7 ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம் - மனிதம்-ஆளுமை - இயல் ஒன்பது - மானுடம்-வெல்லும் - ஆகுபெயர்

  Play Audio

1. ஒன்றன் பெயர் அதனைக் குறிக்காமல் அதனோடு தொடர்புடைய வேறு ஒன்றிற்கு ஆகி வருவது ----- எனப்படும்?

Answer: ஆகுபெயர்

2. ஆகுபெயர் எத்தனை பெயர்ச்சொற்களில் வரும்?

Answer: ஆறு வகை (பொருள், இடம், காலம், சினை, பண்பு, தொழில்)

3. பொருளின் பெயர் அதன் சினையாகிய உறுப்புக்கு ஆகிவருவது ----- எனப்படும்?

Answer: பொருளாகுபெயர்

4. பொருளாகுபெயரின் வேறு பெயர் என்ன?

Answer: முதலாகு பெயர்

5. பொருளாகு பெயர்க்கு உதாரணம் தருக?

Answer: மில்லிகை சூடினாள்

6. இடவாகு பெயர்க்கு உதாரணம் தருக?

Answer: சடுகுடு போட்டியில் தமிழ்நாடு வெற்றி பெற்றது

7. கலாவாகு பெயர்க்கு உதாரணம் தருக?

Answer: திசம்பர் சூடினாள்

8. சினையாகு பெயர்க்கு உதாரணம் தருக?

Answer: தலைக்கு ஒரு பலம் கொடு

9. பண்பாகு பெயர்க்கு உதாரணம் தருக?

Answer: இனிப்பு தின்றான்

10. தொழிலாகு பெயர்க்கு உதாரணம் தருக?

Answer: பொங்கல் உண்டால்

1

11. இரட்டையாக இணைந்து வந்து, பிரித்தால் தனிப்பொருள் தராத சொற்கள் ----- என்பர்?

Answer: இரட்டைக்கிளவி

12. இரட்டைக்கிளவிக்கு உதாரணம் தருக?

Answer: விறுவிறு, கலகல, மளமள

13. அச்சம், விரைவு, சினம் போன்ற காரணங்களால் ஒரு சொல் ஒன்றுக்கு மேற்பட்ட முறை தொடர்ந்து வருவதை ----- என்பர்?

Answer: அடுக்குத்தொடர்

14. அடுக்குத்தொடர் உதாரணம் தருக?

Answer: பாம்பு பாம்பு பாம்பு, பிடி பிடி பிடி

15. ----- ல் உள்ள சொற்களைப் தனித்தனியே பிரித்து பார்த்தாலும் அவற்றுக்கு பொருள் உண்டு?

Answer: அடுக்குத்தொடரில்

16. ----- யைப் பிரித்தால் அது பொருள் தராது?

Answer: இரட்டைக்கிளவி

17. அடுக்குத் தொடரில் ஒரே சொல் ----- முறை வரை வரும்?

Answer: இரண்டு முதல் நான்கு

18. இரட்டைக்கிளவியில் ஒரு சொல் ----- முறை மட்டுமே வரும்?

Answer: இரண்டு

19. அடுக்குத் தொடரில் சொற்கள் ----- நிற்கும்?

Answer: தனித்தனியே

20. இரட்டைக்கிளவியில் சொற்கள் ----- நிற்கும்?

Answer: இணைந்தே

21. அடுக்குத் தொடர் ----- பொருள்கள் காரணமாக வரும்?

Answer: விரைவு, வெகுளி, உவகை, அச்சம், அவலம்

22. இரட்டைக்கிளவி ----- அடைமொழியாகக் குறிப்புப் பொருளில் வரும்?

Answer: வினைக்கு

23. பொருளின் பெயர் அதன் உறுப்புக்கு ஆகி வருவது ----- என்பர்?

Answer: பொருளாகு பெயர்

2

24. இந்த வேலையை முடிக்க ஒரு கை குறைகிறது என்பது என்ன ஆகுபெயர்?

Answer: சினையாகு பெயர்

25. மழை சடசடவெனப் பெய்தது இத்தொடரில் அமைந்துள்ளது எது?

Answer: இரட்டைக்கிளவி

26. அடுக்குத் தொடரில் ஒரே சொல் ----- முறை வரை அடுக்கி வரும்?

Answer: நான்கு

27. religion ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?

Answer: சமயம்

28. simplicity ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?

Answer: எளிமை

29. charity ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?

Answer: ஈகை

30. dignity ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?

Answer: கண்ணியம்

31. doctrine ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?

Answer: கொள்கை

32. philosophy ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?

Answer: தத்துவம்

33. integrity ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?

Answer: நேர்மை

34. sincerity ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?

Answer: வாய்மை

3

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்