8 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - கல்வி - இயல் நான்கு - கல்வி-கரையில - வேற்றுமை

  Play Audio

1. பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்தும் முறையை ----- என்பர்?

Answer: வேற்றுமை

2. பெயர்ச்சொல்லுடன் இணைக்கப்படும் அசைகளை ----- என்று கூறுவர்?

Answer: வேற்றுமை உருபுகள்

3. சில இடங்களில் உருபுகளுக்குப் பதிலாக முழுச்சொற்களே வேற்றுமை உருபாக வருவதும் உண்டு. அவற்றைப் ----- என்பர்?

Answer: சொல்லுருபுகள்

4. வேற்றுமை உருபுகள் இடம் பெற்றுள்ள தொடர்களை?

Answer: வேற்றுமைக் தொடர்கள் என்பர்

5. வேற்றுமை உருபுகள் இடம் பெற வேண்டிய இடத்தில் அஃது இடம்பெறாமல் மறைந்திருந்து பொருள் தந்தால் அதனை ----- என்பர்?

Answer: வேற்றுமைத் தொகை

6. வேற்றுமை எத்தனை வகைப்படும்?

Answer: எட்டு (அவை) முதல் வேற்றுமை, இரண்டாம் வேற்றுமை, மூன்றாம் வேற்றுமை நான்காம் வேற்றுமை, ஐந்தாம் வேற்றுமை, ஆறாம் வேற்றுமை, ஏழாம் வேற்றுமை, எட்டாம் வேற்றுமை

7. முதல் வேற்றுமைக்கும், எட்டாம் வேற்றுமைக்கு?

Answer: உருபுகள் இல்லை

8. இரண்டாம் வேற்றுமை முதல் ஏழாம் வேற்றுமை முடிய ஆறு வேற்றுமைக்கு?

Answer: உருபுகள் உண்டு

1

9. எழுவாயுடன் வேற்றுமை உருபுகள் எதுவும் இணையாமல் எழுவாய் தனித்து நின்று இயல்பான பொருளை தருவது?

Answer: முதல் வேற்றுமை

10. இரண்டாம் வேற்றுமை உருபு எது?

Answer: ஐ

11. இரண்டாம் வேற்றுமைக்கு எடுத்துக்காட்டு தருக?

Answer: கபிலர் பரனாரைப் புகழ்ந்தார் கபிலரைப் பரணர் புகழ்ந்தார்

12. இரண்டாம் வேற்றுமையின் மற்றோரு பெயர் என்ன?

Answer: செயப்படுபொருள் வேற்றுமை

13. இரண்டாம் வேற்றுமை எத்தனை பொருள்களில் வரும்?

Answer: ஆறு

14. மூன்றாம் வேற்றுமை உருபுகள் எவை?

Answer: ஆல், ஆன், ஓடு, ஓடு

15. கருவிப் பொருள் எத்தனை வகைப்படும்?

Answer: இருவகைப்படும் (முதற்கருவி, துணைக்கருவி)

2

16. நான்காம் வேற்றுமை உரிய உருபு எது?

Answer: கு

17. பெயர்ச்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவது ----- ஆகும்?

Answer: வேற்றுமை

18. எட்டாம் வேற்றுமை ----- வேற்றுமை என்று அழைக்கப்படுகிறது?

Answer: விளி

19. உடனிகழ்ச்சிப் பொருளில் ----- வேற்றுமை வரும்?

Answer: மூன்றாம்

20. 'அறத்தான் வருவதே இன்பம்' - இத்தொடரில் ----- வேற்றுமை பயின்று வந்துள்ளது?

Answer: மூன்றாம்

21. "மலர் பானையை வனைந்தாள்" - இத்தொடர் ----- பொருளைக் குறிக்கிறது?

Answer: ஆக்கல்

3

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்