1. அணி என்னும் சொல்லுக்கு பொருள் என்ன?
Answer: அழகு
2. ஒரு செய்யுளைச் சொல்லலும் பொருளாலும் அழகு பெறச் செய்தலை ----- என்பர்?
Answer: அணி
3. "அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை "என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி எது?
Answer: உவமை அணி
4. ஒரு பாடலில் உவமையும், உவமேயமும் வந்து உவம உருபு வெளிப்படையாக வந்தால் அது ----- ஆகும்?
Answer: உவமை உறுப்பு
5. உவமை உருபுகள் எவை?
Answer: போல, புரைய, அன்ன, இன்ன, அற்று, இற்று, மான, கடுப்பு, ஒப்ப, உறழ
6. "தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத்து ஊறும் அறிவு" என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி எது?
Answer: எடுத்துக்காட்டு உவமை அணி
7. உவமை ஒரு தொடராகவும் உவமேயம் ஒரு தொடராகவும் வந்து உவம உருபு மறைந்து வந்தால் அது எது?
Answer: எடுத்துக்காட்டு உவமை அணி
8. "மாலை வெயிலில் மழைத்தூறல் பொன்மழை பொழிந்ததுபோல் தோன்றியது" என்ற தொடரில் பயின்று வந்த அணி எது?
Answer: இல்பொருள் உவமை அணி
9. "காளை கொம்பு முளைத்த குதிரை போலப் பாய்ந்து வந்தது" என்ற தொடரில் பயின்று வந்த அணி எது?
Answer: இல்பொருள் உவமை அணி
10. உலகில் இல்லாத ஒன்றை உவமையாகக் கூறுவதை ----- என்பர்?
Answer: இல்பொருள் உவமை அணி
11. civilization ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?
Answer: நாகரீகம்
12. folklore ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?
Answer: நாட்டுப்புறவியல்
13. harvest ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?
Answer: அறுவடை
14. irrigation ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?
Answer: நீர்ப்பாசனம்
15. foreigner ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?
Answer: அயல்நாட்டினர்
16. agriculture ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?
Answer: வேளாண்மை
17. poet ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?
Answer: கவிஞர்
18. paddy ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?
Answer: நெற்பயிர்
19. cultivation ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?
Answer: பயிரிடுதல்
20. agronomy ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?
Answer: உழவியல்
1