8 ஆம் வகுப்பு - முதல் பருவம் - மொழி - இயல் ஒன்று - தமிழ்-இன்பம் - தமிழ்மொழி-வாழ்த்து

  Play Audio

1. "வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே" என்ற பாடல் வரியை பாடியவர் யார்?

Answer: பாரதியார்

2. "எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி என்றென்றும் வாழியவே" என்ற பாடல் வரியை பாடியவர் யார்?

Answer: பாரதியார்

3. நிரந்தரம் என்பதன் பொருள் என்ன?

Answer: காலமும் முழுமையும்

4. வைப்பு என்பதன் பொருள் என்ன?

Answer: நிலப்பகுதி

5. சூழ்கலி என்பதன் பொருள் என்ன?

Answer: சூழ்ந்துள்ள அறியாமை இருள்

6. வண்மொழி என்பதன் பொருள் என்ன?

Answer: வளமிக்கமொழி

7. இசை என்பதன் பொருள் என்ன?

Answer: புகழ்

8. தொல்லை என்பதன் பொருள் என்ன?

Answer: பலமை, துன்பம்

9. கவிஞர், எழுத்தாளர், இதழாளர், சமூகச் சீர்திருத்தச் சிந்தனையாளர், விடுதலைப் போராட்ட வீரர் எனப் பன்முக ஆற்றல் கொண்டவர் யார்?

Answer: சி. சுப்பிரமணிய பாரதியார்

10. இந்தியா, விஜயா முதலான இதழ்களை நடத்தி விடுதலைப் போருக்கு வித்திட்டவர் யார்?

Answer: பாரதியார்

1

11. சந்திரிகையின் கதை, தராசு உள்ளிட்ட உரைநடை நூல்களை எழுதியவர் யார்?

Answer: பாரதியார்

12. வசனக்கவிதையும் சீட்டுக்கவிகளையும் எழுதிவர் யார்?

Answer: பாரதியார்

13. சிந்துக்குத் தந்தை செந்தமிழ்த் தேனீ, புதிய அறம் பாட வந்த அறிஞன், மறம் பாட வந்த மறவன் என்று புகழப்பட்டவர் யார்?

Answer: பாரதியார்

14. பாரதியாரை சிந்துக்குத் தந்தை, செந்தமிழ்த் சீர்காக்கும் என்ற கவிதையை இயற்றியவர் யார்?

Answer: பாரதிதாசன்

15. மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல் என்ன?

Answer: வைப்பு

16. என்றென்றும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக?

Answer: என்று + என்றும்

17. வானமளந்தது என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக?

Answer: வானம் + அளந்தது

18. அறிந்தது + அனைத்தும் என்பதனைச் சேர்த்து எழுதுக?

Answer: அறிந்தனைத்தும்

19. வானம் + அறிந்த என்பதனைச் சேர்த்து எழுதுக?

Answer: வானமறிந்த

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்