7 ஆம் வகுப்பு - முதல் பருவம் - நாடு-சமூகம் - இயல் மூன்று - நாடு-அதை-நாடு - வழக்கு

  Play Audio

1. எழுத்திலும் பேச்சிலும் சொற்களைப் பயன்படுத்தும் முறை?

Answer: வழக்கு எனப்படும்

2. வழக்கு எத்தனை வகைப்படும்?

Answer: இரண்டு வகை (இயல்பு வழக்கு, தகுதி வழக்கு)

3. ஒரு பொருளை அதற்கே உரிய இயல்பான சொற்களால் குறிப்பிடுவது?

Answer: இயல்பு வழக்கு

4. இயல்பு வழக்கு எத்தனை வகைப்படும்?

Answer: மூன்று (இலக்கனமுடையது, இலக்கணப்போலி, மரூஉ)

5. இலக்கண நெறி முறையாக அமைத்த சொல்?

Answer: இலக்கனமுடையது

6. இலக்கண முறைப்படி அமையாவிடினும், இலக்கணமுடையவை போலவே ஏற்றுக் கொள்ளப்படும் சொற்கள்?

Answer: இலக்கணப்போலி எனப்படும்

7. இலக்கணப்போலியை முன்பின்னாகத் ----- எனவும் குறிப்பிடுவர்?

Answer: தொக்க போலி

8. முன்பின்னாகத் தொக்க போலிக்கு எகா?

Answer: புறநகர், கால்வாய், தசை, கடைக்கண்

9. இல்லத்துக்குள் நுழையும் வழி இல்வாய் (இல்லத்தின் வாய்) எனக் குறிப்பிடப்பட வேண்டும். ஆனால் அதனை வாயில் என வழங்குவது?

Answer: இலக்கணப்போலி எனப்படும்

10. வாயில் என்னும் சொல்லைப் பேச்சு வழக்கில் வாசல் என்று வழங்குவது ----- எனப்படும்?

Answer: மரூஉ

1

11. இலக்கண நெறியிலிருது பிறழ்ந்து, சிதைந்து வழங்கும் சொற்கள் ----- எனப்படும்?

Answer: மரூஉ

12. மரூஉக்கு எகா?

Answer: கோவை, குடந்தை, எந்தை, போது, சோணாடு

13. ஏதேனும் ஒரு காரணத்தினால் பிறரிடம் சொல்லத் தகுதியற்ற சொற்களைத் தகுதியான வேறு சொற்களால் குறிப்பிடுவது?

Answer: தகுதி வழக்கு எனப்படும்

14. தகுதி வழக்கு எத்தனை வகைப்படும்?

Answer: மூன்று (இடக்கரடக்கல், மங்கலம், குழுஉக்குறி)

15. பிறரிடம் வெளிப்படையாக சொல்லத் தகாத சொற்களை தகுதியுடைய வேறு சொற்களால் கூறுவது?

Answer: இடக்கரடக்கல் எனப்படும்

16. இடக்கரடக்கல் எகா?

Answer: கால் கழுவி வந்தான், குழந்தை வெளியே போய்விட்டது, ஒன்றுக்கு போய் வந்தேன்

17. மங்கலமில்லாத சொற்களை மங்கலமான வேறு சொற்களால் குறிப்பதை ----- என்பர்?

Answer: மங்கலம்

18. மங்கலம் எகா?

Answer: ஓலை - திருமுகம் கருப்பு ஆடு - வெள்ளாடு சுடுகாடு - நன்காடு விளக்கை அணை - விளக்கை குளிரவை

19. ஒரு குழுவினர் ஒரு பொருள் அல்லது செயலைக் குறிக்க தமக்குள் பயன்படுத்திக்கொள்ளும் சொற்கள் ----- எனப்படும்?

Answer: குழுஉக்குறி

20. குழுஉக்குறி எகா?

Answer: பொன்னைப் பறி எனல் (பொற்கொல்லர் பயன்படுத்துவது) ஆடையைக் காரை எனல் (யானைப்பாகர் பயன்படுத்துவது)

2

21. "அறம் செய விரும்பு" என்பது யாருடைய வாக்கு?

Answer: ஒளவையார்

22. சொல்லில் இயல்பாக இருக்க வேண்டிய ஓர் எழுத்திற்கு பதிலாக வேறு ஓர் எழுத்து வந்து அதே பொருளை தருவது ----- எனப்படும்?

Answer: போலி

23. போலி எத்தனை வகைப்படும்?

Answer: மூன்று (முதற்போலி, இடைப்போலி, கடைப்போலி)

24. சொல்லின் முதலில் இருக்க வேண்டிய எழுத்திற்கு பதிலாக வேறு ஓர் எழுத்து அமைந்து அதே பொருள் தருவது?

Answer: முதற்போலி

25. முதற்போலிக்கு எகா?

Answer: பசல் - பைசல் மஞ்சு - மைஞ்சு மயல் - மையல்

26. சொல்லின் இடையில் இருக்க வேண்டிய எழுத்திற்குப் பதிலாக வேறு ஓர் எழுத்து அமைந்து அதே பொருள் தருவது?

Answer: இடைப்போலி

27. இடைப்போலிக்கு எகா?

Answer: அமச்சு - அமைச்சு இலஞ்சி - இலைஞ்சி அரயர் - அரையர்

28. சொல்லின் இறுதியில் இருக்க வேண்டிய எழுத்திற்கு பதிலாக வேறு ஓர் எழுத்து அமைந்து அதே பொருள் தருவது?

Answer: கடைப்போலி

29. கடைப்போலிக்கு எகா?

Answer: அகம் - அகன் நிலம் - நிலன் முகம் - முகன் பந்தல் - பந்தர் சாம்பல் - சாம்பர்

3

30. முற்றுப்போலிக்கு எகா?

Answer: ஐந்து - அஞ்சு

31. ஒரு சொல்லில் இயல்பாக அமைந்த எழுத்துகளுக்கு பதிலாக எழுத்துகள் அனைத்தும் வேறுபட்டாலும் பொருள் மாறாமல் இருப்பது ----- எனப்படும்?

Answer: முற்றுப்போலி

32. பொருத்துக a. பந்தர் - 1. முதற்பொலி b. மைஞ்சு - 2. முற்றுப்போலி c. அஞ்சு - 3. d. அரையர் - 4. கடைப்போலி

Answer: a - 4, b - 1, c - 2, d - 3

33. ஒரு தொடரில் யார்? எது? எவை? என்னும் வினாக்களுக்கு விடையாக அமைவது?

Answer: எழுவாய்

34. ஒரு தொடரை வினை, வினா, பெயர் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றைக் கொண்டு முடித்து வைப்பது?

Answer: பயனிலை

35. யாரை, எதை, எவற்றை என்னும் வினாக்களுக்கு விடையாக வருவது?

Answer: செய்யப்படுபொருள்

36. கலைச்சொல் அறிவோம்

Answer: ballad - கதைப்பாடல் courage - துணிவு sacrifice - தியாகம் political genius - அரசியல் மேதை elocution - பேச்சாற்றல் unity - ஒற்றுமை slogan - முழக்கம் equality - சமத்துவம்

4

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்