7 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - அறிவியல்-தொழில்நுட்பம் - இயல் நான்கு - அறிவியல்-ஆக்கம் - கலங்கரை-விளக்கம்

  Play Audio

1. கடற்பயணம் சென்று கரை திரும்பத் தமிழர் கண்ட தொழில்நுட்பமே ----- ஆகும்?

Answer: கலங்கரை விளக்கம்

2. "வானம் ஊன்றி மதலை போல ஏணி சாத்திய ஏற்றருஞ் சென்னி" என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?

Answer: கடியலூர் உருத்திரங் கண்ணனார்

3. மதலை என்பதன் பொருள்?

Answer: தூண்

4. ஞெகிழி என்பதன் பொருள்?

Answer: தீச்சுடர்

5. அழுவம் என்பதன் பொருள்?

Answer: கடல்

6. வேயா மாடம் என்பதன் பொருள்?

Answer: வைக்கோல் போன்றவற்றால் வேயப்பட்ட திண்மையாகச் சாந்து பூசப்பட்ட மாடம்

7. சென்னி என்பதன் பொருள்?

Answer: உச்சி

8. உரவுநீர் என்பதன் பொருள்?

Answer: பெருநீர்ப் பரப்பு

9. கரையும் என்பதன் பொருள்?

Answer: அழைக்கும்

10. கடியலூர் என்ற ஊரில் வாழ்ந்தவர் யார்?

Answer: உருதிரங்க கண்ணனார்

11. பரும்பாணாற்றுப்படை என்ற நூலை எழுதியவர் யார்?

Answer: உருத்திரங் கண்ணனார்

1

12. பட்டினப்பாலை என்ற நூலை எழுதியவர் யார்?

Answer: உருத்திரங் கண்ணனார்

13. பெரும்பாணாற்றுப் படையில் தலைவன் யார்?

Answer: தொண்டைமான் இளந்திரையன்

14. வள்ளல் ஒருவனிடம் பரிசு பெற்றுத் திரும்பும் புலவர், பாணர் போன்றோர் அந்த வள்ளலிடம் சென்று பரிசு பெற, பிறருக்கு வழிகாட்டுவதாகப் பாடப்படுவது?

Answer: ஆற்றுப்படை இலக்கியம்

15. பத்துப்பாட்டு நூல்கள்?

Answer: திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்

16. வேயாமாடம் எனப்படுவது?

Answer: சாந்தினால் பூசப்படுவது

17. உரவுநீர் - அழுவம் - - இத்தொடரில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்?

Answer: கடல்

18. கடலில் துறை கலங்குவன?

Answer: மரக்கலங்கள்

19. தூண் என்னும் பொருள் தரும் சொல்?

Answer: மதலை

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்