8 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - கலை-அழகியல்-பண்பாடு - இயல் ஐந்து - குழலினிது-யாழினிது - தொகைநிலை-தொகாநிலைத்-தொடர்கள்

  Play Audio

1. ஓர் எழுத்து தனித்து நின்றோ, பல எழுத்துக்கள் தொடர்ந்து நின்றோ பொருள் தருவது?

Answer: சொல் எனப்படும்

2. சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தருவது?

Answer: சொற்றோடர் அல்லது தொடர்

3. இரு சொற்களுக்கு இடையில் வேற்றுமை உருபுகளோ வினை பண்பு முதலியவற்றின் உருபுகளோ தொக்கி (மறைந்து) வருமானால் அது?

Answer: தொகைநிலைத் தொடர்

4. தொகைநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?

Answer: 6 வகைப்படும்

5. ஒரு தொடரில் வேற்றுமை உருபும் அதன் பொருளை விளக்கும் சொல்லும் (பயன்) மறைந்து வருவது?

Answer: உருபும் பயனும் உடன்தொக்கத் தொகை

6. காலம் காட்டும் இடைநிலையும், பெயரெச்ச விகுதியும் மறைந்து வரும் பெயரெச்சத்தை ----- என்பர்?

Answer: வினைத்தொகை

7. பண்புப் பெயருக்கும் அது தழுவி நிற்கும் பெயர்ச்ச்சொல்லுக்கும் இடையே ஆன, ஆகிய என்னும் பண்புருபுகள் மறைந்து வருவது?

Answer: பாண்புத்தொகை

8. சிறப்புப்பெயர் முன்னும் பொதுப்பெயர் பின்னும் நிற்க, இடையில் ஆகிய என்னும் பண்புருபு மறைந்து வருதை ----- என்பர்?

Answer: இருபெயரொட்டுப் பண்புத்தொகை

1

9. உவமைக்கும் உவமேயத்துக்கும் இயையில் போல, போன்ற நிகர, அன்ன முதலிய உவம உருபுகள் ஒன்று மறைந்து வருவது?

Answer: உவமத்தொகை

10. சொற்களுக்கு இடையிலும், இறுதியிலும் உம் என்னும் இடைச்சொல் மறைந்து நின்று பொருள் தருவதை ----- என்பர்?

Answer: உம்மைத்தொகை

11. ஒன்றுக்கும் மேற்பட்ட சொற்களில் உம் என்னும் உருபு வெளிப்பட வருவது ----- எனப்படும்?

Answer: எண்ணும்மை

12. வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மை ஆகிய தொகைநிலைத் தொடர்களுள், அவை அல்லாத வேறு பிற சொற்களும் மறைந்து வருவது?

Answer: அன்மொழித்தொகை

13. ஒரு தொடரில் இரு சொற்கள் வந்து அவற்றின் இடையில் எச்சொல்லும் எவ்வுருபும் மறையாமல் நின்று பொருள் உணர்த்தினால் அதனைத் ----- என்பர்?

Answer: தொகாநிலைத் தொடர்

14. தொகாநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?

Answer: ஒன்பது வகை

15. ஒரே சொல் பலமுறை அடுக்கி வருவது?

Answer: அடுக்குத்தொடர்

16. சொற்களுக்கு இடையே வேற்றுமை உருபு மறைந்து வருவது?

Answer: வேற்றுமைத்தொகை

17. செம்மரம் என்னும் சொல் ----- த்தொகை?

Answer: பண்புத்தொகை

18. கண்ணா வா என்பது ----- த் தொடர்?

Answer: விளித் தொடர்

2

19. முல்லை நில மக்கள் எதில் வல்லவர்?

Answer: ஆயர்கள் குழல் ஊதுவதில்

20. முல்லை நில மக்கள் பற்றிக் கூறியவர் யார்?

Answer: திருப்பதிகத்தில் சம்மந்தர்

21. crafts ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

Answer: கைவினைப்பொருட்கள்

22. flute ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

Answer: புல்லாங்குழல்

23. drum ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

Answer: முரசு

24. basketry ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

Answer: கூடைமுடைதல்

25. knitting ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

Answer: பின்னுதல்

26. horn ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

Answer: கொம்பு

27. artisan ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

Answer: கைவினைஞர்

28. rite ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

Answer: சடங்கு

3

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்