7 ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம் - அறம்-தத்துவம்-சிந்தனை - இயல் எட்டு - ஒப்புரவு-ஒழுகு - புதுமை-விளக்கு

  Play Audio

1. "வைகயம் தகளியா வார்கடலே நெய்யாக" எனத் தொடங்கும் பாடலை இயற்றியவர் யார்?

Answer: பொய்கை ஆழ்வார்

2. "சுடர்ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை" என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?

Answer: பொய்கை ஆழ்வார்

3. வையகம் என்பதன் பொருள் என்ன?

Answer: உலகம்

4. வெய்ய என்பதன் பொருள் என்ன?

Answer: வெப்பக்கதிர் வீசும்

5. சுடர்ஆழியான் என்பதன் பொருள் என்ன?

Answer: ஒளிவிடும் சக்கரத்தை உடைய திருமால்

6. இடர்ஆழி என்பதன் பொருள் என்ன?

Answer: துன்பக்கடல்

7. சொல் மாலை என்பதன் பொருள் என்ன?

Answer: பாமாலை

8. பூமியை அகல்விளக்காகவும், ஒலிக்கின்ற கடலை நெய்யாகயும், வெப்பக்கதிர் வீசும் கதிரவனை சுடராகவும் கொண்டவன் யார்?

Answer: திருமால்

9. பொய்கை ஆழ்வார் எங்கு பிறந்தார்?

Answer: காஞ்சிபுரத்திற்கு அருகில் திருவெஃகா

10. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் உள்ள முதல் திருவந்தாதியை பாடியவர் யார்?

Answer: பொய்கையாழ்வார்

1

11. "அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக" எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் யார்?

Answer: பூதத்தாழ்வார்

12. தகளி என்பதன் பொருள் என்ன?

Answer: அகல்விளக்கு

13. ஞானம் என்பதன் பொருள் என்ன?

Answer: அறிவு

14. நாரணன் என்பதன் பொருள் என்ன?

Answer: திருமால்

15. பூதத்தாழ்வார் எங்கு பிறந்தார்?

Answer: சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில்

16. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் இரண்டாம் திருவந்தாதியை இயற்றியவர் யார்?

Answer: பூதத்தாழ்வார்

17. ஒரு பாடலின் இறுதி எழுத்தோ அசையோ, சொல்லோ அடுத்து வரும் பாடலுக்கு முதலாக அமைவதை ----- என்பர்?

Answer: அந்தாதி

18. அந்தம் என்றால் என்ன?

Answer: முடிவு

19. ஆதி என்றால் என்ன?

Answer: முதல்

20. அந்தாதி என்ன வகை இலக்கியம்?

Answer: சிற்றிலக்கியம்

21. திருமலைப் போற்றிப் பாடியவர்கள் எத்தனை பேர்?

Answer: 12 பேர்

2

22. ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு எது?

Answer: நாலாயிரத் திவ்யப் பிரபந்தம்

23. நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தை தொகுத்தவர் யார்?

Answer: நாதமுனி

24. முதலாழ்வார்கள் மொத்தம் எத்தனை பேர்?

Answer: மூன்று பேர் (பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்)

25. "இடம் ஆழி நீங்குகவே "இத்தொடரில் இடம் என்பதன் பொருள் என்ன?

Answer: துன்பம்

26. 'ஞானச்சுடர் ' என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக?

Answer: ஞானம் + சுடர்

27. இன்பு + உருகு என்பதனைச் சேர்த்தெழுதுக?

Answer: இன்புறுகு

28. பொருத்துக: அன்பு

Answer: நெய்

29. ஆர்வம்

Answer: தகளி

30. சிந்தை

Answer: விளக்கு

31. ஞானம்

Answer: இடுதிரி

3

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்