8 ஆம் வகுப்பு - முதல் பருவம் - இயற்கை - இயல் இரண்டு - ஈடில்லா-இயற்கை - ஓடை

  Play Audio

1. "ஓடை ஆட உள்ளம் துண்டுதே - கல்லில் உருண்டு தவழ்ந்து நெளிந்து பாயும்" - என்ற பாடல் வரியை பாடியவர் யார்?

Answer: வாணிதாசன்

2. தூண்டுதல் என்பதன் பொருள் என்ன?

Answer: ஆர்வம் கொள்ளுதல்

3. ஈரம் என்பதன் பொருள் என்ன?

Answer: இரக்கம்

4. முழவு என்பதன் பொருள் என்ன?

Answer: இசைக்கருவி

5. பயிலுதல் என்பதன் பொருள் என்ன?

Answer: படித்தல்

6. நாணம் என்பதன் பொருள் என்ன?

Answer: வெட்கம்

7. சென்சொல் என்பதன் பொருள் என்ன?

Answer: திருந்திய சொல்

8. நன்செய் என்பதன் பொருள் என்ன?

Answer: நிறைந்த நீர்வளத்தோடு பயிர்கள் விளையும் நிலம்

9. புன்செய் என்பதன் பொருள் என்ன?

Answer: குறைந்த நீரால் பயிர்கள் விளையும் நிலம்

10. வள்ளைப்பாடடு என்பதன் பொருள் என்ன?

Answer: நெல்குத்தும்போது பாடப்படும் பாடல்

1

11. தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று புகழப்படுபவர் யார்?

Answer: வாணிதாசன்

12. வாணிதாசனின் இயற்பெயர்?

Answer: அரங்கசாமி என்ற எத்திராசலு

13. வாணிதாசன் யாரின் மாணவர்?

Answer: பாரதிதாசன்

14. கவிஞரேறு, பாவலர்மணி போன்ற சிறப்புப்பெயர் பெற்றவர் யார்?

Answer: வாணிதாசன்

15. பிரேஞசு அரசு யாருக்கு செவாலியர் விருது வழங்கியது?

Answer: வாணிதாசன்

16. தமிழச்சி, கொடிமுல்லை, தொடுவானம், எழிலோவியம் குழந்தை இலக்கியம் போன்ற நூல்களை எழுதியவர் யார்?

Answer: வாணிதாசன்

17. ஓடை என்னும் பாடல் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?

Answer: தொடுவானம்

18. பள்ளிக்கு சென்று கல்வி ----- சிறப்பு?

Answer: பயிலுதல்

19. சென்சொல் மாதரின் வள்ளைப்பாட்டிற்குகேற்ப மீட்டுவது?

Answer: ஓடை

20. நன்செய் - என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

Answer: நன்மை + செய்

2

21. 'நீளுழைப்பு' - என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

Answer: நீள் + உழைப்பு

22. சீருக்கு + ஏற்ப - என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?

Answer: சீருக்கேற்ப

3

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்