7 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - கலை-அழகியல் - இயல் ஆறு - கலைவண்ணம் - தொழிற்பெயர்

  Play Audio

1. ஒரு செயலின் அல்லது வினையின் பெயராக அமைவது?

Answer: தொழிற்பெயர்

2. தொழிற்பெயர் எதைக் காட்டாது?

Answer: எண், இடம், காலம், பால்

3. தொழிற்பெயர் எந்த இடத்தில் வரும்?

Answer: படர்க்கை

4. தொழிற்பெயர்க்கு எடுத்துக்காட்டு?

Answer: படித்தல், ஆடல், நடிப்பு, எழுதுதல், பொறுத்தல்

5. தொழிற்பெயர் எத்தனை வகைப்படும்?

Answer: மூன்று (விகுதி பெற்ற தொழிற்பெயர், முதனிலை தொழிற்பெயர், முதனிலை திரிந்த தொழிற்பெயர்)

6. வினைப் பகுதியுடன் தொழிற்பெயர் விகுதி சேர்ந்து வருவது?

Answer: விகுதி பெற்ற தொழிற்பெயர்

7. தொழிற்பெயர் விகுதிகள் எவை?

Answer: தல், அல், அம், ஐ, கு, பு, வு, தி, சி, வி, மை

8. விகுதி பெற்ற தொழிற்பெயருக்கு எகா?

Answer: நடத்தல், உண்ணல், வாழ்வு, வாழ்க்கை

9. முதனிலை எவ்வகை மாற்றமும் பெறாமல் தொழிற்பெயராக அமைவது?

Answer: முதனிலை தொழிற்பெயர்

10. முதனிலை திரிவதால் உருவாகும் தொழிற்பெயர்?

Answer: முதனிலை திரிந்த தொழிற்பெயர்

1

11. பின்வருவனவற்றுள் விகுதி பெற்ற தொழிற்பெயர் எது?

Answer: படித்தல்

12. பின்வருவனவற்றுள் முதனிலை திரிந்து தொழிற்பெயர் எது?

Answer: ஊறு

13. ஒட்டம் என்பதன் தொழிற்பெயர்?

Answer: விகுதி பெற்ற தொழிற்பெயர்

14. பிடி என்பதன் தொழிற்பெயர்?

Answer: முதனிலைத் தொழிற்பெயர்

15. சூடு என்பதன் தொழிற்பெயர்?

Answer: முதனிலை திரிந்த தொழிற்பெயர்

16. creator என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன?

Answer: படைப்பாளர்

17. sculpture என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன?

Answer: சிற்பம்

18. artist என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன?

Answer: கலைஞர்

19. inscriptions என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன?

Answer: கல்வெட்டு

20. manuscripts என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன?

Answer: கையெழுத்துப்படி

21. aesthetics என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன?

Answer: அழகியல்

22. brush என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன?

Answer: தூரிகை

23. cartoon என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன?

Answer: கருத்துப்படம்

24. cave painting என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன?

Answer: குகை ஓவியங்கள்

25. modern art என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன?

Answer: நவீன ஓவியம்

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்