7 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - கலை-அழகியல் - இயல் ஆறு - கலைவண்ணம் - கீரைப்பாத்தியும்-குதிரையும்

  Play Audio

1. ஒரே பாடலின் இரண்டு பொருள் தோன்றும்படி பாடப்படுவது?

Answer: இரட்டுறமொழிதல் எனப்படும்

2. இரட்டுறமொழிதலை ----- என்றும் கூறுவர்?

Answer: சிலேடை

3. "கட்டி அடிக்கையால் கால்மாறிப் பாய்கையால்" எனத் தொடங்கும் பாடலை இயற்றியவர் யார்?

Answer: காளமேகப்புலவர்

4. வண்கீரை என்பதன் பொருள்?

Answer: வளமான கீரை

5. முட்டப்போய் என்பதன் பொருள்?

Answer: முழுதாகச் சென்று

6. மறித்தல் என்பதன் பொருள்?

Answer: தடுத்தல் (மண்ணை வெட்டித் தடுத்துப் பாத்தி கட்டுதல்) , எதிரிகளைத் தடுத்துத் தாக்குதல்

7. பரி என்பதன் பொருள்?

Answer: குதிரை

8. கால் என்பதன் பொருள்?

Answer: வாய்க்கால், குதிரையின் கால் காளமேகப்புலவரின் இயற்பெயர்?

1

9. வரதன் மேகம் மழை பொழிவது போலக் கவிதைகளை விரைந்து பாடியதால் இவர் ----- என்று அழைக்கப்படுகிறார்?

Answer: காளமேகப்புலவர்

10. திருவானைக்கா உலா, சரசுவதி மாலை, பரபிரம்ம விளக்கம், சித்திர மடல் போன்ற நூல்கள் எழுதியவர் யார்?

Answer: காளமேகப்புலவர்

11. காளமேகப்புலவரின் பாடல்கள் எந்த பெயரில் தொகுக்கப்பட்டது?

Answer: தனிப்பாடல் திரட்டு

12. 'ஏறப் பரியாகுமே 'என்னும் தொடரில் 'பரி 'என்பதன் பொருள்?

Answer: குதிரை

13. பொருந்தாத ஓசை உடைய சொல்? a. யாக்கையால் b. மேன்மையால் c. திரும்புகையில் d. அடிக்கையால்

Answer: c திரும்புகையில்

14. 'வண்கீரை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

Answer: வண்ணம் + கீரை

15. கட்டி + அடித்தல் என்பதனை சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?

Answer: கட்டியடித்தல்

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்