7 ஆம் வகுப்பு - முதல் பருவம் - மொழி - இயல் ஒன்று - அமுதத்தமிழ் - குற்றியலுகரம்-குற்றியலிகரம்

  Play Audio

1. தமிழ் எழுத்துகளை எத்தனை வகையாகப் பிரிப்பர்?

Answer: 2 (முதலெழுத்து, சார்பெழுத்து)

2. முதலெழுத்துக்கள் மொத்தம் எத்தனை?

Answer: 30

3. உயிர் எழுத்துகள் - 12எழுதுத்கள் மெய் எழுத்துகள் - 18எழுத்துகள் மொத்தம் 30 எழுத்து சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும்?

Answer: 10வகைப்படும்

4. குற்றியலுகரம் என்பதனை பிரித்து எழுதுக?

Answer: குறுமை + இயல் + உகரம்

5. கு, சு, டு, து, பு, று ஆகிய ஆறு வல்லின உகரங்களும் சொல்லின் இறுதியில் வரும்போது, தனக்குரிய ஒரு மாத்திரை அளவில் இருந்து அரை மாத்திரை அளவாக குறைந்து ஒலிப்பது?

Answer: குற்றியலுகரம்

6. குற்றியலுகரத்துக்கு எகா?

Answer: காசு, எஃகு, பயறு, பாட்டு, பந்து, சால்பு

7. தனிக்குறில் எழுத்தை அடுத்து வரும் வல்லினம் உகரங்கள் ஒரு மாத்திரை அளவில் முழுமையாக ஒலிப்பதை ----- என்கிறோம்?

Answer: முற்றியலுகரம்

8. முற்றியலுகரத்துக்கு எகா?

Answer: புகு, பசு, விடு, அது, வறு, மாவு, ஏழு

9. தமிழ் எழுத்துகளைக் குறிப்பிடுவதற்கு பயன்படும் அசைச் சொற்கள் எவை?

Answer: கரம், கான், காரம், கேனம்

1

10. குறில் எழுத்துகளைக் குறிக்கும் அசைச்சொல் எது?

Answer: கரம்

11. நெடில் எழுத்துகளைக் குறிக்கும் அசைச்சொல் எது?

Answer: கான்

12. குறில், நெடில் எழுத்துகளைக் குறிக்கும் அசைச்சொல் எது?

Answer: காரம்

13. ஆய்த எழுத்துகளைக் குறிக்கும் அசைச்சொல் எது?

Answer: கேனம்

14. குற்றியலுகரம் எத்தனை வகையாக பிரிக்கப்பட்டுள்ளது?

Answer: ஆறு

15. தனி நெடிலைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம்?

Answer: நெடில்தொடர்க் குற்றியலுகரம்

16. நெடில்தொடர்க் குற்றியலுகரம் எகா?

Answer: பாகு, மாசு, பாடு, காது, ஆறு

17. ஈரெழுத்துச் சொற்களாக மட்டும் வருவது?

Answer: நெடில்தொடர்க் குற்றியலுகரம்

18. ஆய்த எழுத்தை தொடந்து வரும் குற்றியலுகரம்?

Answer: ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம்

19. ஆய்தத்தொடர் குற்றியலுகரத்திற்கு எகா?

Answer: எஃகு, அஃது

20. தனிநெடில் அல்லாத உயிர்மெய் எழுத்தை தொடர்ந்து வரும் குற்றியலுகரம்?

Answer: உயிர்த் தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்

21. உயிர்த் தொடர்க் குற்றியலுகரத்திற்கு எகா?

Answer: அரசு (ர = ர் + அ)

22. வல்லின (க், ச், ட், த், ப், ற்) மெய் எழுத்துகளைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம்?

Answer: வன்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்

2

23. வன்தொடர்க் குற்றியலுகரத்திற்கு எகா?

Answer: பாக்கு, பேச்சு, பாட்டு, உப்பு, பற்று

24. மெல்லின (ங், ர், ல், வ், ழ், ள்) மெய் எழுத்துகளை தொடர்ந்து வரும் குற்றியலுகரம்?

Answer: மென்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்

25. மென்தொடர்க் குற்றியலுகரத்திற்கு எகா?

Answer: பங்கு, மஞ்சு, பண்பு, பந்து, அம்பு, கன்று

26. இடையின (ய், ர், ல், ழ், ள்) மெய் எழுத்துகளைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம்?

Answer: இடைத்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்

27. இடைத்தொடர்க் குற்றியலுகரத்திற்கு எகா?

Answer: எய்து, மார்பு, சால்பு, மூழ்கு

28. குற்றியலுகரச் சொற்கள் ----- என்னும் எழுத்தை தொடர்ந்து வருவது இல்லை?

Answer: வ்

29. இடைத்தொடர்க் குற்றியலுகரச் சொற்களில் எவ்வெழுத்து இறுதியாக இடம்பெறாது?

Answer: சு, டு, று

30. தன் ஒரு மாத்திரை அளவில் இருந்து அரைமாத்திரை அளவாக குறுகி ஒலிக்கும் இகரம்?

Answer: குற்றியலிகரம் எனப்படும்

31. குற்றியலிகரம் பிரித்து எழுதுக?

Answer: குறுமை + இயல் + இகரம்

3

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்