7 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - கலை-அழகியல் - இயல் ஆறு - கலைவண்ணம் - தமிழ்-ஒளிர்-இடங்கள்

  Play Audio

1. இந்தியாவில் உள்ள தொன்மையான நூலகங்களுள் ஒன்று எது?

Answer: தஞ்சை சரசுவதி மகால் நூலகம்

2. தஞ்சை சரசுவதி மகால் நூலகம் எந்த ஆண்டு முதல் இயங்கி வருவதாக கல்வெட்டு கூறுகிறது?

Answer: கி. பி. 1122

3. தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தில் காணப்படுபவை?

Answer: ஓலைச்சுவடி, ஓவியங்கள், கையெழுத்துப் படிகள்

4. தமிழ்ப் பல்கலைக்கழகம் எங்கு உள்ளது?

Answer: தஞ்சாவூர்

5. தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு?

Answer: 1981

6. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் எத்தனை ஏக்கர் நிலப்பரப்பில் ஆரம்பிக்கப்பட்டது?

Answer: ஆயிரம் ஏக்கர்

7. வானத்தில் இருந்து பார்க்கும் பொழுது 'தமிழ்நாடு 'எனத் தெரியும் வகையில் கட்டப்பட்ட அமைப்பு உள்ள பல்கலைக்கழகம் எது?

Answer: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் நோக்கம்?

8. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உள்ள புலன்களின் எண்ணிக்கை?

Answer: 5 (கலைப்புலம், சுவடிப்புலம், வளர்தமிழ்ப்புலம், மொழிப்புலம், அறிவியல்புலம்)

9. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் எத்தனை துறைகள் உள்ளன?

Answer: 25

10. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மற்றொரு சிறப்பு என்ன?

Answer: சித்தமருத்துவத் துறை மூலம் பொது மக்களுக்கு மருத்துவவசதி

1

11. இந்திய ஆட்சிப்பணி பயிற்சியாளர்களுக்குத் தமிழ்மொழிப் பயிற்சியை எந்த பல்கலைக்கழகம் வழங்குகிறது?

Answer: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம்

12. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் எங்கு கல்வி கற்று வருகின்றனர்?

Answer: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம்

13. உ. வே. சா நூலகம் எங்கு உள்ளது?

Answer: சென்னை

14. உ. வே. சா நூலகம் தொடங்கப்பட்ட ஆண்டு?

Answer: 1942

15. உ. வே. சா நூலகத்தில் எத்தனை ஓலைச்சுவடிகள் உள்ளன?

Answer: 2128

16. உ. வே. சா நூலகத்தில் எத்தனை நூல்கள் உள்ளன?

Answer: 2941

17. கீழ்த்திசை நூலகம் எங்கு உள்ளது?

Answer: சென்னை

18. கீழ்த்திசை நூலகம் எப்போது தொடங்கப்பட்டது?

Answer: 1869

19. கீழ்த்திசை நூலகம் தற்போது அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் எந்த தளத்தில் இயங்கி வருகிறது?

Answer: 7 வது தளம்

20. கன்னிமாரா நூலகம் எங்கு உள்ளது?

Answer: சென்னை

21. கன்னிமாரா நூலகம் தொடங்கப்பட்ட ஆண்டு?

Answer: 1896

2

22. தமிழ்நாட்டில் மைய நூலகம் எது?

Answer: கன்னிமாரா நூலகம்

23. கன்னிமாரா நூலகத்தில் எத்தனை இலட்சத்திற்கு மேற்பட்ட நூல்கள் உள்ளது?

Answer: ஆறு இலட்சத்திற்கு மேல்

24. இந்தியாவில் வெளியிடப்படும் புத்தகங்கள், நாளிதழ்கள், பருவ இதழ்கள் ஆகியவற்றின் ஒரு பிரதி எந்த நூலகத்தில் பாதுகாக்கப்படுகிறது?

Answer: கன்னிமாரா நூலகம்

25. கன்னிமாரா நுலகத்தில் எந்த தளத்தில் மறைமலை அடிகள் நூலகம் செயல்பட்டு வருகின்றது?

Answer: மூன்றாவது தளம்

26. திருவள்ளுவரின் புகழை உலகறியச் செய்யுள் வகையில் வள்ளுவர் கோட்டம் என்னும் கலைக்கூடம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது?

Answer: சென்னை

27. வள்ளுவர் கோட்டம் கட்டுமானப் பணிகள் கி. பி. 1973 ஆண்டு தொடங்கி எப்பொழுது முடிக்கப்பட்டது?

Answer: 1976

28. வள்ளுவர் கோட்டம் எதன் வடிவில் அமைக்கப்பட்டுள்ளன?

Answer: திருவாரூர் தேர் போன்ற வடிவம்

29. வள்ளுவர் கோட்டத்தின் அடிப்பகுதி எத்தனை அடி நீளம் மற்றும் அகலம் உடையது?

Answer: 25அடி அகலம், 25அடி நீளம்

30. வள்ளுவர் கோட்ட தேரின் மொத்த உயரம் எத்தனை அடி?

Answer: 128அடி

31. வள்ளுவர் கோட்ட தேரின் மையத்தில் எண் கோண வடிவில் யாருடைய சிலை அமைக்கப்பட்டு உள்ளது?

