7 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - கலை-அழகியல் - இயல் ஆறு - கலைவண்ணம் - ஒரு-வேண்டுகோள்

  Play Audio

1. "கலையுலகப் பிரும்மாக்களே மண்ணின் வனப்புக்குப் "எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் யார்?

Answer: தேனரசன்

2. பிரும்மாக்கள் என்பதன் பொருள்?

Answer: படைப்பாளர்கள்

3. நெடி என்பதன் பொருள்?

Answer: நாற்றம்

4. மழலை என்பதன் பொருள்?

Answer: குழந்தை

5. வனப்பு என்பதன் பொருள்?

Answer: அழகு

6. மேனி என்பதன் பொருள்?

Answer: உடல்

7. தேனரசன் என்ன பணியாற்றினார்?

Answer: தமிழாசிரியர்

8. வானம்பாடி, குயில், தென்றல் போன்ற இதழ்களில் கவிதைகளை எழுதியுள்ளவர் யார்?

Answer: தேனரசன்

9. எந்த கவிஞர்களின் கவிதைகளின் சமுதாய சிக்கல்கள் எள்ளல் சுவையோடு வெளிப்பட்டது?

Answer: தேனரசன்

10. பூரிப்பு என்பதன் பொருள்?

Answer: மகிழ்ச்சி

1

11. மண்வாசல், வெள்ளை ரோஜா, பெய்து பழகிய மேகம் போன்ற நூல்களை எழுதியவர் யார்?

Answer: தேனரசன்

12. மயிலும் மானும் வனத்திற்கு ----- தருகின்றன?

Answer: வனப்பு

13. மிளகாய் வற்றலின் ----- தும்மலை வரவழைக்கும்?

Answer: நெடி

14. அன்னை தான் பெற்ற ----- சிரிப்பில் மகிழ்ச்சி அடைகிறார்?

Answer: மழலையின்

15. 'வனப்பில்லை 'என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

Answer: வனப்பு + இல்லை

16. 'வார்ப்பு + எனில் ' என்பதனை சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?

Answer: வார்ப்பெனில்

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்