7 ஆம் வகுப்பு - முதல் பருவம் - மொழி - இயல் ஒன்று - அமுதத்தமிழ் - ஒன்றல்ல-இரண்டல்ல

  Play Audio

1. "ஒன்றல்ல இரண்டல்ல தம்பி சொல்ல "என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?

Answer: உடுமலை நாராயணகவி

2. "சொல்லுக்குத் தலைகொடுத்தான் அருள்மீறி - இந்த வள்ளலாம் குமணன்போல் வாழ்ந்தவர் வரலாறு "என்ற பாடலின் ஆசிரியர்?

Answer: உடுமலை நாராயணகவி

3. ஒப்புமை என்பதன் பொருள்?

Answer: இணை

4. அற்புதம் என்பதன் பொருள்?

Answer: விந்தை

5. முகில் என்பதன் பொருள்?

Answer: மேகம்

6. உபகாரி என்பதன் பொருள்?

Answer: வள்ளல்

7. பகைவரை வென்றதைப் பாடுவது?

Answer: பரணி

8. இசைப்பாடல் நூல் எது?

Answer: பரிபாடல்

9. முல்லைக்குத் தேர்தந்து மழைமேகத்தை விடப் புகழ் பெற்றவன் யார்?

Answer: பாரி

10. புலவரின் சொல்லுக்காக தன் தலையையே தரத் துணிந்தவன் யார்?

Answer: குமண வள்ளல்

1

11. பகுத்தறிவுக் கவிராயர் என்று புகழப்படுபவர் யார்?

Answer: உடுமலை நாராயணக்கவி

12. தமது திரைப்பட பாடல்கள் மூலம் பகுத்தறிவுக் கருத்துகளை பரப்பியவர் யார்?

Answer: உடுமலை நாராயணக்கவி

13. பகைவரை வெற்றி கொண்டவரைப் பாடும் இலக்கியம்?

Answer: பரணி

14. வானில் ----- கூட்டம் திரண்டதால் மழை பொழியும்?

Answer: முகில்

15. 'இரண்டல்ல 'என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

Answer: இரண்டு + அல்ல

16. 'தந்துதவும்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

Answer: தந்து + உதவும்

17. ஒப்புமை + இல்லாத என்பதனைச் சேர்த்தேழுதக் கிடைக்கும் சொல்?

Answer: ஒப்புமையில்லாத

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்