Answer: திருவள்ளுவர் சிலை

3

32. வள்ளுவர் கோட்டத்தில் அறத்துப்பால் எந்த பளிங்குக் கல்லில் செதுக்கப்பட்டு உள்ளது?

Answer: கருநிறப் பளிங்கு கல்லில்

33. வள்ளுவர் கோட்டத்தில் பொருட்பால் எந்த பளிங்குக் கல்லில் செதுக்கப்பட்டு உள்ளது?

Answer: வெண்ணிறப் பளிங்கு கல்லில்

34. வள்ளுவர் கோட்டத்தில் இன்பத்துப்பால் எந்த பளிங்குக் கல்லில் செதுக்கப்பட்டு உள்ளது?

Answer: செந்நிறப் பளிங்கு கல்லில்

35. திருக்குறளின் கருத்துகளை விளக்கும் ஓவியங்கள் எங்கு வரையப்பட்டுள்ளது?

Answer: வள்ளுவர் கோட்டம்

36. திருவள்ளுவர் சிலை எங்கு உள்ளது?

Answer: கன்னியாகுமரி

37. திருவள்ளுவர் சிலையின் உயரம்?

Answer: 133அடி

38. விவேகானந்தர் பாறைக்கு அருகில், கடல் நடுவே நீர் மட்டத்திலிருந்து ----- அடி உயரப்பாறை மீது திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது?

Answer: 30 அடி

39. திருவள்ளுவர் சிலை அமைக்கும் பணி எப்போது தொடங்கியது?

Answer: 1990

40. திருவள்ளுவர் சிலை பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்ட ஆண்டு?

Answer: 2000 ஆண்டு ஜனவரி திங்கள் முதல் நாள்

41. அறத்துப்பாலில் அதிகாரங்களை உணர்த்துவது போல் திருவள்ளுவர் சிலையின் பீடம் எத்தனை அடி உயரம் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது?

Answer: 38

4

42. பொருட்பால், இன்பத்துப்பால் ஆகியவற்றில் மொத்த அதிகாரங்களை குறிக்கும் வகையில் திருவள்ளுவர் சிலை ----- அடி உயரம் உள்ளவாறு அமைக்கப்பட்டுள்ளது?

Answer: 95அடி

43. மண்டபத்தில் உட்சுவரில் அதிகாரத்திற்கு ஒரு குறள் வீதம் 133குறட்பாக்கள் எந்த மொழியில் செதுக்கப்பட்டது?

Answer: தமிழ், ஆங்கிலம்

44. திருவள்ளுவர் சிலை அமைப்பதற்கு 3டன் முதல் 8டன் வரை உள்ள எத்தனை கருங்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது?

Answer: 3681

45. திருவள்ளுவர் சிலை மொத்தம் ----- டன் எடை கொண்டது?

Answer: 7000டன்

46. உலக தமிழ்ச் சங்கம் எங்கு உள்ளது?

Answer: மதுரை

47. காந்தி அருங்காட்சியகம் அருகில் உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையில் எந்த பகுதியில் நிறுவப்பட்டுள்ளது?

Answer: தல்லாகுளம்

48. மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கம் எத்தனை சதுரஅடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது?

Answer: 87000

49. மதுரையில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டின்போது மதுரையில் உலகத்தமிழ்ச் சங்கம் நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்ட ஆண்டு?

Answer: 1981

50. உலகத்தமிழ் சங்கம் மதுரையில் எந்த ஆண்டு திறந்து வைக்கப்பட்டது?

Answer: 2016

51. மதுரையில் உலக தமிழ்ச் சங்க வெளிச்சுவரில் என்ன உள்ளன?

Answer: 1330குறட்பாக்கள் இடம் பெற்றுள்ளன

5

52. மதுரையில் உலக தமிழ்ச் சங்க நுழைவு வாயிலில் எந்தக் காட்சி உள்ளன?

Answer: தருமிக்கு பாண்டிய மன்னன் பொற்கிழி வழங்கிய காட்சி புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது

53. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சோழர்களின் தலைநகரமாகவும் துறைமுக நகரமாகவும் விளங்கிய இடம்?

Answer: பூம்புகார்

54. பூம்புகார் பற்றிய செய்திகள் எந்த நூல்களில் காணப்படுகிறது?

Answer: சிலப்பதிகாரம், பட்டினப்பாலை

55. பூம்புகாரில் மருவூர்ப்பாக்கம் என்னும் கடல் பகுதியும், பட்டினப்பாக்கம் என்னும் நகர்ப்பகுதியும் அமைந்திருந்ததாக கூறும் நூல் எது?

Answer: சிலப்பதிகாரம்

56. பூம்புகார் கடற்கரையில் சிற்பக்கலை கூடம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு?

Answer: 1973

57. பூம்புகார் கடற்கரையில் உள்ள சிற்பக்கலைக்கூடம் எத்தனை மாடங்களைக் கொண்டது?

Answer: 7மாடங்கள் | பூம்புகார் கடற்கரையில் உள்ள சிற்பக்கலைக் கூடத்தில் யாருடைய வரலாற்றை விளக்கும் 49சிற்பத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளது?

58. பூம்புகார் சிற்பக்கலைக் கூடத்தில் யாருக்கு ஒரு நெடிய சிலை நிறுவப்பட்டுள்ளது?

Answer: மாதவி

6

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்