7 ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம் - மனிதம்-ஆளுமை - இயல் ஒன்பது - மானுடம்-வெல்லும் - கண்ணியமிகு-தலைவர்

  Play Audio

1. கண்ணியமிகு தலைவர் யார்?

Answer: முகமது இஸ்மாயில்

2. காயிதே மில்லத் காந்தியடிகளின் எந்த போராட்டத்தில் கலந்து கொண்டார்?

Answer: ஒத்துழையாமை இயக்கம்

3. காயிதே மில்லத் எந்தக் கல்லூரியில் படித்தார்?

Answer: திருச்சி தூயவளனார் கல்லூரி

4. காயிதே மில்லத் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு எதைப் பயன்படுத்தினார்?

Answer: பேருந்து மற்றும் தொடர் வண்டி

5. "மணக்கொடை வாங்கும் திருமணங்களில் கலந்து கொள்ள மாட்டேன்" என்று கூறியவர் யார்?

Answer: காயிதே மில்லத்

6. "பழமையான மொழிகளிலே ஒன்றைத்தான் ஆட்சிமொழி ஆக்க வேண்டும் என்றால், அது தமிழ்மொழிதான் என்று உறுதியாக சொல்வேன்" என்று கூறியவர் யார்?

Answer: காயிதே மில்லத்

7. இந்தியா விடுதலை பெற்ற பிறகு தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று கூறியவர் யார்?

Answer: காயிதே மில்லத்

8. இந்தியா, சீனா போர் எந்த ஆண்டு நடைபெற்ற ஆண்டு எது?

Answer: 1962

9. இந்தியா, சீனா போரின் போது இந்தியா பிரதமராக இருந்தவர் யார்?

Answer: ஜவஹர்லால் நேரு

10. தன் ஒரு மகனை போருக்கு அனுப்ப நேருவுக்கு கடிதம் எழுதியவர் யார்?

Answer: காயிதே மில்லத்

11. காயிதே மில்லத்தின் இயற்பெயர் என்ன?

Answer: முகம்மது இசுமாயில்

1

12. முகமது இஸ்மாயிலை மக்கள் எவ்வாறு அன்புடன் அழைத்தனர்?

Answer: காயிதே மில்லத்

13. காயிதே மில்லத் என்னும் அரபுச் சொல்லின் பொருள் என்ன?

Answer: சமுதாய வழிகாட்டி

14. காயிதே மில்லத் சென்னை சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலம் எது?

Answer: 1946முதல் 1952வரை

15. இந்திய அரசியலமைப்பு உருவாக்க குழுவின் உறுப்பினராக இருந்தவர் யார்?

Answer: காயிதே மில்லத்

16. தமிழக அரசியல் வானில் கவ்வியிருந்த காரிருளை அகற்ற வந்த ஒளிக்கதிராகக் காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் அவர்கள் திகழ்கிறார் என கூறியவர் யார்?

Answer: அறிஞர் அண்ணா

17. இப்படிப்பட்ட தலைவர் கிடைப்பது அரிது, அவர் நல்ல உத்தமமான மனிதர் என காயிதே மில்லத்தை பாராட்டியவர் யார்?

Answer: தந்தை பெரியார்

18. "கல்வி மிகுந்திடில் கழிந்திடும் மடமை" என்ற முதுமொழிக்கு ஏற்பக் கல்வி நிறுவனங்களை உருவாக்க நினைத்தவர் யார்?

Answer: காயிதே மில்லத்

19. திருச்சியில் ஜமால் முகம்மது கல்லூரி, கேரளாவில் ஃபரூக் கல்லூரி ஆகியவற்றை தொடங்க காரணமாக இருந்தவர் யார்?

Answer: காயிதே மில்லத்

20. காயிதே மில்லத் என்னும் அரபுச் சொல்லுக்குச் ----- என்பது பொருள்?

Answer: சமுதாய வழிகாட்டி

2

21. விடுதலைப் போராட்டத்தின்போது காயிதே மில்லத் ----- இயக்கத்தில் கலந்து கொண்டார்?

Answer: ஒத்துழையாமை

22. காயிதே மில்லத் தமிழ்மொழியை அட்சிமொழியாக்க வேண்டும் என்று பேசிய இடம் எது?

Answer: நாடாளுமன்றம்

23. 'எதிரொலித்தது 'என்னும் சொல்லைப் பிரித்து எழுததுக?

Answer: எதிர் + ஒலித்தது

24. முதுமை + மொழி என்பதனைச் சேர்த்தெழுதுக?

Answer: முதுமொழி

3

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்