7 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - கல்வி - இயல் ஐந்து - ஓதுவது-ஒழியேல் - இன்பத்தமிழ்க்-கல்வி

  Play Audio

1. "எடெடுத்தேன் கவி ஒன்று வரைந்திட என்னை எழுதென்று சொன்னது வான்" எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர்?

Answer: பாரதிதாசன்

2. எத்தினிக்கும் என்பதன் பொருள்?

Answer: முயலும்

3. வெற்பு என்பதன் பொருள்?

Answer: மலை

4. கழனி என்பதன் பொருள்?

Answer: வயல்

5. நிகர் என்பதன் பொருள்?

Answer: சமம்

6. பரிதி என்பதன் பொருள்?

Answer: கதிரவன்

7. அன்னதோர் என்பதன் பொருள்?

Answer: அப்படிஒரு

8. கார்முகில் என்பதன் பொருள்?

Answer: மழைமேகம்

9. துயின்றிருந்தார் என்பதன் பொருள்?

Answer: உறங்கியிருந்தார்

10. எதைக் கற்றால் வாழ்வில் துன்பம் நீங்கி விடும் என்று பாவேந்தர் கூறுகிறார்?

Answer: இன்பத்தமிழ் கல்வியை கற்றவர்கள்

11. பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, இசையமுது, இருண்ட வீடு, குடும்ப விளக்கு, கண்ணகி புரட்சிப் காப்பியம் போன்ற நூல்கள் எழுதியவர்?

Answer: பாரதிதாசன்

1

12. பாரதிதாசனுக்கு எந்த நூலுக்குச் சாகித்திய அகாடமி விருது அளிக்கப்பட்டது?

Answer: பிசிராந்தையார்

13. பெண்களுக்கு நிகராகப் பாரதிதாசன் கூறுவது?

Answer: மயில்

14. பின்வருவனவற்றுள் 'மலை 'யை குறிக்கும் சொல்? a. வெற்பு b. காடு c. கழனி d. புவி

Answer: a. வெற்பு

15. 'ஏடெடுத்தேன் 'என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

Answer: ஏடு + எடுத்தேன்

16. 'துயின்றிருந்தார்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

Answer: துயின்று + இருந்தார்

17. என்று + உரைக்கும் என்பதனை சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?

Answer: என்றுரைக்கும்

18. பொருத்துக a. கழனி - கதிரவன் b. நிகர் - மேகம் c. பரிதி - சமம் d. முகில் - வயல்

Answer: a - 4, b - 3, c - 1, d - 2

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்