்டியவர் வள்ளலார்?

Answer: அன்பு

13. அன்னை தெரசாவிற்கு ----- க்கான ‘நோபல் பரிசு’ கிடைத்தது?

Answer: அமைதி

14. கைலாஷ் சத்யார்த்தி தொடங்கிய இயக்கம் ----- ?

Answer: குழந்தைகளைப் பாதுகாப்போம்

15. பொருத்துக

Answer: வள்ளலார்

16. கைலாஷ் சத்யார்த்தி

Answer: குழந்தைகள் உரிமைக்குப் பாடுபட்டவர்

17. அன்னை தெரசா

Answer: நோயாளிகளிடம் அன்பு காட்டியவர்

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்