7 ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம் - அறம்-தத்துவம்-சிந்தனை - இயல் எட்டு - ஒப்புரவு-ஒழுகு - உண்மை-ஒளி

  Play Audio

1. பிறப்பின் அடிப்படையில் எல்லா உயிர்களுக்கும் பொதுவானவை எவை?

Answer: பசி, தாகம், தூக்கம்

2. இன்பமும் துன்பமும் வாழ்வில் எவ்வாறு வரும் என ஜென் குரு கூறுகிறார்?

Answer: இரவு பகல் போல

3. உண்மையான ஒளி எப்போது ஏற்படும் என்று ஜென் குரு கூறுகிறார்?

Answer: ஒரு மனிதரை பார்க்கும்போது இவர் என் உடன்பிறந்தவர் என்று உணரும் போது

4. உண்மையான ஒளி எங்கு ஏற்பட வேண்டும் என்று மாணவர்கள் புரிந்து கொண்டனர்?

Answer: உள்ளத்தில் ஏற்பட வேண்டும் என்று

5. ஜென் என்னும் ஜப்பானிய சொல்லுக்கு பொருள் என்ன?

Answer: தியானம் செய்

6. ஜென் சித்தனையாளர் எந்த மதத்தை சார்ந்த துறுவியர்?

Answer: புத்த மதம்

7. ஜென் சித்தனையாளர் பெரும்பாலும் எந்தெந்த நாடுகளில் வாழ்ந்து வந்தனர்?

Answer: சீனா, ஜப்பான்

1

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்