7 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - அறிவியல்-தொழில்நுட்பம் - இயல் நான்கு - அறிவியல்-ஆக்கம் - இலக்கியவகைச்-சொற்கள்

  Play Audio

1. ஓர் எழுத்து தனித்தும் ஒன்றிற்கும் மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்தும் வந்து பொருள் தருவது ----- எனப்படும்?

Answer: சொல்

2. சொல் என்னும் பொருள் தரும் வேறு சொற்கள் எவை?

Answer: மொழி, பதம், கிளவி

3. இலக்கிய வகையில் சொற்கள் எத்தனை வகைப்படும்?

Answer: நான்கு அவை (பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல்)

4. எளிதில் பொருள் விளங்கும் வகையில் அமைந்த சொற்கள்?

Answer: இயற்சொற்கள் எனப்படும்

5. இயற்சொல் எத்தனை வகைகளில் வரும்?

Answer: நான்கு வகையில் (பெயர், வினை, இடை, உரி)

6. கற்றோர்க்கு மட்டுமே விளங்குவதாகவும் இலக்கியங்களில் மட்டுமே பயின்று வருபவையாகவும் அமையும் சொற்கள்?

Answer: திரிசொற்கள் எனப்படும்

7. திரிசொற்கள் எத்தனை வகைகளில் வரும்?

Answer: நான்கு வகை (பெயர், வினை, இடை உரி)

1

8. திரிசொற்கள் எத்தனை வகைப்படும்?

Answer: இரண்டு வகை (ஒரு பொருள் குறித்த பல திரிசொற்கள், பல பொருள் குறித்த ஒரு திரிசொல்)

9. ஒரு பொருள் குறித்த பல திரிசொற்கள்?

Answer: வங்கம், அம்பி, நாவாய் என்பன கப்பல் என்னும் ஒரே பொருளைத் தருகிறது

10. பல பொருள்கள் குறித்த ஒரு திரிசொல்?

Answer: இதழ் என்னும் சொல் பூவின் இதழ், உதடு, கண்ணிமை, பனையேடு, நாளிதழ் என பல பொருள் தருகிறது

11. வடமொழி தவிர, பிற மொழிகளில் இருந்து வந்து தமிழில் இடம்பெறும் சொற்கள்?

Answer: திசைச்சொற்கள் எனப்படும்

12. வடமொழியிலிருந்து வந்து தமிழில் இடம்பெறும் சொற்கள்?

Answer: வடசொற்கள் எனப்படும்

13. வடசொற்களுக்கு உதாரணம்?

Answer: வருடம், மாதம், கமலம், விடம், சக்கரம்

14. வடசொற்கள் வகைகள் எத்தனை?

Answer: இரண்டு (தற்சமம், தற்பவம்)

15. வடமொழி என்று அழைக்கப்படும் மொழி?

Answer: சமஸ்கிருதம்

16. கமலம், அலங்காரம் என வடமொழியில் இருப்பது போன்றே தமிழில் எழுதுவதை ----- என்பர்?

Answer: தற்சமம்

2

17. எல்லார்க்கும் எளிதில் பொருள் விளங்கும் சொல்?

Answer: இயற்சொல்

18. பலபொருள் தரும் ஒருசொல் என்பது?

Answer: திரிசொல்

19. வடமொழி என்று அழைக்கப்படும் மொழி?

Answer: சமஸ்கிருதம்

20. பொருத்துக a. இயற்சொல் - 1. பெற்றம் b. திரிசொல் - 2. இரத்தம் c. திசைச்சொல் - 3. அழுவம் d. வடசொல் - 4. சோறு

Answer: a - 4, b - 3, c - 1, d - 2

3

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்